எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் , படங்கள் என்று வருவது போல மன்மத வெப்சைட்டுகளின் தீமை பற்றிய விவரண படங்கள் விழிப்புணர்வு பிரசுரங்களின் தேவை இன்று அதிகமாய் இருக்கிறது.
செல்போன் கடையில் வேலை பார்க்கும் பெண் பகலில் தன் ஓனருக்கு நெருங்கி வந்து முத்தம் கொடுத்து சில்மிசம் செய்தது. பரவலாக தமிழகமே பார்த்திருக்கிறது. அந்தப்பெண் டிகிரி முடித்தவர் , ஓனர் மேலே உச்சத்தை அந்தப்பெண்ணிடம் எதிர்பார்த்து இருக்கிறார். அந்தக் கிறுக்குக்கருமம் மண்டையை ஆட்டியிருக்கிறது. பதிவு செய்த செல்போன் காட்சியை நெட்ல போட்டிடுவேன் என்று கூற வீடு சென்ற பெண் தூக்கு மாட்டி செத்துவிட்டது.
அடுத்ததாக செல்போனில் மிஸ்டு கால்கள் ! கணவரின் ஏற்பாட்டில் மனைவி ஏதோ ஒரு எண்ணை அழுத்தி கூப்பிடுவது. செல்வியா ? பூமிகாவா? என்பது. இல்லைங்க என்று பதில் சொல்வது ஆணாக இருந்தால் வலையை விரிப்பது. உங்க வாய்ஸ் இனிமையா இருக்குது, உங்களைப்பத்தி சொல்லுங்க !என்று பிட் ஓட்டுவது. தன்னை கல்லூரி மாணவி என்பது. முதலிரவில் என்ன பண்ணுவீங்க ? என்று ரூட் மாறுவது , எப்போ சந்திக்கலாம் என்பது. சந்திக்கும் சமயம் தன் கண்வனோடும் ,ஆட்களோடும் வருவது. இவனிடம் இருக்கும் பணம் , நகைகளை பிடுங்கிச்செல்வது, அல்லது பேச்சை ஆடியோ ரெக்கார்டிங் செய்வது , பணம் கறப்பது. இவர்கள் வில்லிகள் என்றால் மறுபுறம் வில்லன்கள். பேச்சில் பெண்களை தன் வயப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள். வில்லன்கள் பணத்தை குறிவைப்பதில்லை! காமம்தான் அவர்களின் பிரதானம்,இவர்களால் சீரழிந்த பெண்கள் வழக்கம்போல சேலை தலைப்பிலோ , துப்பட்டி நுனியிலோ கண்ணீரை துடைத்துக்கொள்கிறார்கள். ஆசையும் காமமும் யாரையும் விடுவதேயில்லை! ஏராளமான குற்றச்சம்பவங்களுக்கு செல்போன் தான் துணை. உருமாண்டி வந்து புடிச்சுட்டு போயிருவான் சாப்புடு செல்லம், சாப்புடு கண்ணு !என்று மிரட்டிய காலம் மலை ஏறிவிட்டது. செல்போனை கையிலகுடுத்துடுவேன் பேசாம சாப்புடறியா என்ன ? என்று மிரட்டலாம்! வீடுகளுக்குள் சைத்தான்கள் கையடக்க டப்பா வடிவில் உங்கள் அருகில் கிடக்கின்றன.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! கணவர்களை மனைவியர் ஏமாற்றுகிறார்கள். தோழிகள் நண்பரகளை ஏமாற்றுகிறார்கள். காதலர்கள் காதலிகளை ஏமாற்றுகிறார்கள். இந்த உலகம் முச்சூடுமே எதிரிகள் உக்கிரமாய்த்தான் திரிகிறார்கள். உங்களால் ஏமாற்றவே முடியாதவர் ஒரு வகையினர் சுற்றுகிறார்கள். உங்களால் ஏமாற்றப்படக்கூடியவர்களாக ஒரு வகையினரும் இங்கேயேதான் சுற்றுகிறார்கள்.
