செவ்வாய், ஏப்ரல் 14, 2009

கவிதைகள்

தலை நிமிர்ந்தே நட‌
குனிந்து பார்த்தேன்
காலடி மண்

***

ஒற்றை மேகத்துள்
ஒளிந்த இதயம்
நிலா

***

தேர்ந்த படைவீர அணிவகுப்பு
சர்க்கரை மூட்டை செல்லும்
எறும்புகள்.

***

தீடீரென வீசிய காற்று
குழந்தை பொம்மைக்கு
அழும் குழந்தை

***

(சுகன் .மார்ச் 93)

Post Comment

1 கருத்து:

இரசிகை சொன்னது…

ஒற்றை மேகத்துள்
ஒளிந்த இதயம்
நிலா

********

தீடீரென வீசிய காற்று
குழந்தை பொம்மைக்கு
அழும் குழந்தை

pidichchirukku.........