வியாழன், ஏப்ரல் 29, 2010

வேண்டுதல்

ஆலமரத்துப் பிள்ளையார் முன்
அவன் பக்திப் பரவசமாய்
வேண்டிக்கொண்டிருந்தான்.
செல்போன் சிணுங்கியது
"விநாயகனே வினை தீர்ப்பவனே"
நண்பன் தான்
என்ன? என்றான்
இருக்குமிடம் கேட்டான்.
உதவி செய் என்றான்.
இவன் மறுக்காமல்
திண்ணை ஏறிப்போய்
விநாயகர் காதில் செல்போன்
பிடித்துக்கொண்டு நின்றான்.
விநாயகனே! அப்பனே !
இன்று என் பெண் தோழிக்கு
இருபதாவது பிறந்த நாள்
அவளுக்கு வாழ்த்துச் சொல்லி
பரிசளித்துவிட்டு அப்படியேஎன்
காதலையும் சொல்லிவிடப் போகிறேன்
அவளும் மறுக்காமல் என் காதலை
ஏற்றுக் கொள்ளும் விதமாய்
நீ தானப்பா அருள் காட்டவேண்டும்
அதை மட்டும் நீ நடத்திவிட்டாயென்றால்
உனக்கு 108 நெத்திக்காய்கள்
உன் முன் உடைக்கிறேன்
இவன் செல்போன் அணைத்து
பாக்கெட்டில் போட்டுக் கொண்டு
நடையிட்டான்.

பச்சைக்கிளி என்கிற பா. ராஜாvukku


இனிது இனிது
சேலம் இலக்கிய இதழ்
2010 மார்ச்
..

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

காதல் 2010

கூட்டமாய் கொக்குகள்
தென் திசை நோக்கி
பறந்து செல்லும்
இந்த மாலை நேரத்தில்..
அவசரமாய் மயில்கள்
இரை பொறுக்கும்
இந்த மாலை நேரத்தில்..
உன் காதலை தக்க வைத்துக்கொள்ள‌
இந்த மலைப்பகுதிக்குள்
என்னைத் தேடி
ஏன் அழைத்தாய் என்ற‌
கேள்வியோடு நீ வந்ததும்
உன் தாவணியில்
கை வைக்கிறேன்
இதற்க்குத்தானா என்று
வழக்கம்போல் கேட்ட நீ
வட்டப்பாறையில்
படுத்துக்கொண்டு
சீக்கிரம்
இருட்டுக் கட்டுவதற்குள்
வீடு போகனும் ...
என்றபடி மார்பிலிருந்து
அலைபேசியை உறுவி எடுத்து
ஓரம் வைக்கிறாய் !
காதல்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது
ஏதேதோ வழிகளில் !

...

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 23, 2010

காதல் 2000

இந்தக் கிலுவை மரத்தினடியில்தான்
எப்போதுமே நானும் அவளும்
வாழ்வது எப்படி ? என்று
பேச்சாய் பேசிக்கொண்டிருப்போம்.
உண்மைக்காதல்கள் எல்லாமே
தோற்றுப்போவதுதான் பயம்
என்று மழை நாள் ஒன்றில்
விசனமாய் நனைந்தபடி பேசியவளுக்கு
இழுத்தணைத்து முத்தம் கொடுத்தேன்
காமிரா இப்போது கிலுவை
மரத்தைத்தான் காட்ட வேண்டும்.
பின்னர்தான் விசித்து விசித்து
அழுதபடி அமர்ந்திருப்பவளைக்
காட்டவேண்டும் !‍ அவள்
என்னை இந்தமாதிரி ஆள்
அரவமேயற்ற இடங்களுக்குத்தான்
எப்போதும் வரச்சொல்கிறாள்.
நானும் வந்து போனேன்
ஒரு பொம்மை போல!
இதோ இந்த கிலுவை மர
விழுதினில் தான் தன் தாவணியில்
தூக்கிட்டு அவள் தொங்கிப்போனாள்
ஒரு வருடம் முன்பாக!
நான் இப்போதும் இந்த
மலைப்பகுதிக்கு வந்தும்
போய்க்கொண்டும்தான் இருக்கிறேன்
இப்போது என்னை
வரச்சொல்பவள்
கணவனை ஏமாற்றுபவள்!


படங்கள் : இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை
..

Post Comment

சனி, ஏப்ரல் 17, 2010

ராஜா சின்ன ரோஜா

திரைப்பட விமர்சனம் என்று நாய் பேய்களெல்லாம் இலக்கிய புத்தகங்களின் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் 2010 ல் இருக்கிறோம். நாமும் எழுதாவிடில் தள்ளிவைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வைத்துவிடுவார்கள் போலுள்ளது. நாம் புதிதாக எம் ஜி ஆரின் இதயக்கனி, அரசகட்டளை, அன்பேவா படங்களுக்குத் தான் எழுதவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் 89 ஜூலையில் வெளிவந்த சூப்பர்ஸ்டாரின் படத்திற்கே எழுதிவிடலாம் என்று இறங்கினால் அதை முழுமையாகவும் சுத்தமாகவும் செய்யவேண்டும்.

இந்தப்படத்தை கோவை ராஜா திரையரங்கில் ரிலீஸ் செய்து இருந்தார்கள். பாடாவதி தியேட்டர் நானும் நண்பர் ஒருவரும் மதியக்காட்சிக்காக கியூவில் வெய்யிலில் சாலை ஓரமாக வாகன போக்குவரத்து இரைச்சலில் நின்று காத்திருந்து டிக்கெட் எடுத்து சென்றோம்.முன்பாக இதே திரையரங்கில்தான் பாக்யராஜின் இன்று போய் நாளை வா பார்த்தது. அதுவும் மௌனகீதங்கள் என்கிற அவரின் படத்திற்க்கு நூறு நாட்களுக்கு மேலாகியும் டிக்கெட் கிடைக்காத ஒரு காரணத்திற்க்காக!
இருதயா என்ற மற்றொரு தியேட்டர் அதில் பிரமிளாவின் அந்த மாதிரி மலையாளப்படங்களை போடுவார்கள்,போஸ்ட்டர்களில்தான் அந்த பெண்மணி கண்களை ஒரு மாதிரி கிறக்கமாய் வைத்துக்கொண்டு இருப்பார். எப்படியாவது அந்த படங்களுக்கு சென்று விடுவது சாலச்சிறந்தது,ஆனால் தியேட்டர்காரர்கள் என்னை ஏமாற்றுவதில் குறியாய் இருந்தார்கள்.பிரமிளா தன் வீட்டு வேலைக்காரனை சாடையாய் கூப்பிட்டு ஆரம்பிக்கையில் சண்டை வந்து ஜீப் பறக்கும்! மேம்பாலத்திற்கு அடியில் முருகன் என்றொரு தியேட்டர் . பத்துப்படங்கள் வரிசையாய்ப் பார்த்தால் ஏதாவது ஒரு படத்தில் ஆண்களும் , பெண்களும் படுக்கையில் உருளுவதை காட்டிவிடுவார்கள். இப்போது அந்த தியேட்டர்களே கிடையாது.

