செவ்வாய், மார்ச் 02, 2010

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

நேற்றே இன்று வரும் என்று குறிப்பிட்டு விட்டு சன் தொலைக்காட்சியை பார்த்தால் இதைவிட மேலான மேட்டர் நேற்று நெட்டுலகுக்கு கிடைத்து விட்டதால் சற்று காலதாமதத்துடன் இன்றைய பதிவு வெளிவருகிறது..


இதன் முந்தைய பதிவு

இனி தோழர் பெரியசுவாமி நேரம்.

நண்பர் தகதிமிகா தன் மனைவி லத்திகாவிடம் நமக்கு திருமணம் என்கிற பந்தம் ஏற்பட்டு காலம் எவ்வளவு ஆயிற்று என்றார்.லத்திகா விரலை ஒவ்வொன்றாக விட்டு விட்டு எண்ணி ஐந்து வருடங்கள் ஆயிற்று என்றாள். சரி இதை நாம் கொண்டாட வேண்டுமே என்றார். திட்டத்தை இருவருமே போட்டார்கள். ஹனிமூன் சென்ற ஊட்டிக்கு இப்போதும் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திட்டம் போட்டாகி விட்டதும் மளமளவென பேக்கப் செய்தார்கள். ஊட்டியில் பழைய நினைவுகள் ! விழியே கதை எழுது ,கண்ணீரில் எழுதாதே! மஞ்சள் வானம் தென்றல் காற்று , உனக்காகவே நான் வாழ்கிறேன்! அதே தங்கும் விடுதி ! அதே பதினேழாம் எண் அறை !

லத்திகா படுக்கையில் ஓய்வாய் விழுந்தாள். தகதிமிதா கைலியை உடுத்திக்கொண்டு பாத்ரூம் சென்றார். உள்ளிருந்து தகதிமிதா சிரிப்புச் சப்தம் லத்திகாவிற்க்கு கேட்கிறது. இதென்ன? 25 வருடத்திற்கு முன்பு இதே அறைக்குள் வந்ததும் கைலி கட்டி உள்ளே சென்றவர் சிரித்தார். அப்போது கூச்சத்திலும் வெட்கத்திலும் அவதியுற்றதால் கேட்கத்தவறி விட்டது. இப்போது ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தாள். அதன்படி தகதிமிதா வெளியே வந்ததும் லத்திகா , ஏன் சிரித்தீர்? ப்ளீஸ் டெல்மீ டார்லிங்! வொய் ஆர் யூ லாப்பிங்? என்று கேட்டாள்.

"
அதுவா கண்ணே ! அன்று நான் ....ச்சாவை பாத்ரூமில் என் உயரத்திற்கும் மேலாக சுவத்தில அடித்ததற்க்கு சிரித்தேன் அன்பே! இன்று அப்படித்தான் முயற்சித்து பார்த்து .. இதோ என் கால்கள் நனைந்து விட்டது! அதற்காக சிரித்தேன் டியர்"

(
எக்ஸ்டென்சியலிச முதல்பிரதியாக தன்னையே எண்ணிக்கொள்ளும் மனவியாதி பீடித்தவர்களின் அந்தரங்க சேஷ்டைகள் இப்படித்தான் இருக்கும்)

தமிழில் சிறுகதை எழுத்தாளர்களின் வரவு அதிகமாகி இருக்கிறது. இதுகளை எல்லாமே கதைகளாக எழுதலாமா ? என்று யோசிக்க முடியாதனவைகள் எல்லாமே சிறுகதைகளாக எழுதப்படுகின்றன. தமக்கென ப்ளாக் ஸ்பாட்டுகளை உருவாக்கிக்கொண்டு கட்டற்ற சுதந்திரத்தில் இன்று ஏராளமான நண்பர்கள் எழுத்தாளர்களாக உருவாகிறார்கள்.தங்களுக்கு நடந்த சம்பவங்கள் , நண்பர்களுக்கு நடந்த சம்பவங்களே இவர்கள் கதைகளுக்கான கரு. தீட்டத்தீட்டத்தான் அருவாளாகட்டும், வீச்சாகட்டும் கூர்மை பெறும். நீண்ட நாட்களாக என் தனிப்பட்ட எண்ணமாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் தங்களுடைய எழுத்துகளை புத்தகமாக கொண்டு வருவதில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இருந்தது.

