வெள்ளி, ஜூலை 29, 2011

ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்


வாமுகோமுவின் சிறுகதை "ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்" இந்த வாரம் ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது.

Post Comment

செவ்வாய், ஜூலை 19, 2011

காதலெனக்கு!மது நிரப்பப்பட்ட கண்ணாடிக்
குவளைக் கண்டால் பருகிவிட
காதெலெனக்கு!
பேருந்தில் புட் போர்டில்
தொங்கிச் செல்வதென்றால்
காதலெனக்கு!

யூனிபார்மில் பள்ளிச்
சிற்றுந்துக்காய் காத்து நிற்கும்
குழந்தைகளைக் கண்டால்
காதலெனக்கு!

யார் வீட்டிலும் புசுபுசுவென‌
பூனை வளர்ந்தாலும் அதன் மீது
காதலெனக்கு!

கொளுத்தும் வெய்யிலில்
வேப்பை மர நிழலில்
கிடப்பதில் கூட‌
காதலெனக்கு!

சொந்த பந்தங்களில் எங்கு
சென்றாலும் குட்டிக் குரங்குகளை
மடியில் அமர்த்தி
செல்லம் கொஞ்சுவதிலும்
காதலெனக்கு!

நல்ல ஜோடிப்பாடலை இளையராஜாவின்
இசையில் கேட்பதில் கூட
காதலெனக்கு!

இருந்தும் அலைபேசியில்
"உன்னைப்போடான்னு நான்
சொல்லாம யாரைடா சொல்வேன்?"
என்று கீதா பேசுகையில்
இவையெல்லாத்தையும் விட‌
கீதா மீது
காதலோ காதலெனக்கு!

..Post Comment

நகரும் வாழ்க்கை


காலம்பற நேரத்தில் எனது
ஜீன்ஸ் பேண்ட்டையும்,டீ சர்ட்டையும்
அணிந்து தலைகோதி முகப்பூச்சிட்டு
டூவீலரை கிளப்புகையில் எங்கே?
என்று நீ ஒரு வார்த்தை கேட்பதில்லை.
இருந்தும் நீ நினைக்கலாம் மிகச்சரியாய்!
உள்ளூர்க்காரி எவளையாவது டபுள்ஸ்
ஏற்றிக்கொண்டு தூர நகரம் சென்று
திரையரங்கில் ஜோடியாய் அமர்ந்து
அவளின் உதடுமென்று,கொங்கை கசக்கி
மதிய உணவை ஏதேனுமொரு பிரியாணி
கடையில் முடித்துக்கொண்டுவந்து விட்டுவிட்டு
வீடேறுவதாய் கணக்கிட்டிருக்கலாம்.

மேலும் ஏதேனும் ஒரு ராக்காலத்தில்
நீ தூங்கிவிட்டதாய் நம்பி நான்
தாழ்பாள் நீக்கி வெளியேறிய பிறகு
உன் பொய்தூக்கத்தை முடித்து
மிகச்சரியாய் யோசித்திருக்கலாம்
இந்த ஜாமத்தில் எந்த வீதி நுழைந்து
எவள் வீட்டுக்கதவு தட்டி,எவளுடன்
உருண்டு புறண்டு வரப்போகிறானோ?
இல்லை காடு கரைதேடிப்போய்
எவளோ உள்ளுர் கூத்தியாளுக்கு
போன்போட்டு வரவைத்து
உருண்டு புறண்டு இரண்டு
மணி நேரம் கழித்து வருவதாய்!
உனக்குத்தெரியும்!
இவனுக்கு காமம் ஒரு தீரா நோயென்று.
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
சகித்துக்கொண்டு வாழ்வது
எப்படி என்று ! உனக்குத் தெரியும்
நீயாகக் கேட்கும் பட்சத்தில்
இவைகளெல்லாம் உண்மைதானென்று
கூறிவிடுவேன் என்று!
இவைகளை செய்வதால் என்னிடம்
எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை என்றும்
உனக்குத் தெரியும்.
இந்தனை இருந்து உனக்கு
ஒருவளுக்குத்தானே நான் கணவன்
என்றும் நினைத்திருக்கலாம்.
ஏதாவது கேட்கப்போய்
புயலடித்துவிடலாம் என்றே
நீயும் சமயத்தில் நானும்.
பள்ளிவிட்டு வந்த பையன்
பறவைக்கு என்னம்மா இங்கிலீஸ்ல?
என்று சமையல் கட்டு போனான்.
"எனக்கென்ன தெரியும்?
உங்கொப்பனைப் போய்
கேளு போ"என்கிறாய்!
வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது,
வேகமாயும்
சிலசமயம் இனிப்பாயும்!

.