சரி ராஜா சின்ன ரோஜாவிற்க்கு வருவோம். அமர்க்களமான ரஜினி பட வரிசையில் இதுவும் ஒன்று ! வழக்கமாக ரஜினி அம்மாவை கொன்றவனையோ , அப்பாவை ஒளித்து வைத்திருப்பவனையோ தான் சண்டைக கட்டி முடிக்க சுபம் விழும். குழந்தைகளோடு ரஜினி இதில் கொஞ்சி விளையாடுகிறார். கௌதமியோடு அவ்வப்போது டூயட் . ஐந்து சண்டைக்காட்சிகள். இப்படித்தான் ரசிகர்களை அவர் திருப்திபடுத்தவும் ,விசிலடிக்கவும் தன் படங்களில் வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். ஏவிஎம்மின் மசாலா தூவல் இந்தப்படத்திலும்தான். சிவாஜியிலும் அப்படித்தானே!

இடி இடிப்பதற்காக கௌதமியும் , குழந்தைகளும் ரஜினியோடு ஒட்டிக்கொள்கிறார்கள். சுவையோ சுவை! "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்கொழந்தையும் சொல்லுமே" பாடலுக்கு தியேட்டரே விசில் பறத்தி ஆடியது. கலர் கலராக வேட்டுக் கிளப்புகிறார்கள். ரவிச்சந்திரன் தனது பாத்திரத்திற்கு அழுத்தமான நடிப்பால் மெருகு ஊட்டியிருக்கிறார். சின்னி ஜெயந்த் என்கிற காமெடியரை கொஞ்ச நேரம் உலவி விட்டு காணாமல் போய்விடுகிறார். பேபி ஷாலினியிடம் ஏராளமாய் எதிர்பார்த்து தாய்க்குலங்கள் ஏமாற்றமடைந்தார்கள்.

Sஸ் சந்திரன் , கோவை சரளா நம்மை சிரிக்க வைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ரகுவரன் இனி கவனமாய் நடிக்கச் சொல்லி அட்வைஸ் செய்யலாம் என்றால் இறந்து போய் விட்டார். சிவா என்றொரு படத்திற்க்கு இது பரவாயில்லை. நூற்றூக்கு ஐம்பது மார்க் தரலாமா நாம்? மொத்தத்தில் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்க ஏதுவான படம் ராஜா சின்ன ரோஜா! வாமுகோமு விமர்சனமே சினிமாவுக்கு எழுத்லை என்று எவரும் இனி சொல்லமுடியாது.
குட்டி என்றொரு படம் ! ஸ்ரேயா என்கிற ஆத்தாளை அழகான பையன் காதலிக்கச் சொல்லி கல்லூரியின் மாடியில் நின்று குதிக்கப் போகிறேன் என்கிறான். ஆத்தா ஐ லவ யூ என்கிறது ! இதற்கு அந்த பையன் குதித்தே செத்திருக்கலாம். பார்த்தால் தனுஷ் வந்து விடுவார். அவரும் ஆத்தாவிடம் ஐ லவ் யூ என்கிறார். இப்படிக்கொடுமையை பார்த்துத் தொலைப்பதற்கு நண்பர்களே ராஜா சின்ன ரோஜா பெஸ்ட். காதல் சுட்டுப்போட்டாலும் முகத்தில் காட்டவே தெரியாத சண்டைக்காரப்பயல் மூன்று பெண்களை காதலிப்பதாக அதே வாரத்தில் படமெடுத்து என்னை நொங்கெடுத்தார்கள் ! அந்த மேலே சொன்ன ஆத்தாளுக்கு தமிழ்ப்படம் திண்டில் அமர்ந்திருந்த வெண்ணிற ஆடை மூர்த்தி பூக் கொடுத்து ஐ லவ யூ சொல்லியிருந்தால் .. சொல்வதென்ன .. நினைக்கிலேயே வயிறு நிரம்பிவிட்டது எனக்கு !

வலைக்குள் சும்மா எட்டிப்பார்ப்பவர்கள் இனிமேலும் திரிசூலம் , சந்திப்பு , லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்கிற படங்களுக்கு விமர்சனம் எழுதலாமா ! வேண்டாமா என்று சொல்லிவிட்டுபோங்கள் ! ஆற்றவேண்டிய கடமையும் , பணீயும் இருக்கிறதல்லவா !!

...

Post Comment

புதன், ஏப்ரல் 07, 2010

கதவை திற நாய் உள்ளே வரட்டும்

முந்தைய பதிவு காண :(தலைப்பை கிளுக்கவும்)
http://vaamukomu.blogspot.com/2010/04/blog-post.html


மூச்சுப் பயிற்சியில் இத்தனை வித்தைகளும் உண்டு.பாலுணர்வு சக்தி ஆழத்திற்கு சென்று விடும்.மனிதனின் மிக நுண்ணிய ஆன்மீக தேடலுக்கு குடலினி யோகா நுண்ணிய விஞ்ஞானம்! ஆனால் இயற்கையுடன் கூடிய புத்தர், விவேகானந்தர் காலங்களோடு இவை முற்றுப் பெற்று விட்டன! காசிக்கு நான் சென்றதில்லை.அங்கு சாமியார்கள் கஞ்சா வ‌டிப்பதற்கு காரணம் உள்ளது. நம் உள்ளூர் ஈஸ்வரன் கோவில்களிலும் சாமியார்கள் கஞ்சா புகைக்கிறார்கள்.நான் நேராகவே காரணம் கேட்டு தெரிந்து கொண்டேன்.உங்களுக்கு இப்போது அதை நான் சொல்லப் போவது இல்லை. தவிர இது ஆன்மீக கட்டுரையும் அல்ல. முற்கள் மீதும்,ஆணிப்படுக்கை மீது படுப்பவர்களைப் பற்றியும் மீண்டும் சமயவாக்கில் பேசலாம்.