முன்பு சிற்றிதழ்கள் என்று இருபத்தி நாலு பக்க ,ஒன்றுக்கு எட்டு சைஸ் புத்தகங்கள் நிறைய புழக்கத்தில் இருந்து வந்தன. அதில் எழுத வருபவர்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியரின் வேண்டுகோளின்படி பத்துவரி , இருவதுவரி கவிதைகள் எழுதிக்கொடுத்து நாஙகள் கவிஞர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ப்ளாக்ஸ்பாட் என்று சிற்றிதழ் நடத்துகிறார்கள். உடனுக்குடன் பின்னூட்டங்கள்! பின்னீட்டீங்க! கலக்கிட்டீஙக! சமுதாயத்தை சாக்கடையிலிருந்து தூக்கி சீர்கேட்டை தடுத்துட்டீங்க ! விமர்சனங்கள்தான்.

ஒரு நண்பரிடம் என்னதான் நடக்கிறது ஸ்பாட்டுகளுக்குள் என்ற கேள்வியை வைத்தேன். காலையில எழுந்து இன்ன சமையல் செஞ்சேன். புளியம்பிஞ்சு தொக்கு செய்தேன். சாப்பிட்டேன் ,காய்ச்சல் வந்தமாதிரி இருக்குது என்று ஸ்பாட்டில் எழுதிவிட்டார் என்றால் பின்னூட்டங்கள் சரமாரியாய் பறக்குமாம்!
உடம்பை பத்திரமாய் பாத்துக்கங்க ! டேபிளெட்ஸ் எடுத்துக்கஙக ! தொக்கு சாப்பிட்டா காய்ச்சல் .. டாக்டரை சீக்கிரம் பாருங்க! இப்படி ஐம்பது, அறுபது
பின்னூட்டங்கள் பறக்குமாம் !

ப்ளாக் ஸ்பாட்டுகளுக்கு நண்பர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள் அதி பயங்கர ஆச்சரியங்களாக இருக்கிறது . புலவன் புலிகேசி, தண்டோரா,மீன் துள்ளியான்,சைவ கொத்துப்புரோட்டா,வெட்டிப்பயல் என்று ! வால் பையன்ங்ற பேர்ல ப்ளாக் எழுதுறேன் தலை என்று அறிமுகமாக கை நீட்டியவரின் பின்புறத்தை நான் நோட்டமிட்டேன். நல்ல வேளை நன்கு வளர்ச்சிடைந்த நிலையில் ஒரு வால் இருந்தது. பெயர்கள் விளையாட்டுக்காய் வைக்கப்படுவதில்லை என்பது அப்போதுதான் புரிந்தது !
இப்போது சங்கர் நாராயனண் , பரிசல் கிருஷ்ணா இருவரது சிறுகதைதொகுப்புகளும் வந்துள்ளன. சங்கர் நாராயணனை கேபிள்சங்கர் என்றஅடைப்பெயரில்தான் எல்லோரும் விளிக்கிறார்கள். எனக்கு உடனே தோன்றியது சென்னையின் ஒரு பகுதியில் கேபிள் கனெக்ஷன் கொடுத்து சன் , ஸ்டார் , சோனி என்று படம் காட்டி மாத வசூல் செய்பவரோ என்றுதான்.( அடியேன் லோக்கலில் ஒரு காலத்தில் செய்து கொண்டு இருந்தேன். அது என் தொழில் நெ 30)

