புதன், ஜூன் 10, 2009

Top 10 Young Writters 2009 ஜூன் 10 ‍‍‍ ‍- ஜூலை 10.

1.எஸ். ராமகிருஷ்ணன்
(காட்டின் உருவம் சிறுகதை தொகுப்பிற்க்காகவும்,ஒருவேளை இவர்கள்
எல்லாரும் இறந்துவிட்டார்களோ,இவைகள் அஞ்சலிக்கட்டுரைகளோ என்று
எண்ணத் தகுந்த விதமாக உயிர்மை மாத இதழில் தொடர்ந்து ஒவ்வொரு
எழுத்தாளர்களைப் பற்றியும் இவர் எழுதிவரும் வாசகபர்வம் தொடருக்காகவும்.)


2.ஜெயமோகன்
(உயிர்மை இதழில் வந்த ஊமைச்செந்நாய் சிறுகதைக்காகவும், எல்லாருமே சொல்கிறார்கள் என்பதற்காக காடு நாவலுக்காகவும்.)

3.மனுஷ்யபுத்திரன்
(உயிர்மை மே,ஜூன் இதழ்களில் இவர் எழுதிய கவிதைகளுக்காக)

4.ஷாராஜ்.
(உயிர்மையிலிருந்து வெளிவராமல் இருக்கும் ஜீன்ஸ் ஆண்டாள் கவிதை தொகுப்பிற்காக)

5.மு.ஹரிகிருஷ்ணன்
(எனது சிஷ்யன் என்பதற்காகவும் ,மணல் வீடு என்கிற இலக்கிய இதழ் நடத்தி இலக்கியத்தைக்காப்பாற்றுவதற்க்காகவும்.)

6.வால்பையன்
(சனி, ஞாயிறு மட்டுமே குடிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதற்க்காகவும்,திடீரென குடியை விட்டுடலாமுன்னு பாக்குறேன் தலைவா
என்பதற்க்காகவும்.)


7.பொள்ளாச்சி கனகராஜன்
(பழைய சோறு கவிதை தொகுப்பிற்க்காகவும், இவரது இதழ்களில் எப்போதுமிருக்கும்புன்னகைக்காகவும்)

8.சுகிர்தராணி
(எதையுமே எழுதாமல் இருப்பதற்க்காகவும், இந்த வரிசையில் பெண்ணே
இல்லை என்பதற்க்காகவும்)


9.பாக்கியம் சங்கர்
(சென்னையை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி வந்த பிறகு இன்று
வரை பத்திரமாக பார்த்து வைத்திருப்பற்க்கும், ஏய் நாஷ்க்கரோ,துஷ் மூக்கா நாஷ்கரோ என்கிற உச்சரிப்பிற்க்கும்.)


10.கண்ணாயிரம் பெருமாள்
(என்னைக் கொன்று விடுவதாக கூறிக்கொண்டிருப்பற்க்கும் , " நானே ஒரு
ஒம்போது .... நான் எந்த பெண்ணைக் கெடுக்க முடியும் ? என்று கா.ரூ,கதை
பொஸ்தவத்தில் 349ம் பக்கம் ஒத்துக்கொண்டதிற்க்கும் ,இனிமேல் யாரையும்
வாரிசு என அறிவிக்கமாட்டேன் என்பதற்க்கும் ,சாவு பயம் வந்து ஜல்லியடிப்பதற்க்கும் ,இன்னும் 10 வருடத்தில் பெருமாளின் எழுத்துகள் அழிந்து விடும் என்பதற்க்கும்.)


********************

சமீபத்திய இறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

1. சி.மணி
2. அப்பாஸ்
3. சுகந்தி சுப்பிரமணியம்.
4. ராஜமார்த்தாண்டன்.

********************

விரைவில் ,


முனியாண்டி,பெருமாள்,முனியாண்டி,பெருமாள்.....
என்றும் அன்புடன் வாமுகோமு..


...

Post Comment

10 கருத்துகள்:

கார்த்திக் சொன்னது…

// திடீரென குடியை விட்டுடலாமுன்னு பாக்குறேன் தலைவா
என்பதற்க்காகவும்.//

எப்பவுமே திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் அவரு குடிய விட்டுருவாரு :-))

சாரு நிவேதிதா சொன்னது…

இந்த வரிசையில் எனது பெயர் இடம்பெராமல் இருப்பது த்மிழ் இலக்கிய உலககுக்கு ஏமாற்றமே

வால்பையன் சொன்னது…

//திடீரென குடியை விட்டுடலாமுன்னு பாக்குறேன் தலைவா
என்பதற்க்காகவும்.)//

ஓவர் போதையில் உளறுவதையெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டாம்!
மேலும் தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஏற்று கொண்டுள்ள நான் எவ்வாறு குடியை நிறுத்த முடியும்!

வால்பையன் சொன்னது…

//கண்ணாயிரம் பெருமாள்//

இப்படி ஒரு கேரக்டர் இந்தியாவுல திரியுதா!

குசும்பன் சொன்னது…

சரியான யூத் லிஸ்டில் தான் வால் பெயர் இடம் பெற்று இருக்கிறது!

வாழ்த்துக்கள் வால் அங்கிள்!!!

குசும்பன் சொன்னது…

//ஓவர் போதையில் உளறுவதையெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டாம்!//

அப்ப அறிவியலில் எடுத்துக்கலாமா அங்கிள்?

yathra சொன்னது…

மிக அருமையாக பட்டியலிட்டிருக்கிறீர்கள் :)

பெயரில்லா சொன்னது…

//கண்ணாயிரம் பெருமாள்//

இப்படி ஒரு கேரக்டர் இந்தியாவுல திரியுதா!


இந்த வரிசையில் எனது பெயர் இடம்பெராமல் இருப்பது த்மிழ் இலக்கிய உலககுக்கு ஏமாற்றமே

பெயரில்லா சொன்னது…

பேசாம எருமை மேய்ச்சுட்டு வாண்டுமாமா புஸ்தகம் படிச்சமாதிரியே இருந்திருக்கலாம்... இந்த பின்நவீனத்துவம் வந்து பொடனியைத் தள்ளுது...

பெயரில்லா சொன்னது…

கந்தசாமில ஒரு பாட்டு வருதுங்கண்ணா... குப்புசாமி, ‍கோயிந்தசாமி, முனுசாமி... எல்லாம் டூப்பு கந்தசாமிதான் டாப்புன்னு...
அதுமாரி ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஷாராஜ், கமிலி, ராசமைந்தன்... ‍இதெல்லாம் டூப்பு வாமுகோமுதான் டாப்பு...