சனி, ஜூன் 05, 2010

காரணமின்றி அடித்துத் துவைப்பவன்

அவன் என்னை எங்கு கண்டாலும்
அடித்துக் கொண்டேயிருக்கிறான்
இத்தனைக்கும் அவனுடன் எனக்கு
முன் விரோதம் ஒன்றுமில்லை
காரணம் இன்றியே அடிக்கிறான்
தெரியாமல் கேட்கப்போய்த்தான்
உன்னை அடிப்பதற்க்கு காரணம் வேண்டுமா
என்று தனியாக துவைத்து எடுத்தான்.
வேறு வேலையென்று உனக்கு
ஒன்றுமில்லையா ? என்றேன் ஒரு நாள்.
என்னை என்ன பிழைப்பு இல்லாதவன்
என்றா நினைத்தாய் ராஸ்கல் !என்கிறான்
சும்மா அடிப்பதற்கு உனக்கு பிராந்தா?
என்று கேட்கப்போய் முட்டுச்சந்தில்
வைத்துத் துவைத்தான்.
சும்மா அடிக்கவில்லை தோன்றியதைச்
செய்கிறேன் அவ்வளவுதான் என்றான்
அவன் நடமாடாத தெருக்களில்
அவனுக்கு பயந்து வேறு வேறு
தெருக்களில் மாறு வேடம் பூண்டு
அலைகிறேன். மந்திரம் மாயம் என்று
கற்றிருப்பானோ என்னவோ எந்த‌
தெருவில் சென்றாலும் அங்கே எதிர்க்கே
அவதரித்து அடிக்கிறான். என்னிடம்
உதைபடவே உன் பிறப்பு
என்று வேறு முனகிப் போகிறான்
தொல்லையே வேண்டாம் என்று நகரம்
மாறிச்சென்றாலும் மோப்பம் பிடித்து
வந்து கனமாய் விளாசுகிறான்.
அவனுக்கு உறுதியான கைகள் இருந்தும்
வலி எடுக்கிறது என்று தடியோடு
இப்போது வருகிறான்
சலிக்காமல் அடிப்பதையே குறியாய்
கொண்டு திரிபவன் உங்களுக்கு
அடையாலம் காட்டவும் முடியாது
என்னால்! அவனுக்கு முகம் இல்லை.
எனக்கோ முகவரி இல்லை.(தமாஸ்காரர் வடிவேலுக்கு.)

..

Post Comment

2 கருத்துகள்:

அறிவிலி சொன்னது…

அடடே... வடிவேலு கதையாட்டமே இருக்கேன்னு பின்னூட்டம் போடலாம்னு நெனச்சேன். ஹ்ம்ம்.. அதையும் கடேசில பிராக்கெட்ல போட்டுட்டீங்களே.

மயில்ராவணன் சொன்னது…

உலகத்துலயே வடிவேலுக்கு கவுஜ எழுவுனது நீங்கதான் தலைவரே! விஜயமங்கலத்துல 100ஏக்கர் நிலம் ஏதும் வாங்கியிருக்காரா?