செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நாங்கள் சோம்பேறிகள்- கல்கி பேட்டி

கல்கியில் 15.03.2009 ல் வந்த பேட்டியின் தொகுப்பில் இருந்து,

எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ?
குமுதம், விகடன்,கல்கி என்று படிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்,அறிமுகமானார்கள்,ராஜேந்திர குமாரின் 'ஙே'வை இன்னும் மறக்க முடியவில்லை .அப்பாவின் மேஜையில் இருந்த கசடதபற , விழிகள்,தீபம்,மல்லிகை, போன்ற சிற்றிதழ்கள் என்னை எழுதிப்பார்க்கத் தூண்டின. எழுதி எழுதி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ' இதோ வந்துட்டேன் பார்' என 'நான் கடவுள்' ஆர்யா கைக்கு கட்டை கொடுத்து அமர்ந்திருப்பது மாதிரி வந்து அமர்ந்திருக்கிறேன்.

உங்கள் எழுத்து பாலியல் சார்ந்தே இருக்கின்றது , அதன் அவசியம் என்ன?
தாகம், பசி மாதிரி இயல்பான உணர்ச்சிதான் பாலியியலும். இயல்பான இந்த உணர்ச்சிகள் மீதுதான் சமூகத்தின் நீதி, நியதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டாமா?

பாலியல் உறவுகளை மட்டும் வைச்சுகிட்டு நீதி, நியதிகளை நிர்ணயம் செய்யக்கூடாது . வாழ்வியல் அறம் என்பதை பாலியல் உறவை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. அதைத் தாண்டியும் பல விசயங்கள் உள்ளன. இந்த நிலை நீடிக்கற வரைக்கும் என் படைப்புகள் அப்படித்தான் இருக்கும். எதைப் புனிதம் , தூய்மை என்கிறீர்களோ அதை உடைப்பதுதான் என் வேலை,

பெண் பெயரில் பாலியல் கவிதைகள் எழுதிகிறீர்கள் . ஏன் பெண் அடையாளத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ...?
ஆண்கள் பாலியல் பற்றி எழுதினால் சமூகம் வரவேற்கிறது. ரசிக்கிறது. பெண் எழுதினால் ஒழுக்கம் கெட்டு விட்டதாய்ப் பேசுகிறார்கள். அதை உடைப்பதற்காகச் செய்த சிறு பணி அது. பெண் எழுத்தில் இன்னும் நிறைய போதாமைகள் இருக்கு. வெளீப்படையா " தூள் கிளப்பிட்டு வாங்களேன்" என்கிற அழைப்பாக, அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கலாம்.

சாரு நிவேதிதா தம் இலக்கிய வாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்?
சாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட வாரிசு அல்ல. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துகள் விளிம்பு நிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிச்சுங்கிறது? எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியலை.

இதைவிடப் பெரிய கொடுமை சாரு நிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்குமின்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். என்னோட "மண் பூதம்" சிறுகதைத் தொகுதி வெளியீட்டுக்கு சென்னை வந்தப்ப " இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பாட்டிலேயே செத்துடுச்சு. தவிர , கோமுன்னா ஏதோ மாமின்னு நெனைச்சேன்னு பெருசு என்கிட்டேசொல்ல , தானிக்கும் தீனிக்கும் சரியாப்போச்சு.

சிறு பத்திரிக்கையில் எழுதும்போதுகுறைவான நபர்களையே சென்றடைகிறது. அதிகமான வாசகப் பரப்பை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
நாங்கள் யாரும் பெரும் வாசகப் பரப்பை புறக்கணீக்கவில்லை. இயல்பாகவே நாங்கள் சோம்பேறிகள். சற்று தாமதமாக வருகிறோம். அதுவரை அந்தப் பெருவாசகப் பரப்பு காத்திருக்கட்டும்.

சிறு பத்திரிக்கையிலிருந்து திரைப்படத்துக்கு நகர்வதுதான் ஆகச் சிறந்ததென இலக்கியவாதிகள் கருதுகிறீர்களா??
இனி ஒரு கட்டட வேலைக்குப்போயி கல்லு, மண்ணு சுமந்து என் வீட்டு அங்கத்தினர்களுக்கு புவ்வா போட முடியாது. படைப்பு எழுதியும் புவ்வாக்கு வழி பண்ண முடியலை. மண்டையில் கொஞ்சூண்டு விசயம் இருந்தாப்போதும். யார் வேணாலும் திரைப்படத்துறைக்கு போயி புவ்வாக்கு வழி பண்ணிட‌முடியும். அதனால திரைப்படம் நோக்கி நகர்வதுதான் ஆகச்சிறந்த, எளிய வழி.

பேட்டி ஜானகிராமன்
நன்றி -கல்கி 15.03.2009.

..

Post Comment

5 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

இந்த பதில்கள் புழுதியை கிளப்புமா மண்ணை கிளருமா என்று தெரியாது, ஆனால் இயல்பான,எளிமையான சொற்களில் தான் எவ்வளவு நக்கல் நையாண்டி , அவ்வளவையும் ரசிக்க முடிகிறது. சிந்திக்கவும் முடிகிறது.
//எதைப் புனிதம் , தூய்மை என்கிறீர்களோ அதை உடைப்பதுதான் என் வேலை,// பதில் சொன்ன முறையிலும் இவைகள் உடைந்ததாக நம்புகிறேன். மிகச்சிலரே இதை செய்திருப்பதாகவும் சொல்ல முடியும். பெரும்பாலும்,
எளிதான கேள்விக்கு மிக மேதவிதனமான பதில்களை படித்திருக்கிறேன். குழம்பியிருக்கிறேன். ஏண்டா இந்த
பதிலை படித்தோம் என்று வரும். ஒருவேளை, கேள்வி கேட்டவர் கூட இதை நினைத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

//அதுவரை அந்தப் பெருவாசகப் பரப்பு காத்திருக்கட்டும்.//
அட்றா... சக்கை .. அட்றா... சக்கை... அட்றா... சக்கை

//அதனால திரைப்படம் நோக்கி நகர்வதுதான் ஆகச்சிறந்த, எளிய வழி//
நீங்களுமா ... சரி சரி ...
(பின்னணியில் பாடல் ஒலிக்கிறது '''விதி ... வலியது ''')

//... எளிய வழி// ..... !!!????

எஸ்.பாரத், சொன்னது…

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

எஸ்.பாரத், சொன்னது…

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

வாய்ப்பாடி குமார் சொன்னது…

நன்றிகள் , நம்மை நினைவில் வைத்து நம் வலைக்கு வந்ததற்கு. தங்கள் வலையமைப்பு பற்றிக் கேட்டதும், நண்பர்கள் குழுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மகளிர் பள்ளி சார்பாக என்பது அறிந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி இன்னும் சற்று கூடுதலே.மேலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாமும் ஒரு படிக்கல்லாக அமைந்ததில் எங்களுக்குமேலும் ஒரு மகிழ்ச்சி.

வாழ்க வளமுடன்.

வாய்ப்பாடி குமார்.

வாய்ப்பாடி குமார் சொன்னது…

வேல்கண்ணன் நன்றி ,

கருத்துரையே ஒரு பேட்டி போன்றுதான் உள்ளது. மிகத்தெளிவான விமர்சனம்.