நமது எழுத்தாளர்கள் ஆன்மீக தேடல்தான் அடுத்த பயணம் என்று வாய்க்குள் விரல் விட்டு லிங்கம் எடுக்கும் வித்தைக்காரர்களையும்,கதவை திறந்தால் நாய் தான் உள்ளே வரும் என்று தெரியாமல் புகழ்பாடி திரிந்தார்கள் ஆனால் இப்படியானவுடன், எனக்கென்ன தெரியும் நல்லவர் என்று நினைத்தேன் என்கிறார்கள்.(எழுத்தாளர்கள் என்றால் எல்லாரையும்

அல்ல) நான் நினைக்கிறேன் ஒருவேளை பைசா வாங்கிக் கொண்டு எழுதினார்களோ? நாமெல்லாம் அப்பாவிகள். வேப்பை மரத்தில் பால் வடிகிறது என்றாலே சந்தனம் குங்குமம் மரத்திற்கு இட்டு பூசை செய்வோம். யேசுநாதர் தண்ணீரை ஓல்டுமங்காக மாற்றினார் என்றதும் அவரை மந்திரவாதி என்று அழைக்காமல் கடவுள் என்றழைத்தோம். கடவுள்களுக்கு குண்டலினி ஆற்றல் உண்டு.ஆனால் மனைவியர்கள் அதிகம்! நாம் எதையும் யோசிப்பதேயில்லை. போகிற போக்கில் தீயை வைத்துவிட்டு கொந்தளிக்கிறோம். நித்தியானந்தா மட்டும் அல்ல! இன்னமும் அவரையொத்த சாமியார்கள் 8 வயதிலேயே குண்டலினி பெற்றதாய் வரலாறோடு வருவார்கள்.பிரசங்கம் செய்வார்கள். ஒரு பிரசங்கம் ஒரு மணிநேரம் என்றால் 11லட்சம் கேட்பார்கள். நாம் கொடுப்போம்.நமக்கு தேவை நம்மை வழிநடத்திச் செல்ல ஒரு புனித சாமியார். ‘ஆட்டம் ஆண்டவனின் கலை ஆடுங்கள்” என்பார் அவர். ஆடலாம் அப்பல்லோவிலோ, ஜீ.ஹச்சிலோ முதலில் உங்களது குறியை வெட்டிவிட்டு உச்சா போக மட்டும் ஒரு துவாரத்தை வைத்துக் கொண்டு வந்து எங்களை ஆடச்சொல்லுங்கள்..என்று கையோடு நாங்களே ஜி.ஹச்சுக்கு கூட்டிச் செல்வோம்.11 லட்சம் செலவானாலும் பரவாயில்லை. அடுத்த கூட்டத்தில் இருபதாக வசூலித்து
கொடுத்து விடலாம்.சாமியார்களின் ஆன்மிக சொற்பொழிவுகளை நாம் கேட்க இன்னமும் தயார் தான்.ஆனால் துவாரம் மட்டுமே சாமியாருக்கு இருக்க வேண்டும். பனிரெண்டாவது பாஸ் செய்த என்னால் இவ்வளவு தூரம் தான் யோசிக்க முடியும்.

பாவை பொறியியல் கல்லூரியில் நித்யானந்தா தியான பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார். மாணவ மாணவிகள் தலா இரண்டாயிரம் கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.வேற்று மத மாணவ மாணவிகளும் கூட. மாலை 4மணியிலிருந்து இரவு 12 மணிவரை பயிற்சி.ஆனந்த தாண்டவம் ஆடச் சொல்லியவர் ஆட்டம் முடிந்ததும் படுக்கச் சொல்லி
எல்லோரும் இறந்து விட்டீர்கள் என்றாராம்.எழுப்புகிறேன்...உயிர்ப்பிக்கிறேன், என்றாராம். பிறகு என்னை வந்து ஆரத் தழுவுங்கள்..பரஸ்பரம் கட்டிப்பிடித்து காதலை வளர்த்துக் கொள்ளுங்கள்; என்றாராம். கல்லூரி நிர்வாகம் உற்சாகப்
படுத்தியதாக நக்கீரன் பிப்-20 2008 இதழில் செய்தி உள்ளது! பிராக்டிகல் மார்க் எல்லாம் கல்லூரி நிர்வாகத்திடம் இருப்பதால் வழியே இல்லாத மாணவர்கள் எல்லாம் கடனோ உடனோ வாங்கி பணம் கட்டி தியான பயிற்சியில் கலந்து
கொண்டிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்களில் எந்தவிதமான மத வழிபாடுகளும் கூடாது என்பது அப்பாவிகளுக்கும் தெரியும்.

இந்த அவசரயுகத்தில் யாரும் ஞானம் அடைய முடியாது! ரேடியோ அலைவரிசை,டிவி சானல்களின் அலைவரிசை, செல்போன்களின் அலைவரிசை என்று ஏகப்பட்ட அலைவரிசைகள். தனித் தீவுகளுக்குச் சென்றாலும் ஞானம் பெறமுடியாது!

நான் ஞானம் பெற்றவன் என்று உங்களிடம் கூறினால் சிரிப்பீர்கள், அதற்காக நான் நீளமான தாடிமுடி,சடைபோல் முடி, காவி துண்டு,வேட்டி என்று புதுகெட்டப்பில் உங்கள் முன் நின்று நான் ஞானம் அடைந்தவன் என்று சொன்னாலும் சிரிப்பீர்கள்,

பைத்தியகாரன் என்பீர்கள்.இதைத்தான் அவர்களைப் பார்த்தும் உங்களை சிரிக்கச் சொல்கிறேன். ஞானமடைந்தவனுக்கு பணம் எதற்கு? அள்ளி அள்ளி நீங்கள் கொடுத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து நடிகைகளை கூட புணரத்தான் ஆசை வரும்.

நீங்கள் இதை எங்குமே கேள்விப்பட்டிருக்க முடியாது.வேறு வழியும் இல்லை.இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ராமசாமியை உங்களுக்கு தெரியும்.நம்ம ராமசாமி தான்.ஏலியனை நோக்கி பிரேமானந்தா பிரச்சனையின் போதே தவம் இருந்தவர்.வருடங்கள் ஆகிவிட்டது அல்லவா? மறந்திருப்பீர்கள். வருடக்கணக்காக பிரார்த்தனை செய்த ராமசாமியின் எதிரில் ஏலியன் தோன்றினார் மாறுவேடத்தில்! எந்தக் கடவுளும் திரைப்படங்களில் தான் சிறப்பான உடைகளுடன் தலைப்புறத்தில்
ஒளிவட்டம் சுழல தோன்றுவார்கள். ராமசாமிக்கு மோப்ப சக்தி அதிகம். தன்முன்னே தோன்றிய ஏலியனை கடவுள் என்று அறிந்து கொண்டார். ஏலியன் ராமசாமியின் தீவிர வேண்டுதலை விசாரித்து விட்டு தேவையை கேட்டது! எதற்காக கடவுளை நோக்கி தவம் இருந்தோம் என்பதை ராமசாமி மறந்தே போய்விட்டார்.

