செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

தினபலன்

கணித்தவர் : ஜோதிடக்கலைமாமணீ ராசமைந்தன்.

29‍.12.2007 ஸர்வஜித் வருடம் மார்கழி மாதம் 13 ம் நாள் சனிக்கிழமை வளர்பிறை சஷ்டி திதி காலை 7.45 மணி வரை . பிறகு சப்தமி திதி ,பூரம் நட்சத்திரம் இரவு 11.13 மணி வரை பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் , மரணயோகம் இரவு 11.12 மணி வரை பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 .10.30
மாலை 9.00 .4.00

ராகு காலம் : காலை 7.30 9.00
எம கண்டம் : காலை 10.30 .12.00
குளிகை : மதியம் 1.30 3.00
வார சூலை : கிழக்கு
சூரிய உதயம் : காலை 6.35
அதிர்ஷட எண்கள் :3,7,8.


மேஷம் :
உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் நாள். சோர்வுகள் அகலும். புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர எண்ணி பொழுதுக்குள் மருத்துவமனை செலவு நிச்சயம். பிரச்சனைகள் சுமூகமாக முடியும் என்றாலும் அவர்களிடமும் இருட்டுக்கட்டிய நேரத்தில் மிதிபடுவீர்கள்.பணவரவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ரிஷபம் :
செய்தொழிலில் சிறப்புகள் ஏற்படும் நாள். வரவு கூடும். வருங்காலத்திற்க்காக
சேமித்து வைத்திருப்பீர்கள். அது களவு போகும் பூர்விக சொத்துகள் பற்றிய முடிவு நாசமாகும். மாலை நேரத்தில் இழவு செய்தி ஒன்று வந்து சேரும். உத்தியோக அனுகூலம் உண்டு.

மிதுனம் :
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் செலவழிக்க மனம் வராது. திடீர் விருந்தினர்கள் வீட்டை துடைப்பார்கள். வாகன பயம் உண்டு.செல்லும் வழியில் பழனிமலை முருகனை கோவணத்துடன் காண்பீர்கள். மறந்து போன காரியத்தை இன்றும் மறப்பீர்கள்.

கடகம் :
தனவரவில் தடைகள் அகலும் நாள்.பக்தி கூடும். நினைத்த காரியம் நினைத்த உடனேயே கைகூட வேண்டுமென்று வழிபாடு செய்வீர்கள். பெண் பார்க்கும் படலத்திலேயே தாலி கட்ட முயன்று தர்ம அடி வாங்குவீர்கள். மாலை நேரத்தில் வார்த்தைகளில் ங்கோத்தா,ங்கொம்மாளே இவற்றை தவிர்ப்பது நலம். இடமாற்றம் நடந்தே தீரும்.

சிம்மம் :
சங்கடங்கள் அகல சாமி துணை தேவைப்படும் நாள்.மங்கள நிகழ்ச்சிகளில் வயிற்றுப்போக்கு , வாந்தி ஏற்படும். தம்பி , தங்கை வழியில் எதிர்ப்பு கூடும்.தெய்வம் பிரார்த்தனையை நிறைவேற்றவில்லையே என வீட்டிலிருக்கும் தெய்வப்படங்களை உடைப்பீர்கள். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

கன்னி :
வாழ்க்கைத்துணை வழியே வசந்தம் வந்து சேரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வியாபாரம் , தொழில் விருத்தி அடையும் . புத்தாண்டை நினைத்து அசை போடுவீர்கள். உடல் நலத்திற்க்காக துட்டு செலவழிப்பீர்கள், சொந்தங்களால் வரும் பகை பாதி வழியிலேயே வேறு வீடு முட்டும்.

துலாம் :
நீண்ட நாள் பிரார்த்தனை இன்று நிறைவேறும். நீங்கள் fuck பண்ண ஆசைப்பட்டவள் இன்று சம்மதிப்பாள்.பாக்கெட்டில் உள்ள பணம் இன்று களவாடப்படும். ரத்தத்தில் இன்று ஹெச்ய்வி உள்ளதாவென செக்கப் செய்ய வேண்டி வரும். அரசு உதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.

விருச்சிகம் :
வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும் நாள்.சமயம் பார்த்து தூங்கிப் போய் விடுவீர்கள். தெய்வபலம் உங்களிடம் இருப்பதால் மறுபடி தூங்கிப்போய்விடுவீர்கள். வண்ணான் ஆட்டுத்தலைக்குப் பறந்தது போல இன்று ஏதோ ஒன்றிற்க்காக பறப்பீர்கள் . முடிந்த அளவு அது மூவ் வலி நிவாரணிக்காக இருக்கலாம்.

தனுசு :
கடன் சுமையை சாமார்த்தியமாக இன்று ஓட்டமாய் ஓடியாவது சமாளிப்பீர்கள். காரியங்களில் உதவ இன்று ஒரு பெண் பல இடங்களுக்கு வருவாள். அவளை யாரெனெக் கேட்டு உம் பொண்டாட்டி எனக்கூறி ஒரு அடி அடிப்பாள். மகான்கள் வழிபாடுகளில் இன்றிலிருந்து அக்கறை காட்டுவீர்கள். இன்றிலிருந்து லேசாய் கழுத்து வலி இருந்து கொண்டே இருக்கும்.

மகரம் :
முன்னேற்றத்திற்க்காக இன்று பல முட்டுக்கட்டைகள் விழும் நாள்.இத்தனை நாட்களாக தொழிலில் ஏட்டிக்கு போட்டியாக நடந்தவர்கள் இன்று தெருச்சண்டைக்கு இழுப்பார்கள். பணம் இன்று எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.இன்றைய செலவுக்கு அதிகம் உதவும். குடும்ப ஒற்றுமை கூடும். நண்பர்கள் அவரவர் பிரச்சனைகளுக்கு சுற்றிக்கொண்டிருப்பர்.

கும்பம் :
உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் பலமான குட்டு வாங்குவீர்கள். இன்று தொட்டதையெல்லாம் தவற விட்டு உடைப்பீர்கள். தட்டா முட்டி என்கிற புதிய‌
பெயர் இன்று உங்களுக்கு சூட்டப்படும்.இன்று பதினெட்டு முறை பாத்ரூம் செல்ல வேண்டி வரும். கடன் சுமை ஏறும்.

மீனம் :
சச்சரவுகள் அகல எச்சரிக்கையோடு செயல்படவேண்டிய நாள். நீண்ட நாட்களாய் நீங்கள் தொடர்புவைத்திருந்த பெண் இன்று உங்களிடம் நாசுக்காய் நழுவி வேறொருவன் வண்டியில் முதுகோடு சாய்ந்து கையசைத்துப் போவாள்.
சாவு சம்பந்தமாய் அருமையான கவிதை ஒன்றை இரவு உங்களுக்கே சமர்பித்துக்கொள்வீர்கள்.

பொதுபலன் :

இன்று எல்லா ராசிக்காரர்களும் கருப்பு நிற மேலாடையை அணிவது சிறப்பு.
இந்த வருடத்திலேயெ ஒன்றுக்கும் ஆகாத வெத்தி நாள் இது...*****

Post Comment

4 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

//நீங்கள் fuck பண்ண ஆசைப்பட்டவள் இன்று சம்மதிப்பாள்.//

நான் துலாம் ராசிக்கு மாற எண்ண செய்ய வேண்டும்! தல

வால்பையன் சொன்னது…

ஜூப்பர் தல!

Karthikeyan G சொன்னது…

Super... Chanceless....

:-)))))))))))))))

க. தங்கமணி பிரபு சொன்னது…

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!