புதன், ஜூலை 01, 2009

நேர் காணல் : கவிஞி கமலா.-தொடர்ச்சி


* சிற்றிதழ்களை நீங்கள் தேடிப் பிடித்தேனும் வாங்கி வாசித்து விடுகிறீர்கள். அவற்றிற்க்கு படைப்புகள் அனுப்புவதும் இல்லை. பேரிதழ்களில் ஒன்றிரண்டு எழுதுவதோடு சரி .திடீரென்று கனமான தொகுப்பில் வெடிக்கிறீர்கள்.. இதென்ன கெவுருத்தியா ?


சிற்றிதழ்களை பற்றி நான் பேசுவதில்லை.அவற்றில் நான் எழுதினால் நடத்துபவர்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள்.வெளி நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ? கவிதை வடிவம் எப்படி மாறி இருக்கிறது ? கிளிண்டி , ப்ளாஸ்ட்டபோல் , ஸ்காட்சி போன்ற லத்தீன் அமெரிக்க பெண்
கவிகளைப் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. இன்னும் பிச்சமூர்த்தி , வத்திக்குச்சி, சாரதி என்றே கூவுகிறார்கள். ஒரு படி மேலே போய் எழுதவேண்டாமா ? நான் அடி வாங்கி ஒரு பொசிஷனுக்கு வந்திருக்கேன். இடி தாங்கியா செயல்பட்டிருக்கேன். காலச்சுமை பதிப்பகத்தார்க்கு என்னை வித்துட்டேன்.

சிற்றிதழ்களுக்கு படைப்பு அனுப்பினால் முலையை மூலை என்று மாற்றி விடுவார்கள். கேட்டால் சாரி மேம் .. பிரிண்டிங்கில தப்பு நடந்துடுச்சு என்று
கூறுவார்கள். குறியில் நமைச்சல் என்று எழுதினால் , அதை அரிப்பு என்று மாற்றீவிடவா மேம் என்று ரிங் அடித்து கேட்பார்கள். இப்போ என் பெயரையே
கமலா என்று போடுவதற்க்கு பதிலா கலமா என்று போட்டுவிடுவார்கள். அதனால் அனுப்புவது இல்லை . உண்மை இதுதான்.


* *இந்தியாவில் மாநிலங்களாயினும் சரி , வெளி நாடுகளில் எந்த மூலை முடுக்கிலும் சரி பெரிய புஸ்தகத்தை திறந்தால் நீங்கள் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்து நிற்பதை காணமுடிகிறதே எப்படி ?

அதுக்கும் பாடுபடணும், சிரமப்படணும் .சின்ன ஏஜ்ல இருந்தே நான் ஊர் சுத்தி.தவிர என் காலும் ஒரு கெடையில் தங்காது.அதும்போகஇலக்கிய மறைவு வேலைகளை உன் கிட்ட ஓப்பன் பண்ண முடியாது. மேலிடம் கோவிச்சுக்கும் . இந்த மாதிரி கேள்வியை எங்க போயும் கேட்காதே.

*ஆவணப்படம் எடுக்கிறீங்க . எங்க கண்ணுக்கு ஒன்னும் சிக்க மாட்டீங்குதே ?

உங்க
கண்ணுக்கு எப்படி சிக்கும். எடுக்கிறோம்,வெளியிடுறோம் ,ஆனா இங்க இல்ல செக்கோஸ்லொவியாவுல.


*மேடை நாகரிகம் இல்லாமல் கூட்டத்தில் இருப்போரை ரெடியா ? தயாரா ? என்று பேசுகிறீர்களாமே !