நான் சற்று யோசிக்கிறேன் என்று கூறிவிட்டு யோசித்தவர் கடவுள் என்கிற ஏலியனிடம் முதலில் வயிறார சாப்பாடு கேட்டார்.அதை ஏலியன் நிறைவேற்றியது! சாப்பிடும் போதே அவருக்கு ஞாபகம் சுழல்வட்டம் போட்டு வந்துவிட்டது! வேறு கேள், என்றது ஏலியன்.சாமியார்கள் உலகில் எங்கெங்கு நிறைந்திருக்கிறார்களோ அங்கு அவர்களுக்கு பாலியல் எண்ணம் வ‌ரக்கூடாது!

அப்படி என்றால் என்ன என்று யோசிக்கவும் கூடாது! என்றார்.ஓகே! அதுவும் நிறைவேற்றியாகி விட்டது! கடைசியாக ஒன்றே
ஒன்றைக் கேள்! என்றது ஏலியன். யோசிக்கிறேன் என்ற ராமசாமி யோசித்துக் கொண்டேயிருந்தார்.ஏலியன் வெயிட்டிங்கில்!

கடைசியாக,”எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்..நீங்களே சொல்லுங்கள்” என்றார் ராமசாமி.

ஒரே ஒரு விருப்பம்....அது தான் ஆசை இல்லாமை! அதை கேள்” என்றது ஏலியன்.

கீதையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.படிக்க அது சுவாரஸ்யம் மிகுந்தது! 15,16 வயது பையன் படித்தால் அதை அந்த வயதிற்கு ஏற்றபடிதான் அவனால் புரிந்து கொள்ள முடியும். 30.35 வயதானவன் படிக்கையில் காதலை அதில் புரிந்து கொள்ள முடியும்.ஐம்பது வயது தூண்டியவன் படிக்கையில் முற்றிலும் புதிதாக அதை மறுவாசிப்பு செய்கைஇல்

உணரமுடியும். மரணம் முக்கியத்துவம் கண்டிப்பாக பெறும். வாழ்க்கையை துறந்து பறந்து செல்லக் கூடியதாக திரும்ப திரும்ப படிக்கையில் உண்ரமுடியும். காந்தி அஹிம்ஸாவாதி! அவர் தாய்க்கு ஒப்பானது கீதை என்று குறிப்பிடுகிறார்.

எழுதியவரின் மகிழ்ச்சிக்காக கீதையில் வன்முறை நிகழவில்லை. யார் படிக்கிறார்களோ அவர்களுக்காக அவைகள் எழுதப்பட்டவை. மடாலயம் என்பது பள்ளிக்கூடத்திற்கு இணையானது. ஆசிரமம் அப்படியல்ல.அது ஒரு குடும்ப அமைப்பு கொண்டது! ஆசிரமம் என்பது கல்விக்கூடம் அல்ல. ஆசிரமம் ஞானம் பெற்ற ஒருவரை சுற்றி அமைந்தது! குரு இறந்தவுடன் ஆசிரமம் மறைந்துவிடும். இங்கு நித்தியானந்தா மறைந்தவுடன் ஆசிரமம் மறைந்தாகிவிட்டது!ஆசிரமங்களில எதற்காக சந்தனக் கட்டைகள் என்பதும் எனக்கு விளங்கவில்லை.

விவேகானந்தர் ஒரு இந்து சந்நியாசி.அவர் ஞானம் பெறாதவர்.ஆனால் அமெரிக்க பிரஜைகளை முழுவதுமாக கவர்ந்தவர் அவர் ஒருவர்தான்.அமெரிக்காவில் உலகமதங்களின் மாநாட்டில் எல்லா மதத்தினரும் பேசினார்கள் மக்கள் முன்பாக.கிறிஸ்துவ மதபோதகர்களொழுங்குபடுத்தப்பட்ட இயந்திரம் போல் பேசிய பிற்பாடு கம்பீரமாக பேச்சை ஆரம்பித்தார்
என்று குறிப்பிட்டுள்ளனர்.”சகோதரர்களே,சகோதரிகளே!” இப்படித்தான் ஆரம்பித்தாராம். ஒரே ஆரவாரம். இதுதான் அசாதாரணத்திலிருந்து சாதாரணம் என்பது! விவேகானந்தர் அங்கு பேசியவை எவையும் முக்கியமானவை அல்ல! உங்களில் ஒருவன் என்கிற அந்த ஆரம்பம் தான் காரணம். விவேகானந்தர் எந்தவித சட்டதிட்டங்க்ளையுமறியாத சந்நியாசியாக
இருந்தவர்.

கிறிஸ்துவ மதம் பாதிரியார்களுக்கு ஐந்து வருட பயிற்சி கொடுக்கிறது.பைபிளின் ஒவ்வொரு வாசகத்தையும்
படிக்கும் போதும் கைகளை எவ்வளவு உயரம் தூக்க வேண்டும் என்றும் கூட பயிற்சி அளித்து அனுப்புகிறது! அதனால் தான் இயந்திரம் போல அவர்கள் செயல்படுகிறார்கள்.அவர்களுக்கு குண்டலினி பற்றி அக்கரையில்லை.கண்ணுக்கு தென்படும் கன்னியாஸ்திரிகளைக் கர்ப்பமாக்க முயலுவார்கள்.அங்கே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது! எங்குமே அடக்கிவைக்கப்படும் பாலியல் வேறு வேறு வன்முறைகளில் தான் வெடிக்கிறது!

சாவடியூர் கிராமத்தில் ஃபாதர் அமலநாதன் மற்றும் ஞானப்ரகாசம் பைபிள் போதனைகள் பற்றிய விளக்க பயிற்சி முகாமை ஒரு மாதம் நடத்தினர். சுற்றுலா என்று தும்பலஹள்ளி டேமுக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.சுமித்ராமேரி என்ற பள்ளி மாணவியை அமலநாதன் கர்பழித்தார்.பைபிள் படிப்பது மனதுக்கு நிறைவான காரியம். இதை யாரும் கிறிஸ்துவ மதத்தில் மறுக்கமாட்டார்கள். நானே பைபிள் படிப்பேன்.வரிசையாக தொடர்பு விட்டுப்போகுமே என்று கூட வாசிக்க வேண்டியதில்லை. எந்த இடத்துக்கும் நுழையலாம். மண்டைக்குள் ஏராத அளவுக்கு அது கடினமான விசயங்களை தாங்கியதுமல்ல.பைபிளை
விளக்க வந்த பாதிரியார் சுமித்ராமேரியின் வயிற்றை உப்ப வைத்துவிட்டார்(ஜனவரி-16 2008 நக்கீரன்) ஆன்மிகம் என்னும்
அரிதாரம் பூசிக்கொண்டு காமலீலை புரியும் சாமியார்களின் கொட்டம் என்றுதான் அடங்குமோ! என்கிற வேதனையாக முடிந்தது.

