செவ்வாய், மார்ச் 02, 2010

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

தமிழில் விமர்சகர்கள் மிகக்குறைவு என்பது நீண்டகாலமாக எழுத்துலகில் புலங்கிக் கொண்டிருப்பவர்கள் உணர்வார்கள். அப்படியே ஒன்றிரண்டு பேர்கள் விமர்சித்தாலும் அவர்கள் படைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தன் மாமனுடைய புத்தகத்திற்க்காகவோ தன் கூடவே புறண்டெழுந்தவளினுடைய வீட்டுக்காரன் எழுதிய புத்தகத்திற்க்காகவோ விமர்சனம் என்கிற பெயரில் ஜல்லியடிக்க தனது படைப்பு வெறியை ஒதுக்கி விட்டு பேனா நீக்குவார்கள். விமர்சனம் என்ற பெயரில் சக படைப்பாளியை எதிராளியாக பாவித்துக்கொண்டு குதறி எடுப்பதுதான் விமர்சனம் என்கிற புதுமையான பாணி. இதைத்தான் கற்றுக்கொடுத்து முன்னோர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். பீடத்தில் இருப்பவர்களும் தம் கத்துக்குட்டிகளுக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். நான் இவைகளை குறை சொல்வதாக தப்பாக அர்த்தம் செய்து கொள்ளலாகாது நண்பர்களே ! அது குறையல்ல. வாசகனை விசில் அடித்தபடியே படிக்க வைக்கும் ஒரு பாணி . நானும் அவர்களை கடைபிடித்து வழி மொழிந்துதான் இந்த புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என்னைத்தேடி வரும் புத்தகங்களுக்கு ஜல்லியடிப்பு வேலைகள் செய்வது என்பது இனி என் தலையாய பணி.

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது என்பது சமுதாயக் கடமையாக மாறிவிட்டது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகிவருகிறது. அதை செய்யும் இலக்கியவாதிகள் கூட அப்படித்தான் இப்போது முழுதாக நம்பிக்கை வைத்து எழுதுகிறார்கள். தமிழில் வரும் ஒவ்வொரு படங்களும் உலகப்படங்களில் இருந்து டூமீல் செய்யப்பட்டதாக எழுதுவது இப்போது பேஷனாகி விட்டது. அமீர்,மிஸ்கின் செல்வராகவன் படங்கள் நம் விமர்சகர்கள் எழுத்து சாமர்த்தியத்தால் இப்படித்தான் குதறப்படுகின்றன. நாம் ஒரு தமிழ்ப்படம் பார்த்து இவர்கள் விமர்சனங்களை படித்தோமென்றால் ஒன்பது டிவிடிக்கள் அலைஅலையொவென அலைந்து லெக்ஸ்களீல் விழாத குறையாக விழுந்து ,ஊர் ஊராக போனப்போட்டு மொழிதெரியாத படங்களை வாங்கி சாமத்தில் கொட்டறக்கோ எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு தமிழ்ப்படத்தால் நம் செலவுக்கணக்கை நமக்கு இன்றைய விமர்சகர்கள் நமக்கு ஏற்றுகிறார்கள். . நமக்கு பட்ஜெட்டும் உதைக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்திற்க்கு சென்று வீடு கட்டித் தங்கும் என் ஏற்பாடு தள்ளிப்போகிறது! உயிர்மை இந்த வருடம் ஏப்ரல் இறுதிக்குள் எனக்கான கணக்கை சரி செய்து கொடுத்துவிட்டது என்றால் கட்டுமானப்பணீகளை துவக்கிவிட வேண்டும்.

தமிழில் இனிவரும் எல்லா திரைப்படங்களும் அவற்றின் கதாசிரியர்களுக்கே தெரியாமல் உலகப்படங்களுடன் சம்பந்தப்படுத்திதான் பேசப்படும். நமது இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்ட படத்தை இன்ன உலகப்படத்திலிருந்து டுமீல் செய்யப்பட்டது என்று எழுதிய பிற்பாடுதான் அந்த தமிழ்படத்தின் டைரக்டர்கள்,ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் கேமரா மேன்கள் , டச்சப் பாய்கள் , என எல்லாருமே பார்க்க வேண்டிய நிலை உருவாகிறது !எல்லாமே இவர்களே கொண்டுவந்துவிட்ட குரலால்தான் . உலகப்படங்களுக்கு இணை இல்லை ! இல்லை! என்று கூச்சல் போட்டதால்தான்.

படைப்பாளிகளுக்கு எழுதுவதற்கு விசயம் என்று ஒன்றுமே கிளிக் ஆகாத தருணங்களில் தான் திரைப்படங்களுக்கு விம‌ர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என்று இலக்கிய பத்திரிக்கையின் பக்கங்களை ஆக்கிரமிப்பதால்தான் அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது ! இதை இப்படியெல்லாம் கிடையாது கோமு.. நீ ஜல்லியடிக்கப்படாது என்று பேசப்பிடாது சார். அபகாலிப்பதோ பற்றீ எழுதுவாக இருந்தால் அதைப்பற்றீ மட்டும் எழுதுங்கள் . அதை ஆயிரத்தில் ஒருவனோடு சேர்த்தி எழுதினால் தான் விசயம் தீவிரமடைவதாக காட்டாதீர்கள். அவதார் படத்தைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தனித்து அதன் பிரமாண்டங்களை எழுதுங்கள் .அங்கே நொட்டியதாகவும் , இங்கே நொட்டாததாகவும் எழுதாதீர் நண்பர்களே ! அஞ்சரைக்குள்ள வண்டியை காப்காவின் உருமாற்றத்திற்கு இணையாகப் பேசாதீர்கள். அதை ரிலீஸ் செய்த மயில்ராவணன் பிளாக்காரரை மெல்கிப்ஸனுக்கு இணையாகப் பேசாதீர்கள்!அப்புறம் எல்லோரும் சிரிப்பதற்க்கு வாயைப்பயன்படுத்த மாட்டார்கள்.தொடரும்..........

நாளை

இப்போது சங்கர் நாராயனண் , பரிசல் கிருஷ்ணா இருவரது சிறுகதைதொகுப்புகளும் வந்துள்ளன. சங்கர் நாராயணனை கேபிள்சங்கர் என்றஅடைப்பெயரில்தான் எல்லோரும் விளிக்கிறார்கள். எனக்கு உடனே தோன்றியது சென்னையின் ஒரு பகுதியில் கேபிள் கனெக்ஷன் கொடுத்து சன் , ஸ்டார் ,சோனி என்று படம் காட்டி மாத வசூல் செய்பவரோ என்றுதான்.( அடியேன் லோக்கலில் ஒரு காலத்தில் செய்து கொண்டு இருந்தேன். அது என் தொழில் நெ
30)

........

Post Comment

4 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வால்பையன் சொன்னது…

சிங்கம் களம் இறங்கிடுச்சோய்ய்ய்ய்ய்ய்!

மயில்ராவணன் சொன்னது…

மெல்கிப்சன் உள்ளேன் ஐயா......

Cable Sankar சொன்னது…

தலைவரே... நான் அடிப்படையில் கேபிள் டிவி தொழில் செய்துவருபவந்தான்.