செவ்வாய், பிப்ரவரி 10, 2009

வனக்கவிதைஉன் ஊருக்குச் செல்ல
இது தான் குறுக்கு வழி.
எப்போதும் போல்
போய்க்கொண்டிரு.
நெடுவே செல்கிறது
ஒற்றையடிப்பாதை.
முண்டியடித்துப் போக
ஜன நெரிசலுமில்லை.
தூரத்தில் யாருமில்லை.
அரவம் கேட்டு
பய ந்து போகும் சில
அணில்களும், பெயர்
தெரியா பறவைகளும் .
பயந்துதான் செல்லவேண்டி
இருக்கிறது இந்த பாதையில்.
ஆனாலும்‍‍‍‍ உன் ஊருக்கு
இது ஒன்றுதான் குறுக்கு வழி.
உனைப் பி்ன்தொடர்ந்து வரும்
ஊழிக்காற்று
உனைப்பற்றிய கவிதையை
வனத்தினுள் எழுதிப்பார்க்கிறது !
...

Post Comment

2 கருத்துகள்:

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

Xlent..

இரசிகை சொன்னது…

//
உனைப் பி்ன்தொடர்ந்து வரும்
ஊழிக்காற்று
உனைப்பற்றிய கவிதையை
வனத்தினுள் எழுதிப்பார்க்கிறது !
//
superb......