மதம் என்கிற ஒன்றில்,அதைப்பற்றி பேச்சில் இந்தியா எப்போதுமே அதி தீவிர கவனமுடையது!இங்கு எல்லாருமே அதிதீவிர மதப்பற்றாளர்கள் தான்.அதனால் தான் சாமியார்கள் இங்கு சுலபமாக தலை எடுக்கிறார்கள்.சுருட்டு சாமியார்,துண்டு சாமியார் என்று பிரகடனப்படுத்தி மக்கள் மத்தியில் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.கோவை பகுதியில் ஒரு சாமியார் உலாவினார்.அவர் இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்.அவர்,பிரச்சனை என்று பெண்கள் வந்தால் அவர்களது
உள்ளாடைகளை கொண்டு வரச் சொல்லுவார்.அதை வைத்துதான் மந்திரிக்க வேண்டுமென்பார்.ஆனால் யாருமே யோசிக்கவில்லை.சாமியார்கள் அதிதீவிர நம்பிக்கையாளர்களை மிக எளிதாக ஏமாற்ற கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் உள்ளாடைகளை வைத்துக் கொண்டு அந்தச் சாமியார் எதைப் புடுங்கி கத்தை கட்டுவார்? அதைச் செய்யாதே, அது தவறு, இதை செய்,என்று சிறுவயதிலிருந்தே போதனைகளைப் பெற்றுதான் நாம் வளர்ந்திருக்கிறோம்.அதனால் தான் இன்னமும் எதைச் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் உடனே அதை செய்யக் கிளம்பி விடுகிறோம்.

ஒரு சின்ன சம்பவம்: அறிந்தவர் வீட்டில் ஒரு ஆண்குழந்தை பிறந்திருந்தது.எல்லோருமே போய் பார்த்து வந்துவிட்டார்கள்.நான் ஒருவன் தான் அந்த குழந்தையை சென்று பார்க்காமலேயே காலம் தாழ்த்தியிருந்தேன்.கடைசியாக அந்த குழந்தையை எட்டு மாதங்களுக்கு பிற்பாடு சென்றுதான் பார்த்தேன். பெரியப்பா வந்தாச்சி சாமி, என்று என்னிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டார்கள்.நானும் தோளில் தூக்கி போட்டுக் கொண்டேன். குழந்தை என்னை யார் என்று உற்று
உற்று பார்த்தது!பெரியப்பாவின் அடையாளம் பார்த்து பழகுது பாரு என்று பேசினார்கள்.இந்த நேரத்துக்கு யாரா இருந்தாலும்
மூஞ்சில ஒரு குத்து விட்டிருக்கும்....தேஞ்சாமி பெரியப்பனை குத்து உடலியா? என்ரு கேட்டார்கள்.எனது நோக்கியா காமிரா
செல்போனில் பாடல் ஒன்றை வைத்து குழந்தையின் கையில் கொடுத்து விட்டேன்.சுற்றிலும் நின்றிருந்த ஒறவு சனங்களின்
மனதிற்குள் பரபரப்பு கூடிக் கொண்டது! கீழே போட்டுடுவானுங்க, வாங்கிக்கங்க, என்றே சப்தமிட்டார்கள்.குழந்தை செல்போன்
பட்டன்களை அழுத்தியது.பாட்டு நின்றது!அதாகவே அழுத்தி பாடல் வந்ததும் மீண்டும் நிறுத்தியது! பெரியப்பன்கிட்ட குடுத்திடு சாமி,வெலை அதிகமானதாட்ட இருக்கே! சப்தம்தான்.இவர்கள் வீணாக குழந்தையை கலவரப்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றியது. குழந்தையின் தந்தை வந்தார்.கீழாற போட்டுருவானுங்க..வாங்கி ஜோப்புல வையுங்க,என்றார். குழந்தை என்கையில் அரைமணிநேரம் இருந்தது!செல்போனை அது கீழே போடவில்லை! ஒன்று நிச்சயம். கீழே அமர்ந்திருக்கும் குழந்தையிடம் கொடுத்தால் அது நிலத்தில் கண்டிப்பாக தட்டிப் பார்க்கும்.

பிரம்மச்சாரிகள், சாமியார்கள் தங்களுடைய விந்துசக்தியை உள்ளேயே தேக்கி வைப்பதால் அவர்களது உடம்பு எப்படியாவது அதனை வெளியேற்றிவிட துடிக்கும். திருமணமாகாத வாலிபர்களுக்கு சொப்பனஸ்கலிதம் வாய்ப்புகள் தான். சாமியார்களின் முழு வாழ்க்கையுமே பாலுணர்வால் நிரம்பிவிடும்.அது அவர்களை வாட்டி வதைக்கச் செய்யும். அதைப் புறக்கனிக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது நடப்பதில்லை.ஒரு சில சாமியார்கள் தவறு செய்வதால் சில நல்ல சாமியார்கள் பெயரும் கெடுகிறது என்ற பேச்சு உலவுகிறது! இங்கு நல்ல சாமியார்களும் வேண்டாம்.முடுக்குங்கள்.பேச்சே வேண்டாம்.நீர் நல்ல சாமியார் என்று எங்களிடம் கூறவேண்டாம்.இருந்துகொள்.நீவிர் நல்ல சாமியார்தான் ஆனால் ஓடிப்போ காசிக்கு!

தமிழ்நாட்டில் குடில் அமைத்துக் கொண்டு கொட்டமடிக்க வேண்டாம்.இடத்தை காலி பண்ணு. ஆனியே புடுங்க வேண்டாம்.

ராம்தாஸ் என்பவனை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. அவந்தான் ஒரிஜினல் அக்மார்க் காதல் மன்னன்.நீங்கள் திரையில் பார்க்கும் மன்னர்கள் எல்லோருமே டம்மி பீஸ்கள். ராம்தாஸுக்கு ஏராளமான காதலிகள்.கிருஷ்ணாவிற்கும் காதலிகள் உண்டு.கிருஷ்ணா சாடிஸ்டாக சித்தரிக்கப்படவில்லை. ராம்தாஸ் தன் காதலியர்களை ஊசி,ஆணி இவைகளைக் கொண்டு அவர்களின் உடம்பை புண்ணாக்குவான்.சாட்டையால் மாட்டை அடிப்பது போல அடிக்கவும் செய்வான்.அவனிடம் எப்போதுமே இந்தப் பொருள்கள் பையில் இருக்கும்.ரத்தம் அவர்கள் உடம்பில் கசிய ஆரம்பிக்கும்.அவர்களை அதன்பிறகு தான் உடலுறவு கொள்வான்.

