புதன், ஜூலை 01, 2009

நேர் காணல் : கவிஞி கமலா.


நேர் காணல் : கவிஞி கமலா.

கவிதை என்கிற மொழியின் அடுக்குகளில் நுழைந்து ,படிமங்களையும் , குறியீடுகளையும் குப்புறத்தள்ளி தன் உடலையே மொழியால் கூறுகளாக்கி கவிதையை வேறு ஒரு ரூபத்தில் வாசகர்களை தரிசிக்க வைத்தவர் கவிஞி கமலா. மொழியின் புனைவுச் சாத்தியப்பாடுகளை முதுமக்கள் தாழிக்களிலிருந்து கண்டெடுத்து வந்து உருவச் செழிப்போடு தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளை தந்து தீவிரமாக சூழலில் இயங்கிக்கொண்டுஇருப்பவர்.

வாழ்வின் துக்ககரமான நேரங்களிலும் தன் காமம் மற்றும் வேட்கை பற்றி தாள்களில் எழுதிச் செல்லும் கமலாவின் மொத்த கவிதைகளை தற்போது காலச்சுமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கும் வெளிச்சத்தில் பொத்தல் விழுந்த ஆணுறைகளைப் பற்றி எழுதிக்குவிக்கும் கவிமணம் இவரிடம் தவிர உலகின் எந்த முடுக்கிலும் இல்லாதது. உள் உலகத்தை வெளியிலும் ,வெளி உலகத்தை உள்ளிலும் எழுதும் கமலா சொற்களை கலைத்துப்போட்டு கூட்டாகச் சேர்க்கும் பணியினை ஒரு சாலைப்பணியாளரின் நேர்த்தியோடு செய்வதாகக் கூறுகிறார்.

இலக்கியச் சர்ச்சைககளிலும் , கருத்தரங்களிலும் பரபரப்பாக மா நகர வீதிகளில்
பேசப்படும் கவிஞி கமலா மலைகள் சூழ்ந்த கிராமம் ஒன்றில் தன் பண்னை வீட்டில் பதிமூன்று கணவர்களோடு இனிமையாக வாழ்ந்து வருகிறார்.பதிமூன்று பேரில் எழூ பேர் இலக்கிய உலகில் பின் நவீனத்துவத்துவத்தை கூறு போட்டு விற்க்கும் படைப்பாளிகள் என்பது இவருக்கு கூடுதல் பலம். சமீபத்தில் ஜான்‍- ஜானி-ஜனா என்கிற பெயர்களில் இவரது கணவர்கள் மூவரும் இணைந்து "புளியங்கா கவிதைகள்" என்கிற தொகுப்பை கொண்டு வந்துள்ளனர்.இவர்கள் ஏற்கனவே சாவு சார்ந்த கவிதைகளுக்காக ஒரு தொகுப்பும் கடல் வாழ் உயிரனங்களுக்காக ஒரு தொகுப்பும்,வான்,வான் சார்ந்த நட்சத்திரங்களுக்காக கொண்டு வந்தவர்கள்.

இவர்கள் மூவரும் தங்கள் மூளையை சிவந்த நிறமாக‌ மாற்றிக்கொண்டவர்கள். இவர்கள் பனானாவில் வளரும் முடிக்கற்றைகளைக்கூட சிவப்பு நிறத்தில் மாற்றிக் கொண்டு , கற்புடைய ஆண்மனின் பனானாவில் சிவப்பு நிற முடிக்கற்றைகள்தான் வளரும் என்ற பின் நவீனக்கோட்பாட்டை உறுதிபடக்கூறியவர்கள். பெண்ணின் பிறப்புறுப்பு வடிவத்தை அரிந்து வைத்த பூசணிக்காய்க்கு தமிழில் முதலாக ஒப்பீடு செய்து
ஆய்வு நடத்தியவர்கள்.

