செவ்வாய், ஏப்ரல் 27, 2010

காதல் 2010

கூட்டமாய் கொக்குகள்
தென் திசை நோக்கி
பறந்து செல்லும்
இந்த மாலை நேரத்தில்..
அவசரமாய் மயில்கள்
இரை பொறுக்கும்
இந்த மாலை நேரத்தில்..
உன் காதலை தக்க வைத்துக்கொள்ள‌
இந்த மலைப்பகுதிக்குள்
என்னைத் தேடி
ஏன் அழைத்தாய் என்ற‌
கேள்வியோடு நீ வந்ததும்
உன் தாவணியில்
கை வைக்கிறேன்
இதற்க்குத்தானா என்று
வழக்கம்போல் கேட்ட நீ
வட்டப்பாறையில்
படுத்துக்கொண்டு
சீக்கிரம்
இருட்டுக் கட்டுவதற்குள்
வீடு போகனும் ...
என்றபடி மார்பிலிருந்து
அலைபேசியை உறுவி எடுத்து
ஓரம் வைக்கிறாய் !
காதல்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது
ஏதேதோ வழிகளில் !

...

Post Comment

7 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

செல்போன் இன்னும் வேகமாய் காதலை வளர்க்கும்!

மயில்ராவணன் சொன்னது…

கைப்பேசி இன்னும் வேகமாய் கள்ளக்காதலையும் வளர்க்கும்!!

இளமுருகன் சொன்னது…

//காதல்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது
ஏதேதோ வழிகளில் !//

உண்மைதான்

இளமுருகன்
நைஜீரியா

வால்பையன் சொன்னது…

//கைப்பேசி இன்னும் வேகமாய் கள்ளக்காதலையும் வளர்க்கும்!! //


காதல்ல என்னய்யா நல்ல காதல் நொள்ளகாதல்!

madurai ponnu சொன்னது…

அங்கீகரிக்க பட்ட காதல் மட்டும் உண்மையா இருக்கட்டும்.

வால்பையன் சொன்னது…

//அங்கீகரிக்க பட்ட காதல் மட்டும் உண்மையா இருக்கட்டும். //

சமூகத்தில் காதல் என்பதே அங்கிகரிக்கபடாதது தான், அதனால் அதை திருட்டுதனமா செய்ய வேண்டியிருக்கு!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

அனைத்து வருகைதாரர்களுக்கும் நன்றி

வாமுகோமு