உங்களுக்கு எதைப் பார்த்தாலும்,கேட்டாலும் ஆச்சரியம்தான் அடைவீர்கள். அவனுடன் படுக்கையில் பகிர்ந்து கொண்ட பெண்கள் அனைவரும் ராம்தாஸ் போல யாருமே தங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உபயோகப் படுத்திக்
கொள்ளவேயில்லை...அதுதான் முழு ஈடுபாடு...அவன் எங்களை சாப்பிட்டான் என்றே கூறினார்கள். அவனோ
உண்மையாகவே அவர்களை நேசித்தான். அடிவிழுகையில் பெண்களின் உடம்பில் சக்திக்கு தீ வைக்கப்படுகிறது! அது எரிகையில் காம உணர்வுடையாதிகிவிடுகிறது! அடி ஒவ்வொன்றுக்கும் உடம்பு தூண்டப்படுகிறது! கவனித்திருக்கலாம் உங்கள்
அக்கம்பக்க வீடுகளில் கூட நீங்கள். குடிகாரக் கணவர்கள் தங்கள் மனைவியரை மிதிமிதியென மிதித்து முதுகில் குத்துவார்கள்.
தலைமுடியை பிய்த்து எறிந்து விடுவது போல இழுத்து சாத்துவார்கள். நீங்கள் நினைக்கலாம்....இன்று அந்தப் பெண்ணை அவன் கொன்று விடுவான் என்று! ஆனால் எதுவும் நடக்காது! காலையில் அந்தப்பெண் வாசல் தெளித்து கோலம் போட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பாள். வாழ்க்கை உங்களைத்தான் இப்போது பயமுறுத்தும்! துன்புறுத்தினால்,வலியினால் தூண்டப்பட்ட பின்பு உடலுறவிற்குள் செல்கையில் அதிக மகிழ்ச்சி உணர்வுகளை உற்பத்தி செய்கிறது உடம்பு. பயங்கர பசியில் இருந்து உணவு சாப்பிடுவது போல! ஒவ்வொரு இன்பத்திலும் வேதனைகள் பல உள்ளன.

ஒரு சம்பவம் கற்பனையாக :-
நித்யானந்தா,அமலநாதன்,முஜீப் மூவரும் பத்து வருடம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.ஜெயிலர் இவர்களிடம் ‘நீங்கள் பத்து வருடம் உள்ளே இருக்கப் போகிறீர்கள்...உங்கள் தேவை என்ன? ஒரே ஒரு பொருள் கேளுங்கள்..நிறைவேற்றி தருகிறோம்’ என்றார். நித்யானந்தா “பெண்” என்றார். முஜீப் “செல்போன்” என்றார்.
அமலநாதன் “சிகரெட்” என்றார்.

பத்து வருடங்கள் கழித்து மூவரும் வெளியே வந்தார்கள். முஜீப் செல்போன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக ஏராளமான பணம் சம்பாதிருந்தார். அதேபோல் அமலநாதன் வெளியே செல்கையில், “ நெருப்பு பெட்டி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே சென்றார். நித்யானந்தா பத்து குழந்தைகளோடும் மனைவியோடும் சென்றார்

இரண்டாவது சம்பவம் கற்பனையாகவே :-

நித்யானந்தாவும், பாதர் அமலநாதனும் திக்கஸ்ட் ப்ரெண்ட்ஸ்.அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது!

ஒளிவு மறைவு இருந்தால் நண்பர்களாக கண்டிப்பாக இருக்க முடியாதுதான் ஒன்றை நாம் புரிந்திருக்கிறோம். மறைத்து மறைத்து பழகும் நட்பு நீடிக்காது! காதலுக்கும் அப்பிடித்தான்.
அதுவும் வெற்றி பெறாது! நித்யானந்தாவும்,பாதர் அமலநாதனும் ஒன்றாகத்தான் எங்கும் வெளியே செல்வார்கள். ஒரு திரைப்படம் பார்க்க என்றாலும் இருவரும்தான். இருவருக்கும் இன்று ஒரு சிறப்பான நிகழ்ச்சி இருந்தது!
திரைப்பட நடிகை நளினாசிரீ இன்று நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வருவதாக மெசேஜ் விட்டிருந்தாள். sms பார்த்ததும் நித்யானந்தா அமலநாதனுக்கு தகவல் கொடுத்து விட்டார். அவரை பிக்கப் செய்து கொண்டு செல்வதற்காக நித்யானந்தா தன் காரில் அமலநாதனை தேடி வந்தார். பாவமன்னிப்பு கேட்பவர்களின் வரிசை அன்று நீண்டிருந்தது.
இவர் வெளியே காரில் காத்திருந்தார். அமலநாதன் செல்போனிற்கு
ரிங் விட்டு ரிங் விட்டு கட் செய்தார். அமலநாதன் ஓடிவந்து இவர் காரில் ஏறிக் கொண்டார். காரில் ஒரு கண்ணாடி ஜன்னல்
கொஞ்சம் இறக்கிவிட்டார். வெளியே இருந்து பாவமன்னிப்பு கேட்டார்கள். பாவத்தை சொன்னார்கள்.
அமலநாதன் காரில் ஏறியதுமே “நமக்கு இன்று நிரம்ப நேரமாகிவிட்டது.ஸாரி” என்றார். ”எவ்வளவோ விரைவாக முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்கள் பாவங்களை சுருக்கமாக சொல்வதேயில்லை.கதை போல நீளமாய் சொல்கிறார்கள். எனக்கோ கடுப்பாய் இருக்கிறது. அவர்கள் நான் அப்பிடி செய்தேன்
இப்படி செய்தேன் என்று கூறுகிறார்கள் ... ஒரு கற்பழிப்பை, இது ஒரு பெரிய விசயமா? நீ கற்பழித்தாய்...அவ்வளவுதானே...அந்த
உண்டியலில் ஐந்தாயிரம் போட்டு விட்டு நகர்ந்து செல்” என்பேன், என்றார்.

”சரி இவ்வளவு தானா விசயம்...இப்படி முன்புறம் வந்து நீங்கள் தயாராகுங்கள்...
பவுடர்,சீப்பு,கண்ணாடி,செண்ட் என்று இதோ இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று வெளியே இருப்பவர்களுக்கு இந்த கண்ணாடிகள் காட்டிக் கொடுக்காது ! நான் இதை ச‌மாளிக்கிறேன்”, என்கிறான்.

