செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

லதானந்த் அவர்களுக்கு ஒரு கேள்வி.

என்னது ! தலைப்பே ஒரு வித்தியாசமா உள்ளதேனு பார்க்கவேண்டாம்.

நாம் இந்த இரண்டு நாள் லீவில் பார்த்த இடங்களில் இருந்து அவர் சம்பந்தப்பட்ட
கேள்வி மட்டுமே அதுவும் நம்முடைய சந்தேக நிவர்த்திக்கா.

ஆடி நோம்பிக்கு ஊருக்குப் போகும் போது அன்னூரில் இருந்து 12வது கிலோமீட்டரில் இடுவம்பாளையம் சென்றோம். அங்கு ஒரு ஆஞ்ச நேயர் கோயில் மலை மீது உள்ளது.

கோயில் மிக பிரமாண்டமாக உள்ளது. அமைதியான சூழல். அற்புதமான இயற்கை காட்சிகள். சுத்தமான காற்று.

ஒவ்வொரு தமிழ்மாத முதல் சனிக்கிழமையும் தியானக்கூட்டம் நடைபெறும்.

கோயிலுக்கு முடிஞ்சா போய்ப்பாருங்க ! நிம்மதி பெறுவீர்கள்.

அதே மாதிரி தென் திருப்பதி கோயில்.

தனியார் மில் பராமரிப்பில் உள்ள கோயில் .அது மட்டுமல்ல இக்கோயில் அவர்களின் சொந்த ஸ்பின்னிங் மில்லில் உள்ளது. இக்கோயில் அமைதி சற்றுக்குறைவே, ஏனெனில் அருகில்
மில் ஜின்னிங் மிஷின் ஓடும் சவுண்ட்தான் கூடுதலாக கிடைக்கும்.

ஒரு தொன்னை பொங்கலும் , தயிர் சாதமும் இலவசமாக் கிடைக்கும்.

அடுத்ததாக அனுவாவி சுப்பிரமணியர் கோயில்.
துடியலூரில் இருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள முருகன் கோயில்.

கோயிலுக்கு செல்ல பஸ் வசதியுண்டு. மலை அடிவாரத்திலிருந்து சுமாராக‌
350 படி ஏற வேண்டும் .

மேலே சென்றால் கோயிலும் , அங்கே ஒரு நீருற்றும் உள்ளது.

இங்கேதான் லதானந்த் அவர்களுக்கு ஒரு கேள்வி.

ஏன்னா இந்த மலை இதற்கு எதிரே உள்ள பொன்னூத்தமன் கோயில்
மலை இவர் கண்ட்ரோலில் உள்ளதுன்னு நினைக்கிறேன்.

இந்த இரு மலைகளும் எதிரெதிரே உள்ளது.

இந்த இரு மலைகளிலும் காணப்படும் நீருற்றுகள் எப்படி உருவாகிறது.

வருடம் பூராவும் வற்றாமல் எப்படி நீர் கிடைக்கிறது.

நீங்கள் நீரூற்று உருவாகும் இடத்திற்க்கு சென்றதுண்டா ?

படங்கள் இருந்தால் எங்களுக்கும் கொஞ்சம் காட்டவும்.

அனுவாவி கோயிலில் இருந்து மருதமலைக்கு காட்டு வழியே செல்ல முடியுமா ,

இதுதான் கேள்வி.


படங்கள் காட்டியுள்ளோம். தெளிவாக பார்க்க படங்கள் மேலே கிளுக்கவும்.

வாமுகோமுவின் இடுகைகள் இல்லாததால் பயணக்கட்டுரைகள் அளிப்பது
வாய்ப்பாடிக்குமார் .

...

Post Comment

கருத்துகள் இல்லை: