செவ்வாய், ஏப்ரல் 14, 2009

முகத்துக்கு முகம்.

பக்கம் பார்த்துப்போ,
பேசித்தீர்வதில்லை பிரச்சினை
பேசியன கிடக்கட்டும்
பேசுவன கிடக்கின்றன‌
கொடு முதுகை !
தின்று வெடிக்காதே
படித்து வெடி
சிரித்த பின் அழு
அழுத பின் சிரி
ஈக்வல் பாயிண்ட்
தட் ஈஸ் லைப்.
அருகிலிருப்பன அத்துப்படி எனில்
அடுத்த கிளை தாவு.
மனதினுள் இருக்கு ஏகாந்தம்
தேடலை முடி
யோசனை சரிதான்
யோசித்துப்பார்.
யோசித்தனவற்றை விட்டுவிடேன்.
ஆக்ரோசம் மருட்சியினால்
கவிதைகளில் ஆடைகளை அழி
சுதந்திரத்தைப் போடு
மக்கள் உன் பக்கம் ?
நம் பக்கமா?
அவரவர் பக்கம்.
அது அது அதுஅது பாட்டுக்கு.
வழக்கத்தை மாற்று
பழையன கழியும்.
May be ...
குடைகளின் கீழ் நிழல் !
முகத்துக்கு முகம்
ஸ்மைல் ப்ளீஸ்.

கவிதா சரண் (வா.மு.கோமு)
(அக் '1994.)

..

Post Comment