திங்கள், ஏப்ரல் 05, 2010

கதவை திற நாய் உள்ளே வரட்டும்தேடினால் கிடைத்துவிடும் பொருளாக கடவுள் என்ற பொருள் இல்லை. அது திட
நிலையில் உள்ள ஜந்துவா? ஆனால் அது எப்போதுமே தேடப்பட்டுக்
கொண்டேயிருக்கும் ஒரு விஷப்பூச்சியாகவே இருக்கிறது! அந்த ஏலியன்
தேடிப்போய் சந்திக்கும் பூச்சியல்ல. எங்கும் நிரம்பியிருக்கும் காற்றாக
வர்ணிக்கபடுவதால் சில பெண்கள் இன்னமும் உடைகளுடனேயே குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் ஒரு எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட். அவர் பார்வையில் இங்கு எதுவும் தப்பாது! நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே நம்மை
கண்காணித்துக் கொண்டு காற்றாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது! காடு பற்றி
சிலர் பேசிக்கொண்டதை மான் கேள்விப்பட்டது! உடனே எல்லா விலங்குகளிடமும் காடு என்றால் என்ன? என்று விசாரித்துக் கொண்டேயிருந்தது! ஆனால் ஒரு விலங்கு கூட காடு எங்கிருக்கிறது? என்ன அது? என்று சொல்ல முடியவில்லை.
ஆனால் காடு பற்றி கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்லின! ஆனாலும் காடு இவர்களை சுற்றியே உள்ளது.அவைகள் காட்டுக்குள்ளேயேதான் நின்று காட்டைப் பற்றி பேசிக்கொள்கின்றன.வாழ்கின்றன. இப்படித்தான் கடவுளைப் பற்றி பேசிக்கொள்கிறோம்.கடவுள் என்கிற பூச்சியைப் பற்றி ஆதரவாகவும், எதிராகவும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

பிரேமானந்தா,நித்யானந்தா முதலிய சாமியார்கள் நம் வீடுகளுக்குள் காலடி
வைத்தும் தட்டில் பூ,பழம்,ஒரு லட்சம் தொகையை புனிதமே வந்து நம் வீடுகளில்
காலடி எடுத்து வைக்கப் போவதா எண்ணி பரிசுத்தொகைகள் கொடுத்து சாமியார்களை
ஊக்குவிக்கிறோம். இந்த மாதிரி விஷப்பூச்சிகள் சல்லாபிக்க தூண்டுகோலாய்
செயல்பட்டுவிட்டு, சாமி தப்பு பண்ணலாமா? என்று கேட்டு புகைப்படங்களை
எரிக்கிறோம். நித்தியானந்தா 12 வயதில் குண்டலினி சக்தி பெற்றவராம்.வரலாறு
சொல்கிறது! யோகாவில் முக்கிய நிகழ்வு குண்டலினி. உயிர் சக்தியை அடிவயிற்றிலிருந்து மேலே ஏற்றுவது! உயிர்சக்தி நாளுக்கு நாள் சேகரமாகிக் கொண்டே இருப்பது. உடலுறவு மூலம் நாம் அதை வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறோம். குண்டலினி இதற்கு எதிராக இயங்குவது! நமக்கெல்லாம் இன்பத்தை முன்னிட்டு சக்தியை
வெளியேற்றத்தான் தெரியும். இதைத்தான் சாபக்கேடு,அறியாமை என்று
சாமியார்கள் பிதற்றுகிறார்கள். உடலுறவு நமக்கு மிக முக்கியம். அது
இயற்கையின் வரப்பிரசாதம். உடல் உழைப்பு செய்து களைப்பாய் வீடு திரும்பும்
கணவர்களுக்கு மனைவியர்கள் தரும் சுகம் உடலுறவு. உடலுறவு கண நேர இன்பம் தான். சக்தி வெளியேறியவுடன் கணவன் களைப்படைகிறான் மீண்டும். மூச்சு பயிற்சி முடிந்து விடுகிறது! இதில் பெண்ணுக்கு எந்த களைப்பும் இல்லை.
அவள் சக்தியை வாங்குபவளாக இருக்கிறாள். கணவர்கள் சக்தியை இழப்பவர்களாக இருக்கிறார்கள். குண்டலினி இந்த அர்த்தமற்ற செயலை அர்த்தமுள்ளதாக மாற்றுவது! யோகா இந்த சக்தியை ஆன்மிக சக்தியாக்குகிறது!

குண்டலினி சக்தியை பாம்பின் ஆற்றல் என்று சொல்கிறார்கள். பாம்பு எப்படி
சுருண்டு படுத்துக்கிடக்கிறதோ அதே போல் தான் நம் உடலில் இந்த சக்தி
சுருண்டு படுத்துக்கிடக்கிரது! எந்த அசைவும் இன்றி கிடக்கும் பாம்பு தன்
வாலை மட்டும் பூமியில் பதித்து நேராக வானம் நோக்கி எழும்பி நிற்கும்.அதே போல்தான் உடலில் உயிர்சக்தியும். பிரணாயாமம் மூலம் இந்த சக்தியை விழிப்புணர்வுக்கு கொண்டு வரலாம் என்று யோகா கூறுகிறது.புத்தர் அமர்ந்திருக்கும் பொசிசன் பத்மாசனம்! இதை சிரமப்பட்டு ஒருவாரம் நானே செய்து மூச்சுப் பயிற்சி
மேற்கொண்டேன். பத்து நிமிடம் கூட கால்கள் தாங்காது. நீட்டு நீட்டு என்று
வலியில் கத்தும்.போகப் போக வலி மறந்து போனது. கால்கள் சுலபமாக மடிந்து
கொண்டன! எதையுமே பத்து நாட்கள் செய்து தான் பழக்கமுள்ள நான் ப்பூ
இவ்வளவுதானா என்று விட்டுவிட்டேன். புத்தர் படத்தை இப்போது உற்று
நோக்குகிறேன். கண்கள் மூடிய நிலையில் அவர் தியானத்தில் இருக்கிறார்.
சக்தி எந்த வழியாகவும் வெளியேற வாய்ப்பூ இல்லை! ஒரே சந்தேகம் ஆசன வாய் துவாரத்தில் வெளியேற வாய்ப்பிருக்கிறது எனக்கு! தூக்குப் போட்டு
இறந்தவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் மலம் கழிந்திருப்பார்கள்.
உயிர் ஆசனவாய் வழியாகத் தான் சென்றிருக்கும்.

எழுத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.அதை சமுதாய
சீர்கேட்டுக்கும் உபயோகிக்கலாம்.சமுதாயம் மேம்படவும் உபயோகிக்கலாம்.தமிழ் சேனல்கள் சீர்கேட்டை காட்டுகிறேன் என்று நித்தியானந்தாவுடன் நடிகை உருளுவதைக் காட்டி சீர்கேட்டை உற்பத்தி செய்தார்கள்.

நடிகையை யார் ? என்று மறுநாள் மீண்டும் உருட்டிக் காட்டினார்கள். நடிகை குண்டலனியாவது ஒன்றாவது என்று உச்சகட்ட நடவடிக்கையில் இறங்கினார். முதல்வர் இரண்டு நாட்கள் களேபரம் ஓய்ந்த பிறகு ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றார். என் அம்மா,மனைவி, பையன் சன் நாடகத்தில் கீழே பாருங்கள் பாருங்கள் என்று லைன் ஓட உடனே ஓடிப்பார்க்கிறார்கள்.என் மனைவி என்னிடம் மேல உளுகுறதை எல்லாம் காட்டுறாங்க என்கிறார். நானே பார்கலாம் என்றால் அம்மா உள்ளைடத்திற்கு
எப்படி போக? ஆனால் விசயத்தின் தீவிரம் நம்மை டீவியை நோக்கியே இழுக்கிறது!

ஜீ டீவியில் ஓடியது இன்னும் ஒருபடி மேல் என்று நண்பன் (புதிதாய் திருமணம்
ஆனவன்) சொன்னான். அவன் மனைவி திடீரென வந்து பார்த்துவிட்டு இதையெல்லாமா பாக்கறீங்க மாமா? என்றதாம். ஐயோ கொல்றாங்களே! கொல்றாங்களே! என்று முதல்வர் கைது சமயம் சப்தம் எழுப்பிய காட்சியை காணவும்,சுனாமி பேரலைகளை காணவும் இதே பொதுமக்கள் தவித்து தவித்து டிவி நோக்கி ஓடியதையும் நான் நினைத்து பார்க்கிறேன்.

பத்மாசனத்தில் இரு கால்களையும் குறுக்காக குறியின் மையத்தை நோக்கி
இருக்கின்றன.கைகள் கால்களை தொட்டவாறு இருக்கும். இந்த ஆசனத்தால் நாம் நம் உடலை மறைத்து விடலாம்.எந்த வெளி சக்திக்கும் வேலை இல்லை. மூச்சு வெளியேற்றம், உள்ளிருப்பு மட்டுமே சீராக நடைபெறுகிறது! கண்கள் வழியாகத் தான் சக்தி பெரும்பாலும் வெளியேறுவதாகக் கூறுகிறார்கள்.அது மூடிய நிலையில் இருக்கும்.மனம் மட்டுமே ஆரம்பத்தில் தொந்தரவு செய்யும்
சமாச்சாரம். நாம் நமீதாவையும், சினேகாவையும் நினைத்துக் கொண்டு
பத்மாசனத்தில் அமர்ந்தால் குறி கிளர்ச்சி அடைந்துவிடும். இது உண்மைதானே!
அதனால்தானே நாம் அந்தப்பக்கம் பார்வையை வீசாமல் இருக்கிறோம். மனதை
ஒருநிலைப்படுத்த நமக்கு குருமார்கள் தேவை ஏற்படுகிறது! இதனால்தான்
ஆசிரமங்கள் உற்பத்தியாகின்றன. உடலும்,மனமும் ஒரே சக்தியால்தான்
இயக்கப்படுவதாக யோகா வல்லுனர்கள் கூறுகிறார்கள். முதலில் மூச்சை
ஒழுங்குப் படுத்தினால் கோபமும், தறிகெட்ட சிந்தனைகளும்
அமர்ந்திருப்பவர்களை ஆக்கிரமிக்காது. அதேபோல் பாலுணர்வையும் வலுவிழக்கச் செய்ய நிச்சயம் யோகாவால் முடியும். சக்தி அப்படியேதான் இருக்கும்.ஆனால் மனதை ஆட்டிப்படைக்காது!

தொடரும் .....

--
டைப்பிங் உதவி
மயில்ராவணன்
.
...

Post Comment

4 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

அப்படியா!

வாய்பாடியில் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிரலாமா!?

வாய்ப்பாடி குமார் சொன்னது…

கண்டிப்பா ,, அந்த பிளான் ரொம்ப நாளா நமக்கு இருக்கு, சுத்திலும் ரெண்டு மலை இருக்குது , பாத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன், கொஞ்சம் பசுமையா இருக்கற மாதிரி 10 மரம் வெச்சு குடிசையைப்போட்ட முடிஞ்சுது

இரசிகை சொன்னது…

//கடவுள் ஒரு எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட். அவர் பார்வையில் இங்கு எதுவும் தப்பாது! நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே நம்மை
கண்காணித்துக் கொண்டு காற்றாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது! காடு பற்றி
சிலர் பேசிக்கொண்டதை மான் கேள்விப்பட்டது! உடனே எல்லா விலங்குகளிடமும் காடு என்றால் என்ன? என்று விசாரித்துக் கொண்டேயிருந்தது! ஆனால் ஒரு விலங்கு கூட காடு எங்கிருக்கிறது? என்ன அது? என்று சொல்ல முடியவில்லை.
ஆனால் காடு பற்றி கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்லின! ஆனாலும் காடு இவர்களை சுற்றியே உள்ளது.அவைகள் காட்டுக்குள்ளேயேதான் நின்று காட்டைப் பற்றி பேசிக்கொள்கின்றன.வாழ்கின்றன. இப்படித்தான் கடவுளைப் பற்றி பேசிக்கொள்கிறோம்.கடவுள் என்கிற பூச்சியைப் பற்றி ஆதரவாகவும், எதிராகவும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.
//

!

இளமுருகன் சொன்னது…

//எழுத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.அதை சமுதாய
சீர்கேட்டுக்கும் உபயோகிக்கலாம்.சமுதாயம் மேம்படவும் உபயோகிக்கலாம்//
:-) உண்மையே...
இளமுருகன்
நைஜீரியா