திங்கள், ஆகஸ்ட் 10, 2009

நமக்கு வந்த மடல்.

நம் தமிழ்ல எழுதுறவனுக்கு அறிவாளித்தனமும் , மொழியை ஆளுகிற ஒரு கெட்டிக்காரத்தனமும் வேண்டியது இருக்கு. நம்ம என்ன பண்ணுதோம்? நம்ம கண்ணில் உறுத்துகிற சாணியையும் ,சகதியையும் பத்திச்சொல்லுதோம். சர்த்தான் .. சொல்லணும்தான்.

இதை யாரு படிக்கான்னா படிச்சவங்கள்ல ரொம்பக் கொஞ்சம் பேர்தான் படிக்காங்க

அதுவும் சம்பாதிக்கிற பட்டணத்துல இருக்கிற குடும்பங்கள் தான் படிக்கிறதுகள். நம் கிராமத்தின் குமட்டல் எடுக்கிற அனுபவங்களை ‍‍மனிதர்கள் படுகிற தாங்க முடியாத இம்சைகளை நாம் நம்ம மக்கள்ட்ட குடுக்கணும். நம்ம சனங்களை எழுத்துக்கூட்டி வாசிக்க இன்னம் எத்தன வருசங்கள் பிடிக்குமோ சரியா சொல்லத்தெரியல எனக்கு.
ஒரு அம்மா ,வங்கியில பணீபுரியுற அம்மா அவங்க,எங்கிட்ட பிரியமாப் பேசுவாங்க . பேச்சு சுவாரசியத்துல ஒரு நாளு மயிறு என்கிற வார்த்தை வந்துட்டுது என் வாயிலிருந்து. அப்புறம் என்னைய பாக்குறதில்ல அவங்க . எதிரெதிரே சந்திக்க நேர்ந்தாலும் என்னைய பாக்குறத தவிர்த்து விடுவாங்க. முக்கியம் வார்த்தைகள்.

சுயம்பு ரொம்ப காலமா எழுதலை. ரொம்பவும் எழுதலை. இப்போ எழுதிப்பாக்குறேன். கை கொடச்சல் எடுக்குது. உடம்பு வணங்க மாட்டேங்குது, எனக்குத்தோதா ஞாபகத்தோட வச்சிருந்து கவனமா சொல்லித்தரமாட்டேங்குது. சடைச்சிக்க முடியுமா யாரையாவது ?

நாம் எழுதணும்.எல்லோருமே எழுதணும். எழுதுறது மாதிரி லேசான வேலை வேற எது இருக்கு? எப்பன்னாலும் எழுதலாம்.

லெனின் சிறைக்குள்ள இருந்துகிட்டு ரொட்டியில பால் நனைச்சி பொஸ்தகத்துல வெள்ளையாயிருந்த பகுதிகள்ல எழுதினாராம். எழுதனும்னு நெனச்சால் எழுதலாம்.கேக்கணும் , பாக்கணும் , ரொம்ப டயம் எடுத்துக்கிட்டு அடிச்சி அடிச்சி திருத்தித் திருத்தி ஒரு செய்தியையாகினும் ரொம்ப தெளிவா சொல்லிப்போடணும், நம்ம மக்கள்னா யாரு ? எல்லா தெசையிலும் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள். பல நூறு ஆண்டுகள் நமக்கு யாரும் எதுவும் சொல்லித்தல்ல . ஒன்ணுமே குடுக்கல் .அடிச்சி அடிச்சி நம்மட்ட வேலை வாங்கியிருப்பாங்களே தவிர எந்த ஞானமும் அவர்கள் நமக்கு வாரி வழங்கல, போஷாக்கு இல்லாமலும் ,கல்வி இல்லாமலும் தான் இன்னும் கூட இருக்கோம்.
படைப்பில் அருமையாக பேசுகிறீர்கள். உங்களோடது ரொம்ப தைரியமான எழுத்து !

பாசத்தோடு

மு.சுயம்புலிங்கம்.
சென்னை.


...

Post Comment

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

தோழர் வாய்பாடி குமார் அவர்கள் இதற்கு தோழர் வா.மு.கோமுவின் பதிலை வாங்கி பதியுமாறு கேட்டு கொள்கிறேன்!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

we will try.Thanking you.

D.Kumar.