வியாழன், ஏப்ரல் 29, 2010

வேண்டுதல்

ஆலமரத்துப் பிள்ளையார் முன்
அவன் பக்திப் பரவசமாய்
வேண்டிக்கொண்டிருந்தான்.
செல்போன் சிணுங்கியது
"விநாயகனே வினை தீர்ப்பவனே"
நண்பன் தான்
என்ன? என்றான்
இருக்குமிடம் கேட்டான்.
உதவி செய் என்றான்.
இவன் மறுக்காமல்
திண்ணை ஏறிப்போய்
விநாயகர் காதில் செல்போன்
பிடித்துக்கொண்டு நின்றான்.
விநாயகனே! அப்பனே !
இன்று என் பெண் தோழிக்கு
இருபதாவது பிறந்த நாள்
அவளுக்கு வாழ்த்துச் சொல்லி
பரிசளித்துவிட்டு அப்படியேஎன்
காதலையும் சொல்லிவிடப் போகிறேன்
அவளும் மறுக்காமல் என் காதலை
ஏற்றுக் கொள்ளும் விதமாய்
நீ தானப்பா அருள் காட்டவேண்டும்
அதை மட்டும் நீ நடத்திவிட்டாயென்றால்
உனக்கு 108 நெத்திக்காய்கள்
உன் முன் உடைக்கிறேன்
இவன் செல்போன் அணைத்து
பாக்கெட்டில் போட்டுக் கொண்டு
நடையிட்டான்.

பச்சைக்கிளி என்கிற பா. ராஜாvukku


இனிது இனிது
சேலம் இலக்கிய இதழ்
2010 மார்ச்
..

Post Comment

2 கருத்துகள்:

மயில்ராவணன் சொன்னது…

அட்ப்பாவிகளா...அப்புறம் செல்போன் பிள்ளையார்னு ஒண்ணு வந்துரப்போகுது

இரசிகை சொன்னது…

//
அட்ப்பாவிகளா...அப்புறம் செல்போன் பிள்ளையார்னு ஒண்ணு வந்துரப்போகுது
//

:))