சனி, ஏப்ரல் 17, 2010

ராஜா சின்ன ரோஜா

திரைப்பட விமர்சனம் என்று நாய் பேய்களெல்லாம் இலக்கிய புத்தகங்களின் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் 2010 ல் இருக்கிறோம். நாமும் எழுதாவிடில் தள்ளிவைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வைத்துவிடுவார்கள் போலுள்ளது. நாம் புதிதாக எம் ஜி ஆரின் இதயக்கனி, அரசகட்டளை, அன்பேவா படங்களுக்குத் தான் எழுதவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் 89 ஜூலையில் வெளிவந்த சூப்பர்ஸ்டாரின் படத்திற்கே எழுதிவிடலாம் என்று இறங்கினால் அதை முழுமையாகவும் சுத்தமாகவும் செய்யவேண்டும்.

இந்தப்படத்தை கோவை ராஜா திரையரங்கில் ரிலீஸ் செய்து இருந்தார்கள். பாடாவதி தியேட்டர் நானும் நண்பர் ஒருவரும் மதியக்காட்சிக்காக கியூவில் வெய்யிலில் சாலை ஓரமாக வாகன போக்குவரத்து இரைச்சலில் நின்று காத்திருந்து டிக்கெட் எடுத்து சென்றோம்.முன்பாக இதே திரையரங்கில்தான் பாக்யராஜின் இன்று போய் நாளை வா பார்த்தது. அதுவும் மௌனகீதங்கள் என்கிற அவரின் படத்திற்க்கு நூறு நாட்களுக்கு மேலாகியும் டிக்கெட் கிடைக்காத ஒரு காரணத்திற்க்காக!
இருதயா என்ற மற்றொரு தியேட்டர் அதில் பிரமிளாவின் அந்த மாதிரி மலையாளப்படங்களை போடுவார்கள்,போஸ்ட்டர்களில்தான் அந்த பெண்மணி கண்களை ஒரு மாதிரி கிறக்கமாய் வைத்துக்கொண்டு இருப்பார். எப்படியாவது அந்த படங்களுக்கு சென்று விடுவது சாலச்சிறந்தது,ஆனால் தியேட்டர்காரர்கள் என்னை ஏமாற்றுவதில் குறியாய் இருந்தார்கள்.பிரமிளா தன் வீட்டு வேலைக்காரனை சாடையாய் கூப்பிட்டு ஆரம்பிக்கையில் சண்டை வந்து ஜீப் பறக்கும்! மேம்பாலத்திற்கு அடியில் முருகன் என்றொரு தியேட்டர் . பத்துப்படங்கள் வரிசையாய்ப் பார்த்தால் ஏதாவது ஒரு படத்தில் ஆண்களும் , பெண்களும் படுக்கையில் உருளுவதை காட்டிவிடுவார்கள். இப்போது அந்த தியேட்டர்களே கிடையாது.

சரி ராஜா சின்ன ரோஜாவிற்க்கு வருவோம். அமர்க்களமான ரஜினி பட வரிசையில் இதுவும் ஒன்று ! வழக்கமாக ரஜினி அம்மாவை கொன்றவனையோ , அப்பாவை ஒளித்து வைத்திருப்பவனையோ தான் சண்டைக கட்டி முடிக்க சுபம் விழும். குழந்தைகளோடு ரஜினி இதில் கொஞ்சி விளையாடுகிறார். கௌதமியோடு அவ்வப்போது டூயட் . ஐந்து சண்டைக்காட்சிகள். இப்படித்தான் ரசிகர்களை அவர் திருப்திபடுத்தவும் ,விசிலடிக்கவும் தன் படங்களில் வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். ஏவிஎம்மின் மசாலா தூவல் இந்தப்படத்திலும்தான். சிவாஜியிலும் அப்படித்தானே!

இடி இடிப்பதற்காக கௌதமியும் , குழந்தைகளும் ரஜினியோடு ஒட்டிக்கொள்கிறார்கள். சுவையோ சுவை! "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்கொழந்தையும் சொல்லுமே" பாடலுக்கு தியேட்டரே விசில் பறத்தி ஆடியது. கலர் கலராக வேட்டுக் கிளப்புகிறார்கள். ரவிச்சந்திரன் தனது பாத்திரத்திற்கு அழுத்தமான நடிப்பால் மெருகு ஊட்டியிருக்கிறார். சின்னி ஜெயந்த் என்கிற காமெடியரை கொஞ்ச நேரம் உலவி விட்டு காணாமல் போய்விடுகிறார். பேபி ஷாலினியிடம் ஏராளமாய் எதிர்பார்த்து தாய்க்குலங்கள் ஏமாற்றமடைந்தார்கள்.