மேடைப்பேச்சு சிலருக்கு வராது ! எனக்கும் மேடைப்பேச்சு வராது !ஆனா ஜமாளிக்கத் தெரியும் . தொன்மங்களைத் தேடி என்னோட ரெண்டு கணவர்கள் ஆசிய கண்டத்தைச் சுத்தப்போறதால ,முன்யோசனையோட தான் மேடை சுவராஸ்யத்திற்க்காக அப்படிப் பேசுறது.ரசிக்கிறவங்க ரசிக்கிறாங்க .என்னை மாதிரி அசிங்கமான முகமுடைய பெண்கள் பொது இடங்களில் கவனிக்கத்தக்கவரா மாறியே ஆகணுமுன்னு ஒரு இது வெச்சிருப்பாங்க , ஏன் எனக்கு மேலும் இரு அழகான கணவன்மார்கள் கிடைப்பதும் அதிர்ஸ்டந்தானே ! ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்து என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போதுதான் என் அசிங்க முகம் எனக்கே தெரியும் ,அதற்க்காக நான் குமுறிக் கொண்டு கிடப்பதில்லை .ஆனால் எங்களை அழகுபடுத்திக்கொள்ள பூவிலிருந்து ... பொட்டிலிருந்து ஜீன்ஸ் மிடிவரை சாதனங்கள் இருக்கிறது !.

*பெண் விடுதலை அடைந்து விட்டதாக உணர்கிறீர்களா ?ஆணிய விடுதலை வேண்டுமென்று வாய்ப்பாடியிலிருந்து ஒருவர் கத்தீட்டே இருக்காரே.. உங்களுக்கு கேட்டதா ?

இவ்ளோ தூரம் கேட்கவில்லை .கிணற்றுத்தவளை போல அங்கேயே கிடந்து சப்தமிடக்கூடாது .பெண் விடுதலையை நாங்கள் எளிமையாக பெற்றுவிடவில்லை.சரித்திரத்திரத்தை திரும்பிப்பார்க்க வேண்டும். ஆணிய விடுதலை என்னால் கொடுக்கமுடியாது.புவ்வாவுக்கு நாங்கள் பிறகு எங்கு செல்ல ? எங்கள் முட்டுச்சேலை , துணிமணிகளை யார் துவைப்பது? விடுதலை என்ற சமாச்சாரம் என்ன பொட்டிக்கடையிலா விற்கிறது ? செக்குவேரா மாதிரி அக்குவேரா ஆணிவேரா கஷ்டப்பட்டு வரணும். நோகாம நோம்பி கொண்டாட முடியாது ! இப்பத்தானே செக்குவாரே படத்தை பவ்வத்து ரூவாய்க்கி வித்துனு இருக்காங்க.

*ஆணிய விடுதலைக்காக தமிழகத்தில் புரட்சி வெடிக்கவேண்டுமா?

போடுங்க ரெவ்வெண்டு குண்டு. தமிழகத்துல புரட்சி வெடிச்சா ஆணிய விடுதலையும் கெடச்சிடும். அப்புறம் அந்த வாய்ப்பாடிக்காரரு நல்லா எழுதிட்டுருக்கான்னு சொல்லறாங்க , நான் வேணா என்னோட வாரிசுனு அறிவிச்சுடட்டுமா? ஆனா என்னையும் ,என்னோட எழுத்தையும் பட்டையா
நக்கல் பண்ணி படைப்பு எழுதுறானே ! பார்த்து எழுதச் சொல்லு நீ போயி .

2037,2038 வாக்குல அவனோட படைப்புகள் பத்தி நான் வேணா ஒரு பெரிய எழுதிடறேன். வணக்கம் . போய் வா இராசமைந்தா !


.... ****************** ******************** ..................................

Post Comment

3 கருத்துகள்:

யாத்ரா சொன்னது…

அண்ணா, உங்களிடம் பிடித்ததே, உங்களின் இந்தப் பகடி தான், அருமை.

வாய்ப்பாடி குமார் சொன்னது…

யாத்ரா மற்றும் வால்பையன் அவர்களுக்கு நன்றி ,

கி.ச.திலீபன் சொன்னது…

வயிறு வெடிக்கச் சிரிக்க வைக்கிறது இந்த நேர்காணல் உங்க கிண்டலுக்கு ஒரு சென்சார்போர்டு இல்லாம போச்சே! உங்களுக்காகவே இலக்கியத்தில் ஒரு சென்சார் போர்டு தொடங்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!