வெள்ளி, ஏப்ரல் 23, 2010

காதல் 2000

இந்தக் கிலுவை மரத்தினடியில்தான்
எப்போதுமே நானும் அவளும்
வாழ்வது எப்படி ? என்று
பேச்சாய் பேசிக்கொண்டிருப்போம்.
உண்மைக்காதல்கள் எல்லாமே
தோற்றுப்போவதுதான் பயம்
என்று மழை நாள் ஒன்றில்
விசனமாய் நனைந்தபடி பேசியவளுக்கு
இழுத்தணைத்து முத்தம் கொடுத்தேன்
காமிரா இப்போது கிலுவை
மரத்தைத்தான் காட்ட வேண்டும்.
பின்னர்தான் விசித்து விசித்து
அழுதபடி அமர்ந்திருப்பவளைக்
காட்டவேண்டும் !‍ அவள்
என்னை இந்தமாதிரி ஆள்
அரவமேயற்ற இடங்களுக்குத்தான்
எப்போதும் வரச்சொல்கிறாள்.
நானும் வந்து போனேன்
ஒரு பொம்மை போல!
இதோ இந்த கிலுவை மர
விழுதினில் தான் தன் தாவணியில்
தூக்கிட்டு அவள் தொங்கிப்போனாள்
ஒரு வருடம் முன்பாக!
நான் இப்போதும் இந்த
மலைப்பகுதிக்கு வந்தும்
போய்க்கொண்டும்தான் இருக்கிறேன்
இப்போது என்னை
வரச்சொல்பவள்
கணவனை ஏமாற்றுபவள்!


படங்கள் : இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை
..

Post Comment

5 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

நச்சுன்னு இருக்கு!

சிலருக்கு நஞ்சாகவும் இருக்கும்!

இரசிகை சொன்னது…

m.........

இளமுருகன் சொன்னது…

படிச்சாச்சுங்க

மயில்ராவணன் சொன்னது…

//நானும் வந்து போனேன்
ஒரு பொம்மை போல!//

எப்படிங்க்? கீ கொடுத்த பொம்மை போலன்னு மாத்தி வாசிச்சுகலாமா?

மயில்ராவணன் சொன்னது…

நிறைய சமூக சேவை செய்றீங்க் போல!?