செவ்வாய், மார்ச் 02, 2010

வேட்டை ஆரம்பமாயிருச்சு டோய்!

எல்லாருக்கும் நமஸ்ஹாரம்!

அஜித்-விஜய் ரகசிய சந்திப்பு! அதிரடி ப்ளான்!

என்னடா கருமமா இருக்குதுன்னு புத்தகம் வாங்கி கொண்டு போய் கட்டிலில் நீட்டி விழுந்து படபடப்பாய் புத்தகத்தின் பக்கங்களில் விசயத்தை தேடினேன்! சென்னைக்கு மெரினாபீச்சுக்கு நம்பளை எல்லாரையும் கூப்பிட்டு நாங்க சினிமாவுல சம்பாசிச்ச காசுக பூராத்தையும் எடுத்துகோங்க நீங்களே! அப்படினு தூக்கி புடிச்சிகோங்க, புடிச்சிகோங்கன்னு வீசி எறிஞ்சிட்டுவாங்களோ! நாங்க ரெண்டுபேரும் பொண்டாட்டி புள்ளைங்களை விட்டுப்போட்டு தனிக்குடித்தனம் போறோம்னு சொல்வாங்களோ?
சினிமாவே ரெண்டுபேருக்கும் வேண்டாம்.. இலங்கை பிரச்சனை, ஜக்குபாய் பிரச்சனை,தண்ணீர் பிரச்சனை வாங்க வாங்க.. வரல்லின்னா கழுத்தைப்பிடிச்சு சினிபீல்டுல இருந்து தள்ளி விட்றுவோம்னு மிரட்டுறாங்க.. இந்த எழவெல்லாம் நம்மளுக்கு எதுக்கு? நேரா குடும்பத்தோட வெளிநாடு ஓடிப்போய் செட்டில் ஆயிடலாம்னு அதிரடி ப்ளான் போட்டுடாங்களோன்னு படிச்சிப் பார்த்தா.... ங்கொய்யாலே!

அதாவது பெருங்குடி மக்களே. தீவாளி நோம்பியன்னிக்கி, பொங்க நோம்பியன்னிக்கி ரெண்டு பேரு படமும் ரிலீஸானா எதோ ஒன்னு ஓடறதில்லையாம், பை நெம்புறதில்லையாம், அதுக்காக‌ வேண்டி தீவாளியன்னி அஜித்படம்னா அஜித்படம் மட்டும் தான், பொங்கலுக்கு அஜித் படம் வராது. விஜய் படம் தான். இப்படி கரைக்ட் பண்ணிக்குவோம்னு சமரச திட்டம் போட்டாங்க! இத எதுக்கு நாம பேசணும்? அப்படின்னு கேட்கப்படாது பெருமக்களே! எல்லாப்பக்கமும் எதை பேசுறாங்களோ அதை தான் நாமளும் பேசிக்கணும்! அதான் இப்போ இலக்கியம்,

தல போல வருமா! ஹேய் தல போல வருமா!?

வேட்டை ஆரம்பிக்கவே இல்ல டோய்!

--

தொடரும்

--
டைப்பிங் உதவி
வால்பையன்..


**************

Post Comment

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

தல கீழே என் யெரும் வந்துருச்சு!
டைப்பியது வால்பையன்னு இருந்தால் போதும்!

அஜித், விஜய் ஆட்டோ அனுபிச்சா நமக்கு தாங்காது!

:)

மயில்ராவணன் சொன்னது…

அவிங்கவிங்க துன்பம் அவிங்கவிங்களுக்கு.....
நல்ல செய்தி
கெட்ட செய்தி
சும்மா படி செய்திகளை!!!