செவ்வாய், பிப்ரவரி 10, 2009

நீ சௌக்கியமா ?

ஒரு நாள் சாவுகாசமாய்
உன்னோடு உட்கார் ந்து
பேச திட்டமிருக்கிறது என்னுள்.
சமயம்தான் வாய்க்கவில்லை.
ஊர் மாரியம்மன் திருவிழாவிற்க்கு
உனது ஊட்டுக்காரரோடு வ ந்து
சாமி கும்பிட்டு போனதாய்
சின்னமுத்து கூறினான்.

மேலும் அவன் கூறுகையில்
பழைய உனது தேஜஸ் இல்லையெனவும்
உனது ஊட்டுக்காரர் பொறத்தே
நீ ஒரு பெட்டிப்பாம்பு மாதிரிதான்
காட்சியளித்தாய் எனவும், வயிறு
புடைக்கவில்லை, தப்பட்டையாகத்தான்
இருந்ததெனவும் கூறினான்.

மழைக்குகூட பள்ளிக்கூடப்பக்கம்
ஒதுங்கியிராத எனது ஊட்டுக்காரி
எனது துடையிலிருக்கும் சாந்தி என்கிற‌
உனது பெயர் பற்றி எதுவும் கதைப்பதில்லை.
உனது ஊட்டுக்காரர் உனது
துடையிலிருக்கும் முருகசாமி என்கிற‌
எனது பெயர் பற்றி
உனையொன்றும் வினவவில்லையா ?....

Post Comment

2 கருத்துகள்:

yathra சொன்னது…

கேட்டிருப்பாங்க, எல்லோருக்குமே கல்யாணத்துககு முன்னாடி இப்படி அனுபவங்கள் இருக்கிறது தானே

இரசிகை சொன்னது…

vali...........