“சரி இந்த உண்டியலில் 20 ஆயிரம் போட்டுவிட்டு போ” என்றார் நித்யானந்தா. அதற்கு அவன், ஐயோ பாதர் இது மிக அதிகம்...போன தடவை 5ஆயிரம் உண்டியலில் போட்டேன்...அபராதத் தொகையை ஏற்றிவிட்டீர்களா? “ என்றான்.

“இல்லை...தொகை ஐந்தாயிரமே தான்...ஆனால் பதினைந்தாயிரம் முன்னதாகவே உண்டியலில் போடச் சொல்கிறேன்,ஏனெனில் நீ அடுத்தடுத்து சீக்கிரமே கற்பழிப்புகளை நடத்துவாய்” என்றார் நித்தியானந்தா.

நடைபெறாத சம்பவம் மற்றொன்று:

ஒரு நாள் காவிரி ஆற்றின் கரையோரம் நித்யானந்தா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதை வால்பையன் பார்த்து விட்டான். வால்பையனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை! நேற்றைய இரவில் மீதமான சரக்கை இரண்டு துண்டு வெள்ளரிப் பிஞ்சை கடித்துக் கொண்டு குடித்து விட்டான். அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தால் தூக்கம் வந்துவிடுமே

என்று காலார நடக்கத் தீர்மானித்து கிளம்பிவிட்டான்.வெறும் வயிற்றில் இறங்கிய சரக்கு குபுகுபுவென மசமசப்பைத் தந்திருந்தது! மணலில் கால் புதைய நடந்தவன் தான் நித்யானந்தா ’தண்டால்’ எடுத்ததை கவனித்தான். ஒரே குழப்பமாகவும் இருந்தது!


உடற்பயிற்சியை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தார் நித்யானந்தா.வால்பையன் அவரையே சுற்றிச்சுற்றி வந்து உன்னிப்பாக
கவனித்தான்.தவறாகப் போய் விடக்கூடாதல்லவா!

”ஐய்யோ! நித்யானந்தா..உங்களது பர்சனல் விசயத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம்! உங்களது கேர்ள் ஃப்ரெண்டு ரஞ்சிதா போய் விட்டாள். வீணாக எதற்கு இப்படி சிரமப்படுகிறீர்? முதலில் எழுந்து வந்து அவளை எங்கே என்று தேடிப் பிடியுங்கள்” என்றான்.

--
டைப்பிங் உதவி : நன்றி :
Swaminathan.R.S. மயில் ராவணன்.............

Post Comment

திங்கள், ஏப்ரல் 05, 2010

கதவை திற நாய் உள்ளே வரட்டும்தேடினால் கிடைத்துவிடும் பொருளாக கடவுள் என்ற பொருள் இல்லை. அது திட
நிலையில் உள்ள ஜந்துவா? ஆனால் அது எப்போதுமே தேடப்பட்டுக்
கொண்டேயிருக்கும் ஒரு விஷப்பூச்சியாகவே இருக்கிறது! அந்த ஏலியன்
தேடிப்போய் சந்திக்கும் பூச்சியல்ல. எங்கும் நிரம்பியிருக்கும் காற்றாக
வர்ணிக்கபடுவதால் சில பெண்கள் இன்னமும் உடைகளுடனேயே குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் ஒரு எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட். அவர் பார்வையில் இங்கு எதுவும் தப்பாது! நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே நம்மை
கண்காணித்துக் கொண்டு காற்றாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது! காடு பற்றி
சிலர் பேசிக்கொண்டதை மான் கேள்விப்பட்டது! உடனே எல்லா விலங்குகளிடமும் காடு என்றால் என்ன? என்று விசாரித்துக் கொண்டேயிருந்தது! ஆனால் ஒரு விலங்கு கூட காடு எங்கிருக்கிறது? என்ன அது? என்று சொல்ல முடியவில்லை.
ஆனால் காடு பற்றி கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்லின! ஆனாலும் காடு இவர்களை சுற்றியே உள்ளது.அவைகள் காட்டுக்குள்ளேயேதான் நின்று காட்டைப் பற்றி பேசிக்கொள்கின்றன.வாழ்கின்றன. இப்படித்தான் கடவுளைப் பற்றி பேசிக்கொள்கிறோம்.கடவுள் என்கிற பூச்சியைப் பற்றி ஆதரவாகவும், எதிராகவும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

பிரேமானந்தா,நித்யானந்தா முதலிய சாமியார்கள் நம் வீடுகளுக்குள் காலடி
வைத்தும் தட்டில் பூ,பழம்,ஒரு லட்சம் தொகையை புனிதமே வந்து நம் வீடுகளில்
காலடி எடுத்து வைக்கப் போவதா எண்ணி பரிசுத்தொகைகள் கொடுத்து சாமியார்களை
ஊக்குவிக்கிறோம். இந்த மாதிரி விஷப்பூச்சிகள் சல்லாபிக்க தூண்டுகோலாய்
செயல்பட்டுவிட்டு, சாமி தப்பு பண்ணலாமா? என்று கேட்டு புகைப்படங்களை
எரிக்கிறோம். நித்தியானந்தா 12 வயதில் குண்டலினி சக்தி பெற்றவராம்.வரலாறு
சொல்கிறது! யோகாவில் முக்கிய நிகழ்வு குண்டலினி. உயிர் சக்தியை அடிவயிற்றிலிருந்து மேலே ஏற்றுவது! உயிர்சக்தி நாளுக்கு நாள் சேகரமாகிக் கொண்டே இருப்பது. உடலுறவு மூலம் நாம் அதை வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறோம். குண்டலினி இதற்கு எதிராக இயங்குவது! நமக்கெல்லாம் இன்பத்தை முன்னிட்டு சக்தியை
வெளியேற்றத்தான் தெரியும். இதைத்தான் சாபக்கேடு,அறியாமை என்று
சாமியார்கள் பிதற்றுகிறார்கள். உடலுறவு நமக்கு மிக முக்கியம். அது
இயற்கையின் வரப்பிரசாதம். உடல் உழைப்பு செய்து களைப்பாய் வீடு திரும்பும்
கணவர்களுக்கு மனைவியர்கள் தரும் சுகம் உடலுறவு. உடலுறவு கண நேர இன்பம் தான். சக்தி வெளியேறியவுடன் கணவன் களைப்படைகிறான் மீண்டும். மூச்சு பயிற்சி முடிந்து விடுகிறது! இதில் பெண்ணுக்கு எந்த களைப்பும் இல்லை.
அவள் சக்தியை வாங்குபவளாக இருக்கிறாள். கணவர்கள் சக்தியை இழப்பவர்களாக இருக்கிறார்கள். குண்டலினி இந்த அர்த்தமற்ற செயலை அர்த்தமுள்ளதாக மாற்றுவது! யோகா இந்த சக்தியை ஆன்மிக சக்தியாக்குகிறது!