Sஸ் சந்திரன் , கோவை சரளா நம்மை சிரிக்க வைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ரகுவரன் இனி கவனமாய் நடிக்கச் சொல்லி அட்வைஸ் செய்யலாம் என்றால் இறந்து போய் விட்டார். சிவா என்றொரு படத்திற்க்கு இது பரவாயில்லை. நூற்றூக்கு ஐம்பது மார்க் தரலாமா நாம்? மொத்தத்தில் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்க ஏதுவான படம் ராஜா சின்ன ரோஜா! வாமுகோமு விமர்சனமே சினிமாவுக்கு எழுத்லை என்று எவரும் இனி சொல்லமுடியாது.
குட்டி என்றொரு படம் ! ஸ்ரேயா என்கிற ஆத்தாளை அழகான பையன் காதலிக்கச் சொல்லி கல்லூரியின் மாடியில் நின்று குதிக்கப் போகிறேன் என்கிறான். ஆத்தா ஐ லவ யூ என்கிறது ! இதற்கு அந்த பையன் குதித்தே செத்திருக்கலாம். பார்த்தால் தனுஷ் வந்து விடுவார். அவரும் ஆத்தாவிடம் ஐ லவ் யூ என்கிறார். இப்படிக்கொடுமையை பார்த்துத் தொலைப்பதற்கு நண்பர்களே ராஜா சின்ன ரோஜா பெஸ்ட். காதல் சுட்டுப்போட்டாலும் முகத்தில் காட்டவே தெரியாத சண்டைக்காரப்பயல் மூன்று பெண்களை காதலிப்பதாக அதே வாரத்தில் படமெடுத்து என்னை நொங்கெடுத்தார்கள் ! அந்த மேலே சொன்ன ஆத்தாளுக்கு தமிழ்ப்படம் திண்டில் அமர்ந்திருந்த வெண்ணிற ஆடை மூர்த்தி பூக் கொடுத்து ஐ லவ யூ சொல்லியிருந்தால் .. சொல்வதென்ன .. நினைக்கிலேயே வயிறு நிரம்பிவிட்டது எனக்கு !

வலைக்குள் சும்மா எட்டிப்பார்ப்பவர்கள் இனிமேலும் திரிசூலம் , சந்திப்பு , லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்கிற படங்களுக்கு விமர்சனம் எழுதலாமா ! வேண்டாமா என்று சொல்லிவிட்டுபோங்கள் ! ஆற்றவேண்டிய கடமையும் , பணீயும் இருக்கிறதல்லவா !!

...

Post Comment

11 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

u start boss. we r eenjoying

pradeep சொன்னது…

சாமி இது ஏதோ நடிகைகள் எல்லா படத்துக்கும் பேட்டி தருவாங்களே அப்படி இருக்கு!!!ஆமா அப்ப அந்த படத்துக்கு எப்ப சாமி விமர்ச்சனம் எழ்துவீங்க.....

Nundhaa சொன்னது…

ஆற்று ஆற்றுனு ஆற்றுங்க ... உங்க கடமைய ...

இளமுருகன் சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க விமர்சனம்.
இதையேதான் நான் அப்பவே எழுதிட்டனே...
http://ahilanelamurugan.blogspot.com/2010/01/blog-post_27.html

படிச்சு பாருங்க.

இளமுருகன்
நைஜீரியா

மயில்ராவணன் சொன்னது…

என்னது கோவையில ”ராஜா”,’இருதயா’ தியேட்டரா...அது எங்கிட்டு இருக்கு!
நான்கூட ரசினி படத்தை ரீமேக்கிட்டாங்கெ போலன்னு நெனச்சு வந்தேன். நல்லா இருக்கு தலைவரே. ரகுவரனை நடிக்கச் சொல்லப் போகிறீகளா? என்ன கொடும சார் இது?
ஆனா இது ஒரு கோவை பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவு கோ(மு)ழிச்சார்!

Sabarinathan Arthanari சொன்னது…

நல்ல விமர்சனங்க :))

அதிஷா சொன்னது…

நானும் இந்த படத்தை ராஜா தியேட்டரில்தான் பார்த்தேன். ரஜினிக்கு வாசலில் ஒரளவு பெரிய கட் அவுட் வைத்திருந்ததாக நினைவு. அப்புறம் இருதயா தியேட்டர் குறித்த உங்கள் அனுமானம் 90களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் பார்த்திருந்தால் மாறியிருக்கும். நல்ல அஜால்குஜால் படங்கள் சிறந்த பிட்டுகளுடன் வெளியான பொற்காலம் அது!

மற்றபடி அருமையான தேர்ந்த விமர்சனம்

இரசிகை சொன்னது…

:)

pahadi pahadi...

வாய்ப்பாடி குமார் சொன்னது…

இளமுருகன் கூறியது...

நல்லா எழுதி இருக்கீங்க விமர்சனம்.
இதையேதான் நான் அப்பவே எழுதிட்டனே...
http://ahilanelamurugan.blogspot.com/2010/01/blog-post_27.html

படிச்சு பாருங்க.

இளமுருகன்
நைஜீரியா--------

-------------
ஆமாங்க நம்மளையும் கொஞ்சம் ஏத்துக்கங்க. ஏன்னா வாமுகோமு கம்யூட்டர்களை பார்வையிடுவது இல்லை. அதே போல நாமும் அதிகமான வலைப்பதிவுகளை காண நேரம் கிடைப்பதில்லை. இதுவே நாம் ஒரு மாதம் கழித்து பதிவிட்டதுதான்.

இருந்தாலும் திருவிளையாடல் பட விமர்சனம் நன்றாக இருந்தது.

கே.ஜே. அசோக்குமார் சொன்னது…

நல்ல வித்தியாசமான சிந்தனை. அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

வால்பையன் சொன்னது…

தொடர்க உங்கள் பணி!