பரிசல் கிருஷ்ணாவை பரிசல்காரன் என்று விளிக்கிறார்கள். கொடுவேயில் பரிசல் ஓட்டுவதை பிரதான தொழிலாக கொண்டவரோ என்ற யோசிப்பு எனக்கு !
சங்கர் நாராயணன் தனது சிறுகதை தொகுப்பின் தலைப்பாக "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்று வைத்திருக்கிறார். சர்ரியலிசமும் பெப்ஸி கோலாவும் என்பது மாதிரி. சிறுகதைகள் பதிமூன்றும் வாசிக்க தங்குதடை இன்றி சரளமாய் இருக்கின்றன. இந்த மாதிரியான சரளமான வாசிப்பு அனுபவம் சாருவின் கதைகளீலதான் காணமுடியும். முத்தம் என்கிற முதல் கதையிலேயே அசந்துவிட்டேன். (இன்னாமா எய்துகிறாங்கோ மக்கா) தொகுப்பின் தலைப்புக் கதையை பட்டிக்காட்டான் முட்டாய் கடை பாத்து ஹாவென வாய் பிளந்து நிற்பது போலத்தான் வாசிக்க முடிந்தது. முன்பு சாருவின் கதைகளில் சரக்குகளின் பெயர் புதுமையும்,தீனிகளின் வகைகளும் ஆட்டம் பாட்டங்களையும் படிக்கையில் , தெரிந்துகொள்கையில் ஒரு எரிச்சல் அடிவயிற்றில் தோன்றும். மீண்டும் அதே ! சங்கர் எடுத்துக்கொள்ளும் பாலியல் சமாச்சாரங்களை விட வரும் பெண்களில் சுதந்திரமான நடவடிக்கைகள் வாசகனை திக்குமுக்காடச் செய்கின்றன.
துரை.. நான் ..ரமேஷ் சார் என்கிற கதை இந்த தொகுப்பில் நல்ல சிறுகதையாக இருக்கிறது. தலைப்பு தடுமாற்றமாக இருந்தாலும் ஆகச்சிறந்த கதை இது. ஒரு ஜீ . நாகராஜனோ, சுந்தரராமசாமியோ,சாருவோ நினைத்தால் கூட தம் கதையில் செய்யமுடியாத வேலையை எளிதாக போகிற போக்கில் செய்து விடுகிறார். பார்த்தால் மாம்பழ வாசனை கதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். போதும் சங்கர் ! இதற்குமேலும் சிறுகதை என்று எழுதி தொகுப்பு போட்டு சிறுகதையாளனாக காட்டிக்கொள்ள அவசியமேயில்லை. நான் படித்த கெழடு,கட்டைகளின் கதைகளை எல்லாம் இந்த தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தகுந்த நான்கு சிறுகதைகளால் தூக்கி கடாசிவிட்டீர்கள்!

எனது புத்தக அடுக்கில் சில தொகுப்புகள் உள்ளே வருகையில் செத்துப் போன எழுத்தாளர்களின் சிறந்த தொகுப்புகளை எடைக்குப் போட்டுவிடுவேன். சாக்னா கடை செலவுகளுக்கு அவைகள் எப்போதும் உதவும்! இந்த முறை விஜய் மகேந்திரனின் தொகுப்பு,ஷாராஜ் மொழிபெயர்ப்பில் ஸிதாரா எஸ்சின் சிறுகதைகள் என்று அடுக்கில் வந்ததால் எடைக்கு போன புத்தகஙகள் வரிசை
1.ராஜெந்திரசோழன் எழுதிய பரிதாப எழுத்தாளர் பரதேசி பண்டித புராணம் , நாவல் , சிறுகதைகள்.
2.சாருவின் ஜீரோ டிகிரி , பேன்ஸி பனியன் , சிறுகதைகள்
3.சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே,பல்லக்குத்தூக்கிகள்
4.பெருமாள் முருகன், கங்கணம்,கூளமாதாரி,திருச்செங்கோடு
5.பூமணி. நகுலனின் நாவல்கள் தலா மூன்று!பெயர்கள் எழுத மொடை
6.க.நா.சு,லா.ச.ரா.,எம்.வி வெங்கட்ராம்,இந்திரா பார்த்தசாரதி புத்தகங்கள் தலா நான்கு!

தேறிவிட்டது! சாக்னா செலவுக்கு தேறிவிட்டது!சங்கர் நாராயணன் தன் தொகுப்பில் போஸ்டர், நண்டு , தரிசனம்,ஆண்டாள், ஒரு காதல் கதை என்கிற குப்பைக் கதைகளையும் சேர்த்துள்ளார்.

" டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" பரிசல் கிருஷ்ணாவின் கதைகள் பதினேலு தொகுப்பில் நிரம்பி இருக்கின்றன . ஆரம்ப எழுத்தாளரின் சிறு சிறு தவறுகள் நிரம்பிய தொகுதிதான் என்றாலும் எனக்கு எல்லாக் கதைகளும் குதூகலம்தான். 20 வருடங்களுக்கு முன்பாக நானும் இப்படித்தான் எழுதி எழுதி நோட்டு நோட்டாக நண்பர்களுக்கு படிக்கக் கொடுத்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தேன்.