******************** **************************************
ஒரு பைத்தியகாரனுக்கு தான் ஒரு பைத்தியகாரன் என்று நினைவில் இருக்காது.அறியாமையில் இருப்பவனுக்கும் தான் அறியாமையில் இருக்கிறோம் என்ற நினைவு இருக்காது! கனவு கண்டு கொண்டு இருப்பவனுக்கும் தான் கனவு கண்டு கொண்டு இருக்கிறோம் என்பது நினைவில் இருக்காது! பைத்தியகாரர்கள் தங்களை பைத்தியமற்றவர்களாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். எதிராளியை பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு ? என்பார்கள்.
உளவியல் மருத்துவர் ஒருவரை காண அழகிய பெண்மணீ அசின் சென்றாள். மருத்துவர் இவளைப்பார்த்ததும் எழுந்தார், " அருகே வரவும் மிஸ் " என்றார். அசின் அருகே வந்ததும் அசின் அதிர்ச்சியடைந்து நின்றாள். பின் விலகிய மருத்துவர் " இப்போ உட்காருங்கள் மிஸ் . இத்தோடு என் பிரச்சினை ஒழிந்தது. இனிச் சொல்லுங்கள்... உங்கள் பிரச்சினை என்ன?"
ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்திடம் நிலாவைக்காட்டி அழகாக இருக்கிறது. பார் நிலா அழகுதான் என்றது! இந்த பைத்தியமும் ஆம் என்று ஒத்துக்கொண்டது. மேகங்களுக்குள் நிலா சிறிது நேரம் மறைந்துவிட்டது ! எங்கே அந்த நிலாவை காணவில்லையே? என்றது ஒன்று . அது எங்காச்சிம் போற வழியிலே செல்டவர்ல் கீது போயி அப்பியிருக்கும்"
எனக்குத் தெரிந்து 88ல் திருப்பூர் இரயில் நிலையம் அருகே ஒரு மன நோயாளி சுற்றிக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி மேடைப்பேச்சாளராய் இருந்தவராம் அவர். பேச்சு பேச்சு எந்த நேரமும் பேச்சுதான், காசுக்காக கை நீட்டும்போது மட்டும் பேசாமலா விடுவார் . கணீரென்ற குரல் வளம் ,அவர் கையில் ஒரு முறை மனஓசை புத்தகம் சுருட்டப்பட்டு இருந்தது.
கோபிக்கு அருகில் ஒரு பைத்தியம் ,, தன் உடலில் முன்பின் பெரிய அட்டை ஒன்று தொங்கவிட்டு சுத்தும். அதில் பேப்பர் கட்டிங், விளம்பரங்கள், அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா புகைப்படங்கள் குத்தப்பட்டு இருக்கும். அவரால் யாருக்கும் தொந்தரவு இல்லை.
பெருந்துறை பஸ் நிறுத்தத்தில் முக்கால் நிர்வாணமாக ஒரு பெண் மனநோயாளி. பேருந்து வருகிறது என்றால் சீட் பிடிக்க ஒரு கும்பல் ஓடுகையில் இதுவும் அவசரமாக ஓடும்.ஆனால் பஸ் ஏறாது! தலையை சொறிந்தபடி திரும்பிவிடும்.
புத்திசாலி பைத்தியங்கள் இருக்கின்றன! உதாரணமாக!
ஒரு புதிய பணக்காரர் தன் தோட்டத்தில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டினார். அவைகளை நண்பனுக்கு கூட்டி வந்து காட்டினார். அப்போது நண்பன் கேட்டான். " ஒண்ணு பத்தாதா ? எதுக்கு உனக்கு மூணு? "ஒண்ணு எப்படி போதும்? ஒண்ணு வந்து வெந்நீர் குளியலுக்கு . இன்னொன்னு குளிர்ந்த நீர் குளியலுக்கு " என்றார். " இன்னும் ஒண்ணு இருக்கே ? " அது வந்து நீச்சல் தெரியாதவங்களுக்கு.."
அன்போட என்றும் வாமுகோமு.
***********