புதன், நவம்பர் 12, 2008

வாமுகோமு‍ - அறிமுகம்

வணக்கம் ,


வா.மு.கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் விஜய மங்கலத்திற்கு அருகாமையிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். 90களின் ஆரம்பத்தில் " நடுகல்" என்கிற சிற்றிதழை நடத்தியவர். தற்போது ராசமைந்தன் என்கிற புனைபெயரில் "இறக்கை" என்கிற இருமாத இதழை நடத்திவருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் பல தரப்பட்ட சிறுகதைகளை 90களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு, அழுவாச்சி வருதுங்சாமி என்கிற சிறுகதை தொகுப்பும், உயிர்மை பதிப்பக வெளியீடாக மண்பூதம் என்கிற சிறுகதை தொகுப்பும் வெளிவந்து பரவலான கவனம் பெற்றது. கள்ளி இவருடைய முதல் நாவல், 2008-ல் "அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் "அகரம் வெளியீடு.2008 ஜூன்ல் தவளைகள் குதிக்கும் வயிறு உயிர்எழுத்து வெளியிடு

"சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும்" குறிப்பிடத்தக்கவை.Post Comment

கருத்துகள் இல்லை: