செவ்வாய், பிப்ரவரி 10, 2009

திருட்டு மாங்கா

உனக்கு போன் செய்வதில்
இப்போது சிக்கல் இருக்கிறது.
உனது கணவன் இரவுப் பணிக்கு
சென்றிருப்பானா அல்லது
பகல் நேரப் பணி முடித்து
திரும்பி விட்டானா தெரியவில்லை..
இரு ந்தாலும் இது ஒன்றும்
பெரிய பிரச்சினை இல்லைதான்..
உன்னைப்பொருத்தவரை!
ஆமாண்டி,தெரியலடி,ஆவாதடி
என உனது தோழியிடம்
பேசுவதுபோல, நான் ஒன்றுபேச
நீ ஒன்று பேசி வைத்துவிடுவாய்.
உனக்கு போன் செய்வதிலான சிக்கல்
"மனைவியின் கள்ளக்காதலனை
வெட்டிக்கொன்ற கணவன் "
என்கிற செய்தியை தினசரி ஒன்றில்
படித்ததிலிருந்துதான் !
இதற்க்கெல்லாம் போயா பயம் ?
உள் மனது அவ்வப்போது
தட்டிக்கொடுத்தாலும்
திருட்டு மாங்காய்க்கு ருசி
தனிதான் கண்மணி.
எப்படியோ மனதை திடப்படுத்தி
உனக்கு ரிங் அடித்தேன்.
"இன்னிக்குத்தான் குளித்தேன்
நாலு நாளு போவட்டும் "
என்கிறாய் !
போச்சாது போ!
....

Post Comment

1 கருத்து:

yathra சொன்னது…

திருட்டு மாங்காய்க்கு ருசி
தனிதான் கண்மணி.
எப்படியோ மனதை திடப்படுத்தி
உனக்கு ரிங் அடித்தேன்.
"இன்னிக்குத்தான் குளித்தேன்
நாலு நாளு போவட்டும் "
என்கிறாய் !
போச்சாது போ!


இந்த மாதிரி அனுபவங்களின் ருசி தனிதான்