ராம் லக்சுமணன் என்கிற பெயரில் தொன்மங்களைத் தேடித்திரியும் இவர்கள் கவிஞி கமலாவின் 12 மற்றும் 13 கடைசி கணவர்கள் . இவர்கள் தங்கள் படைப்புகளில் பேய்களையும் , குட்டிச்சத்தான்களையும் ஏவிவிடுவதாக கூறுகிறார்கள்.கவிஞி கமலா(1974) தமிழில் எம்,,எம்பில் படடங்களையும் கல்வியியலில் பி.எட் பட்டமும் பெற்றவர்.இருந்தும் தனது பெயருக்குப் பின்னால் எந்தப் பட்டங்களையும் சேர்த்து எழுதிக் கொள்ளாதவர். பதிமூன்று
இரவுகளின் கதை என்கிற நாவலை பக்க வரையறையின்றி எழுதிக்கொண்டு இருக்கும் இவரை ராசமைந்தன் நேர்காணலுக்காக சென்ற போது அதை ஒப்புக்கொண்டு அவரும் சம்மதித்தபோது சேலம் மாவட்டம் சுற்றுப்புறங்களில்
சிறு பூகம்பம் நிகழ்ந்தது. இந்த நேர்காணல் தான் கவிஞி கமலாவின் முதல் நேர்காணல் என்பதையும் பதிவில் வைக்க வேண்டும்.

* வணக்கம் . தாங்கள் சிறந்த கவிஞர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறது.மற்ற தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதுண்டா?

குப்பைகளை நான் வாசிப்பதில்லை.

* உங்கள் எழுத்தில் தலித்திய தாக்கம் காணப்படுவதில்லையே ஏன் ?

நான் தலித் அல்ல என்று அர்த்தம்.ஏன் எல்லோரும் தலித் தலித் என்றே கூவிக்கொண்ருக்கிறீர்கள்.* உங்கள் முதல் கவிதையை எங்கே எப்போது எழுதினீர்கள் ?

என் முதல் கவிதை ஓவிய வடிவில் இருந்தது. நான் ஏழாவது வாசித்துக்கொண்டிருக்கையில் எனது பள்ளித்தோழனின் பாம்பைக்கண்ட அதிர்ச்சியில் என் கவிதை உள்ளம் பூத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.அவன் தன்னுடைய பாம்பின் வழியாக சிறு நீரை வெளியேற்றிக்கொண்டு இருந்தான்.அவனே பிறகு பாம்பு படம் எடுக்கும் என்றான்.
அந்த பாம்பின் படத்தை நான் பெண்கள் கழிவறையில் எழுதினேன்.என் தோழிகள் அனைவருமே பாராட்டினார்கள் .ஏனோ அவர்கள் அதை கவிதை என்று மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

*பாம்பு படம் எடுப்பதை கண்டதுண்டா ?

அந்தப் பொன்னான வாய்ப்பு நான் பத்தாவது வாசித்துக்கொண்டு இருக்கையில்
கிட்டியது. அன்றிலிருந்து இன்று வரை பாம்புகளின் தரிசனம் தினம் உண்டு.

*உங்கள் முதல் தொகுப்பில் வந்த பாம்புகள் பற்றி தவறான எண்ணம் கொண்டு இருந்தேன். கவிதை வாசிப்பில் ஆழமான ஈடுபாடும் எனக்கு இருந்ததில்லை. அது போகட்டும் கவிதை எழுத மாலை அல்லது இரவு நேரம் எதைப்பயன் படுத்துகிறீர்கள் ?

நோ, நோ அப்படியெல்லாம் கிடையாது. நான் சுமாரான போதையில் இருக்கும் போது அது பகலோ, மாலையோ,சாமத்திலோ எப்போது வேண்டுமானாலும்

*உங்கள் தாய், தந்தையரைப் பற்றிக் கூறமுடியுமா?

எனது தாய் எனது தகப்பனாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
அப்போது என் தகப்பனாருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.என் தகப்பனார்
என் தாயின் மீது வைத்து இருந்த காதலால் அவரை மூன்றாம் தாரமாக
மணந்து கொண்டார். என் தாய் இப்போது மலேசியாவில் இருக்கிறார். தகப்பனார் மசை நாய் கடித்து ,ஒரே மாதத்தில் லோகு மீன் சாப்பிட்டு இறந்து போனார். சித்ரா என்கிற சகோதரி திரு நங்கையாக பெங்களூருவில் உள்ளார்.

*பின் நவீனத்துவ எழுத்து பற்றி உங்களால் போதிக்க இயலுமா?