குண்டலினி சக்தியை பாம்பின் ஆற்றல் என்று சொல்கிறார்கள். பாம்பு எப்படி
சுருண்டு படுத்துக்கிடக்கிறதோ அதே போல் தான் நம் உடலில் இந்த சக்தி
சுருண்டு படுத்துக்கிடக்கிரது! எந்த அசைவும் இன்றி கிடக்கும் பாம்பு தன்
வாலை மட்டும் பூமியில் பதித்து நேராக வானம் நோக்கி எழும்பி நிற்கும்.அதே போல்தான் உடலில் உயிர்சக்தியும். பிரணாயாமம் மூலம் இந்த சக்தியை விழிப்புணர்வுக்கு கொண்டு வரலாம் என்று யோகா கூறுகிறது.புத்தர் அமர்ந்திருக்கும் பொசிசன் பத்மாசனம்! இதை சிரமப்பட்டு ஒருவாரம் நானே செய்து மூச்சுப் பயிற்சி
மேற்கொண்டேன். பத்து நிமிடம் கூட கால்கள் தாங்காது. நீட்டு நீட்டு என்று
வலியில் கத்தும்.போகப் போக வலி மறந்து போனது. கால்கள் சுலபமாக மடிந்து
கொண்டன! எதையுமே பத்து நாட்கள் செய்து தான் பழக்கமுள்ள நான் ப்பூ
இவ்வளவுதானா என்று விட்டுவிட்டேன். புத்தர் படத்தை இப்போது உற்று
நோக்குகிறேன். கண்கள் மூடிய நிலையில் அவர் தியானத்தில் இருக்கிறார்.
சக்தி எந்த வழியாகவும் வெளியேற வாய்ப்பூ இல்லை! ஒரே சந்தேகம் ஆசன வாய் துவாரத்தில் வெளியேற வாய்ப்பிருக்கிறது எனக்கு! தூக்குப் போட்டு
இறந்தவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் மலம் கழிந்திருப்பார்கள்.
உயிர் ஆசனவாய் வழியாகத் தான் சென்றிருக்கும்.

எழுத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.அதை சமுதாய
சீர்கேட்டுக்கும் உபயோகிக்கலாம்.சமுதாயம் மேம்படவும் உபயோகிக்கலாம்.தமிழ் சேனல்கள் சீர்கேட்டை காட்டுகிறேன் என்று நித்தியானந்தாவுடன் நடிகை உருளுவதைக் காட்டி சீர்கேட்டை உற்பத்தி செய்தார்கள்.

நடிகையை யார் ? என்று மறுநாள் மீண்டும் உருட்டிக் காட்டினார்கள். நடிகை குண்டலனியாவது ஒன்றாவது என்று உச்சகட்ட நடவடிக்கையில் இறங்கினார். முதல்வர் இரண்டு நாட்கள் களேபரம் ஓய்ந்த பிறகு ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றார். என் அம்மா,மனைவி, பையன் சன் நாடகத்தில் கீழே பாருங்கள் பாருங்கள் என்று லைன் ஓட உடனே ஓடிப்பார்க்கிறார்கள்.என் மனைவி என்னிடம் மேல உளுகுறதை எல்லாம் காட்டுறாங்க என்கிறார். நானே பார்கலாம் என்றால் அம்மா உள்ளைடத்திற்கு
எப்படி போக? ஆனால் விசயத்தின் தீவிரம் நம்மை டீவியை நோக்கியே இழுக்கிறது!

ஜீ டீவியில் ஓடியது இன்னும் ஒருபடி மேல் என்று நண்பன் (புதிதாய் திருமணம்
ஆனவன்) சொன்னான். அவன் மனைவி திடீரென வந்து பார்த்துவிட்டு இதையெல்லாமா பாக்கறீங்க மாமா? என்றதாம். ஐயோ கொல்றாங்களே! கொல்றாங்களே! என்று முதல்வர் கைது சமயம் சப்தம் எழுப்பிய காட்சியை காணவும்,சுனாமி பேரலைகளை காணவும் இதே பொதுமக்கள் தவித்து தவித்து டிவி நோக்கி ஓடியதையும் நான் நினைத்து பார்க்கிறேன்.

பத்மாசனத்தில் இரு கால்களையும் குறுக்காக குறியின் மையத்தை நோக்கி
இருக்கின்றன.கைகள் கால்களை தொட்டவாறு இருக்கும். இந்த ஆசனத்தால் நாம் நம் உடலை மறைத்து விடலாம்.எந்த வெளி சக்திக்கும் வேலை இல்லை. மூச்சு வெளியேற்றம், உள்ளிருப்பு மட்டுமே சீராக நடைபெறுகிறது! கண்கள் வழியாகத் தான் சக்தி பெரும்பாலும் வெளியேறுவதாகக் கூறுகிறார்கள்.அது மூடிய நிலையில் இருக்கும்.மனம் மட்டுமே ஆரம்பத்தில் தொந்தரவு செய்யும்
சமாச்சாரம். நாம் நமீதாவையும், சினேகாவையும் நினைத்துக் கொண்டு
பத்மாசனத்தில் அமர்ந்தால் குறி கிளர்ச்சி அடைந்துவிடும். இது உண்மைதானே!
அதனால்தானே நாம் அந்தப்பக்கம் பார்வையை வீசாமல் இருக்கிறோம். மனதை
ஒருநிலைப்படுத்த நமக்கு குருமார்கள் தேவை ஏற்படுகிறது! இதனால்தான்
ஆசிரமங்கள் உற்பத்தியாகின்றன. உடலும்,மனமும் ஒரே சக்தியால்தான்
இயக்கப்படுவதாக யோகா வல்லுனர்கள் கூறுகிறார்கள். முதலில் மூச்சை
ஒழுங்குப் படுத்தினால் கோபமும், தறிகெட்ட சிந்தனைகளும்
அமர்ந்திருப்பவர்களை ஆக்கிரமிக்காது. அதேபோல் பாலுணர்வையும் வலுவிழக்கச் செய்ய நிச்சயம் யோகாவால் முடியும். சக்தி அப்படியேதான் இருக்கும்.ஆனால் மனதை ஆட்டிப்படைக்காது!

தொடரும் .....

--
டைப்பிங் உதவி
மயில்ராவணன்
.
...

Post Comment