சாரு என்னிடம் ஒரு முறை கூறினார். உலகத்திலேயே மோசமான எழுத்து என்று ஒன்று இருந்தால் அது பெருமாள் முருகன் எழுத்துதான் என்று! அப்போது அது எனக்கு மண்டையில் ஏறவில்லை சரியாக! பின்னர்தான் கங்கணம் வந்தது! அவர் கருத்தை உறுதி செய்தது! மேலே எடைக்கு அவரது புத்தகங்களை போட்டு விட காரணமே இந்தத் தொகுப்புதான். இந்தத் தொகுப்பில் கூட நான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் சிலதி இருந்தன. என்னைப்பொறுத்த வரை அவரைப் படித்து புதிதாய் நான் தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை! அந்த விதத்தில் பெருமாள் முருகனுக்கு பரிசல் எனக்கு பெஸ்ட்.

ஒரு சின்ன விசயம்;
சமீபமாக ஜெயமோகன் என்கிற புதிய எழுத்தாளரின் புத்தகங்கள் வருவதாகவும் , பயங்கரமாய் எழுதுவதாகவும் நண்பர்கள் ஈரோட்டுவீதியில் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு இப்போதுதான் கேபிள்சங்கர், பரிசல்காரன் என்ற எழுத்தாளர்களையே தெரிய வருகிறது. கைவசம் அந்த புதிய எழுத்தாள நணபரின் புத்தகங்களை வீட்டில் படித்துவிட்டு சும்மா வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு அனுப்பி உதவினால் அவரது புத்தகங்கள் பற்றீ நானும் விமர்சிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு எத்தியோப்பிய மொழி தெரியாது! தெரிந்திருந்தால் அந்த மொழிக்கு மொழிபெயர்க்கலாம்.

பரிசல் கிருஷ்ணா, சங்கர் நாராயனண் இரண்டு தொகுப்புகளும் விலை :50.00 நாகரத்னா பதிப்பகம், 3ஏ , டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,பெரம்பூர், சென்னை 11.

..................

Post Comment

9 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

நல்ல கற்பனை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Karthikeyan G சொன்னது…

உங்களுடைய இந்த நயமான விமர்சனம் உடனடியாக இந்த இரு புத்தகங்களையும் படித்தே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது..

மயில்ராவணன் சொன்னது…

//சமீபமாக ஜெயமோகன் என்கிற புதிய எழுத்தாளரின் புத்தகங்கள் வருவதாகவும் , பயங்கரமாய் எழுதுவதாகவும் நண்பர்கள் ஈரோட்டுவீதியில் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். //

என்னா வில்லத்தனம்? ஜெயமோகன் புது எழுத்தாளர்.ஆனால் நான் அதிர்ச்சி அடைய மாட்டேன். மேலும், தக்கதிமிதாவின் விசிறிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல் அவர் பின்னே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எது பற்றியும் சுயமான சிந்தனையே இல்லை. தகதிமிதா எதைச் சொல்கிறாரோ அதைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பினீர்கள். பல லட்சக்கணக்கான அவருடைய ரசிகர்களுக்காக தகதிமிதா ஒருவரே சிந்தித்தார். அவர் எழுத்து அவ்வளவும் பேத்தலாக இருந்தன. அதனால் அந்த வலைப் பக்கமே நான் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன்....

மயில்ராவணன் சொன்னது…

ஸ்ஸ்ஸ் முடியல..நல்ல விமர்சனம் தலைவரே....தொடருங்கள்....நான் அஞ்சரைக்குள்ள வண்டியப் பிடிக்கணும்.

Cable Sankar சொன்னது…

மிக்க நன்றி உங்களது உள்ளார்ந்த வெளிப்படையான விமர்சனத்திற்கு.. மிக்க மகிழ்ச்சி

நிலாரசிகன் சொன்னது…

நல்ல விமர்சனம் ஜி.

pradeep சொன்னது…

வாமு,

இது தான் டாஸ்மார்க் குசும்பு!தினமும் எழுது செய்ய முயற்சி செய்யவும்.

பிரதீப் சொன்னது…

எம்பா தமிழ்நாடுல தான் மிக பெரிய கொடுமை நடக்குது .கொடுமை தாங்க முடியலை.எதிர்காலத்துல எழுத்தாழருக்கு பஞ்சம் இல்லை.அப்ப சாமி நம்மாள முடியல!!!!

பெயரில்லா சொன்னது…

வாமு சார், உங்களைபோல் எழுத்தாளர்கள் வளர்ந்து வரும் பரிசல் ,
கேபிள் சங்கர் போன்றவர்களை ஊக்குவிப்பது நல்ல விஷயம் .உங்கள்
கள்ளியையும் சாந்தாமணி நாவலையும் என் வலைதளத்தில் எழுதி
உள்ளேன் .http://www.grajmohan.blogspot.com