எழுத்தில் முன்.பின் பாகுபாட்டை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தது யாரென தெரியவில்லை. சொன்னவர் பாகுபாட்டைப் பற்றி விளக்கமாய் கூறியிருக்கவேண்டும். பேச்சோடு பேச்சாக மேலை நாட்டில் அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று கூறி வைத்ததில் இப்போது நம் ஆட்கள் கடை விரித்து விட்டார்கள்.
இருந்தாலும் இந்தக் கேள்வியை எனது எட்டாவது , பத்தாவது கணவன்மார்களிடம் முன்வைத்தால் அவர்கள் மூன்னூறு பக்க அளவில்
டிஸ்கசன் செய்து பதில் கொடுப்பார்கள். அவர்கள்தான் என்னைப் பின்புறமாக‌
பயன்படுத்திக்கொள்ளும் பின் நவீனவாதிகள். அவர்கள் இப்போது இங்கே இல்லை, இரு கட்டிங் போட்டு வர நகர்ப்புறம் சென்றுள்ளார்கள்.

பார்க்கப் போகையில் என் அனுபவத்தில் என் அனுபவத்திலிருந்து எழுதுவதே என் படைப்பு. படித்தே ஆக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. உடல் மொழியையும் , உறுப்புகளின் பயன்பாட்டையும் ,முடிக்கற்றைகளின் சாகஸங்களையும் பற்றி கவிதை வடிவில் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் என் தொகுதிகளின் ரசிகர்கள்.

* துப்பட்டா பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்து விட்டது அல்லவா?

அது போகட்டும் , அதில் நான் கலந்து கொள்ளவும் இல்லை. சம்பந்தமில்லாமல் பெண் என்றதும் பொதுவாக கேட்கிறாய். நான் குடும்பம்
நடத்தும் ஒழுக்கவியல் சார்ந்த பெண் . இருந்தும் " துப்பட்டா துப்பட்டா..உன் கன்னத்துல அப்பட்டா அப்பட்டா " பாடல் நன்றாக இருக்கிறது.

* உங்கள் அலைபேசி எண்ணை உங்கள் வாசகர்களுக்கு தரலாமே! அவர்கள் உங்களோடு உங்கள் கவிதை பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே!

ஏற்கனவே அப்படி நெம்பரை எனது படைப்பின் கீழ் போட்டுத்தான் பிரச்சனை வெடித்துவிட்டது.கூட இருந்தவர்களை விடக்கூடாது சும்மா என்று திரியை கிள்ளிவிட்டார்கள் . இவர்கள் திரியை கொளுத்திப்போட்டு விட்டு போய் விடுவார்கள் . என்பெயர் கெட்டுவிடும் . அதும் தவிர சாமம் ஏமம் என்றில்லாமல் கூப்பிடுகிறார்கள் . ஒரு நேரம் காலம் வேண்டும் ? என்னை என் கணவர்கள் தாக்கினாலே போதும் . என்னை புதிதாய் தாக்க கூர் தீட்டிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு ஒரே வார்த்தை .. சாரி . ஐ ஆம் ஆல் ரெடி எங்கேஜ்டு.


...தொடர்ச்சி கீழே காணவும்
...

Post Comment

6 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

பின்நவீனத்துவ விளக்கம் அருமை!

வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்க!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

யாத்ரா மற்றும் வால்பையன் அவர்களுக்கு நன்றி , மற்றும் நந்தா அவர்களுக்கும்

கும்க்கி சொன்னது…

இதென்ன புண்நவீனத்துவமாயிடும் போலருக்கே...

கும்க்கி சொன்னது…

பேட்டி கொடுத்தவரின் மற்றும் பேட்டி எடுத்தவரின் நேர்மையை பாராட்டியே தீரவேண்டும்.ஆகா....ஆகா..

ஜெகநாதன் சொன்னது…

சுள்ளிமேட்டு ராமசாமி,
சின்ன பெருமான்,
புலிகேசி,
தொப்புளான்..
இவர்களின் ​பேட்டிகளையும் காண ஆவலுடன்.....

தமிழ்நதி சொன்னது…

எவ்வளவு குசும்பு உங்களுக்கு... சிரிக்காமல் இருக்கமுடியவில்லை:)