செவ்வாய், அக்டோபர் 27, 2009

வாமுகோமு டைரி 91ல் கிடைத்த கவிதைகள்

1. நல்லவர்கள் நாலுபேர் ஊரில் பிணமாய் எரிவதால் தான் மழை இன்னும்
பொய்த்துக்கொண்டே போகிறதோ ?

2. இன்னமும் பாஞ்சாலிகள் இருக்கிறார்கள் அப்புனு ! சீலைகளை அவிழ்த்துப்
போட ! போட!

3. சரித்திரம் தனிமனிதனோடு முடிவதில்லை அப்புனு ! ஒரு அண்ணா டாட்டா
காட்டினால் ஒரு எம்.ஜி.ஆர் ,ஒரு எம்,ஜி.ஆர் போனால் ஒரு ஜெ !ஒரு
ஜி. நாகராஜன் போனால் ஒரு தஞ்சை பிரகாஷ் ! ஒரு தஞ்சை பிரகாஷ்
போனால் ஒரு வா.மு.மாமூ !


4. கும்பிட்டுப் பார்ப்போம், சூடம் , ஊதுபத்தி காட்டியும் பார்ப்போம்,அட ஒரு
வெள்ளாட்டை வெட்டியும் பார்ப்போம் . மசியாவிடில் உடைத்தும் வைப்போம்

5. எல்லாஆ மதக்காரனின் உயிரும் ஒரே ருசிதான் டோவ்!சொன்னது மரணம்.

6. செடியைச் சுற்றி வேலி போட்டேன்பா ! மறா நாளு செடியை மட்டும்
காணோம்.

7. உன்னோடதுக எல்லாம் எவ்வளவு அழகுடி! இந்த சிலுவையிலிருந்து
பார்க்கயில

8. தேவனே ! பயப்படாமல் பாவங்கள் செய் ! நான் இருக்கிறேன் உன்னை
இரட்சிக்க !

9. கவலை கவலை! பட்டுப் பார்த்தேன் ! கவலை கவலை !

10 மன்றாடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை ! கொன்றோடிப்போனோம்.

11. கவலைப்படாதே ! கட்டாயம் ஒரு காலம் வரும் . நீயும் நானும்
செத்துப்போக!

12. வாடா ! ஒரு கை பார்ப்போம் ! அவன் கைரேகை ஜோசியக்காரந்தான்.

13. சாதி ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிவார் பழனிச்சாமி நாடார் ,எம்.எல்.

14. சிவப்பு நிறத்தில் சூரியன் , வெள்ளை நிறத்தில் நிலா ! அட நான் கவிஞன்
ஆயிட்டேன்டா!

15. என்ன அவன் இவ்ளோ அறிவுப்பூர்வமாக பேசுகிறான் ? பைத்தியமோ !

16. பொழுது போக கவிதை எழுத , கவிதை எழுத பொழுது போச்சுது!

17. பார்த்து நட ! வழியில் இடறுவதற்க்கு மனிதர்கள் இருக்கிறார்கள்.


டைரிகள் தொடரும்,,,,
டப்பா டான்ஸ் ஆடும் ,,,,,..

Post Comment

12 கருத்துகள்:

செந்தழல் ரவி சொன்னது…

அருமையா இருக்கு வாமு கோமு...

வால்பையன் சொன்னது…

//கும்பிட்டுப் பார்ப்போம், சூடம் , ஊதுபத்தி காட்டியும் பார்ப்போம்,அட ஒரு
வெள்ளாட்டை வெட்டியும் பார்ப்போம் . மசியாவிடில் உடைத்தும் வைப்போம்//

இதுக்கு முதல்லயே உடைச்சிருக்கலாமே!

வால்பையன் சொன்னது…

//உன்னோடதுக எல்லாம் எவ்வளவு அழகுடி! இந்த சிலுவையிலிருந்து
பார்க்கயில‌//

டாப் ஆங்கிளில் இருந்து பார்த்தால் தான் வெள்ளையா ரெண்டு தெரியும்!

அதாங்க செய்ய்ய்ங்குன்னு பறக்குமே புறா!

வால்பையன் சொன்னது…

// கவலைப்படாதே ! கட்டாயம் ஒரு காலம் வரும் . நீயும் நானும்
செத்துப்போக!//

இனிமே தான் அவன் கவலையே படப்போறான்!

வால்பையன் சொன்னது…

//சாதி ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிவார் பழனிச்சாமி நாடார் ,எம்.எல்.ஏ//

விளங்குனாப்புல தான்!

வால்பையன் சொன்னது…

//சிவப்பு நிறத்தில் சூரியன் , வெள்ளை நிறத்தில் நிலா ! அட நான் கவிஞன்
ஆயிட்டேன்டா!//


சிவப்பு
சூரியன்
நிறம்
நிலா
நிறம்
வெள்ளை

நான் பின்நவீனத்துவ கவிஞனாகிட்டேன்!

வால்பையன் சொன்னது…

// என்ன அவன் இவ்ளோ அறிவுப்பூர்வமாக பேசுகிறான் ? பைத்தியமோ !//

ஹாஹாஹாஹா

இருக்கும் இருக்கும்!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

வாமுகோமு வின் கட்டுரையை வால்பையனின் கருத்துரைகள் ஓவர்டேக் செய்துவிட்டன.

மண்குதிரை சொன்னது…

rasiththen

ஸ்ரீ சொன்னது…

:-))))))

லதானந்த் சொன்னது…

”சிவப்பு
நிறத்தில் நிலா!
வெள்ளை
நிறத்தில் சூரியன்!”

நான்தான் ஒரிஜினல் பின் நவீனத்துவன்

Karthikeyan G சொன்னது…

Superuu..