செவ்வாய், பிப்ரவரி 03, 2009

சாருவின் பாராட்டு


வேலி முட்டியும் வாரிசுகளும்

( சும்மா எதுகை மோனைக்காக இப்படித் தலைப்பு கொடுத்திருக்கிறேன். மற்றபடி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்).

வா.மு. கோமு , மனோஜ் இருவரையும் எனது எழுத்துலக வாரிசுகளாக முன்பே அறிவித்திருந்தேன். வா.மு. கோமு இளைஞர் என்றாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். எங்கோ ஈரோட்டுக்குப் பக்கத்தில் வாய்ப்பாடி என்ற சிறு கிராமத்தில் வாழ்பவர் என்பதால் கணினி அறிமுகமெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய தமிழில் என்னை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் வா.மு. கோமுதான். அவருடைய பல சிறுகதைத் தொகுப்புகள் , கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு சிறுகதைத் தொகுப்பும் , ஒரு நாவலும் உயிர்மை வெளியீடாகவும் வந்துள்ளது. ஏராளமாக எழுதுபவர். தமிழில் அடியேனுக்கு அடுத்த படியாக தணிக்கை செய்யாமல் எழுதும் ஒரே எழுத்தாளர் வா.மு. கோமு மட்டும் தான் என்பது என் கருத்து. (உடனே , ' குட்டிக் கதைகளில் தணிக்கை செய்யப் பட்டது என்று போட்டிருக்கிறாயே ? என்று கேட்கக் கூடாது. இந்த இணைய தளத்தை குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டி வந்தது. குட்டிக் கதைகள் புத்தகமாக வரும் போது எந்தத் தணிக்கையும் இருக்காது). ஆனால் வா.மு. கோமுவின் ' கள்ளி ' என்ற நாவல் எனக்குப் பிடிக்கவில்லை.

( நாவல் என்ற வடிவம் அவ்வளவு சுலபமானது அல்ல ; சிறுகதைகளில் சாதனை படைத்திருப்பவர்கள் கூட நாவலில் தோற்று விடுகிறார்கள். உடனடியாக நினைவுக்கு வருவது ஷோபா சக்தி. அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் தமிழின் பொக்கிஷம் ; ஆனால் நாவல் இரண்டுமே தேறாது).

அடுத்து , மனோஜ். எப்போதாவதுதான் எழுதுவார். நாவல் எழுதவில்லை. சிறுகதைகளும் கட்டுரைகளும்தான். இவருடைய சிறுகதைகளை தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் பாடமாகப் பயில வேண்டும் என்று சொல்லுவேன். வா.மு. கோமு , ஷோபா சக்தி , மனோஜ் என்ற இந்த மூவரின் சிறுகதைகளும் உலகத்தரமானவை. ஆனால் இப்போது பல்வேறு வலைப்பதிவுகளையும் பார்க்க்கும் போது எனக்கு வா.மு. கோமு , மனோஜ் தவிரவும் ஏராளமான வாரிசுகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து பூரித்துப் போனேன். அப்படி சமீபத்தில் பூரித்தது கென்னின் எழுத்துக்களைப் படித்து.

மேலும் படிக்க http://charuonline.com/june08/pp8.html


Post Comment

2 கருத்துகள்:

தவநெறிச்செல்வன் சொன்னது…

சாருவின் இந்த வாழ்த்துக்கள் மிகவும் முக்கியமானது. வாழ்த்துக்கள்

ஆனால் சாரு புதிதாக எழுதிய படித்ததில் பிடித்ததை நீங்கள் படிக்கவில்லையா?

குழப்பங்களை சரி செய்யலாமே

வாய்ப்பாடி குமார் சொன்னது…

ந்ன்றி , நண்பரே .

சாருவிற்க்கு பதில் நம்மிடம் உள்ளது.

பிறகு அதை அளிப்போம்