Post Comment

திங்கள், ஜூலை 18, 2011

இந்தியன் எக்ஸ்பிரஸில் வாமுகோமு பற்றி

Va Mu Komu is the pen name of VM Komakan from Erode district of Tamil Nadu. He is a poet and a regular writer in the literary magazine Sugan which also brought out his first collection of stories Azuvachi Varuthunga Sami (I feel Like Crying, Sir). His second collection Mann Bootham (Demons of Sand) came out in 2006 and a novel Kalli (Thief) in 2007. Sollak Koosum Kavithaikal (Poems You Cringe from Uttering) and a third collection of stories, Thavalaikal Kuthikkum Vayiru (Jumping Frogs in the Stomach) came out in 2008. His unabashed language and the manner in which his stories speak about sex and sexuality broke all rules of sophistication and “dignity” associated with creative literature. The youth in his stories are constantly dealing with notions of love and the reality of sex, deceit and disease. There is a feeling that he writes to shock people out of their delusions. I find his language deliberately merciless for the lives he is dealing with lack the luxury of “grace” and “dignity”.

http://www.indianexpress.com/news/best-young-writers/817825/0
..

Post Comment

வெள்ளி, ஜூலை 08, 2011

விளையாட்டு

அவனோ அழுதபடி இருந்தான்
அவனிடம் எதைச் சொல்லி
அழாதே என்று தேற்றுவது
எனத் தெரியாமல் தவித்தபடி
இருந்தாள் அவள்.
திடீரென அவள்
அவன் முன்பாக மல்லாந்து விழுந்தாள்
உடை கலைந்து!
அவன் அழுகையை நிப்பாட்டி
அவள் உடல் அழகை காண
இரு கண் போதாதென விழுங்கினான்
அழுகை நின்றது தெரிந்ததும்
எழுந்தமர்ந்தாள் அவள்.
அவன் அழத்துவங்கினான் மீண்டும்.
அவள் மல்லாந்து சாய்ந்தாள்.
இந்த விளையாட்டு நடந்து
கொண்டேதான் இருந்தது.
ஈடன் தோட்டத்தில் ஆரம்பித்த
காலம் தொட்டு இன்று வரை!

.

Post Comment

7B நின்று போகும் நிறுத்தம்

மீனா வருகையில் தனித்து வருவதேயில்லை.
துணைக்கு வண்ணத்துப் பூச்சிகளை
கூட்டிக்கொண்டு நிறுத்தம் வருகிறாள்
நிறுத்ததில் அவள் பேருந்துக்காய்
காத்து நின்றிருக்கையில்
வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றுடன்
ஒன்று முத்தமிட்டுச் சிறகடிக்கின்றன.
இன்று சபீனா இன்னமும் வரவில்லை
தனது பணிக்கு இன்று விடுப்பு எடுத்திருக்கலாம்.
அல்லது சரியான நேரத்தில் வரலாம்.
சபீனா வருகையில் தன்னோடு எப்போதும்
பூனைக்குட்டிகளை கூட்டி வருகிறாள்,
யானை வரும் பின்னே மணியோசை
வரும் முன்னே என்பது போல
மியாவ் மியாவ் சப்தம் கேட்டால்
சபினா வருவதாக அர்த்தம்.

சரோஜா வருகையில் தனித்துவருவதில்லை
துணைக்கு தன் கணவன்மார்களை
கூட்டிக்கொண்டு வருகிறாள்.
நிறுத்ததில் அவள் பேருந்துக்காய்
காத்து நின்றிருக்கையில்
கணவன்மார்கள் ஒருவர் மீது ஒருவர்
வசை மாறி பேசிக்கொண்டும்
கை நீட்டிக்கொண்டுமிருக்க
பேருந்து நிறுத்தத்தில் வந்து ஓய்ந்ததும்
சரோஜா,சபீனா,மீனா கையசைத்து
விடைபெற்ற சற்று நிமிடத்தில்
பேருந்து நிறுத்தம் காலியாய் கிடக்கும்
பெஞ்சில் கிடந்த நானும்
இடம் பெயர்ந்த பிறகு!

.

Post Comment

பிடித்த கவிதை

கவிதைகளைப் பிடிக்குமெனக்கு
ஆனால் என் கவிதைகளை பிடிக்காதெனக்கு

காதலிகளைப் பிடிக்குமெனக்கு
ஆனால் என் காதலிகளைப் பிடிகாதெனக்கு

புணருவது பிடிக்காதெனக்கு
ஆனால் புணரப்படுவது பிடிக்குமெனக்கு

பெண் கடவுளை வழிபடுவது பிடிக்குமெனக்கு
ஆனால் ஆண் கடவுளை பிடிக்காதெனக்கு

ஓவியங்கள் பிடிக்குமெனக்கு
ஆனால் வரைந்தவனைப் பிடிக்காதெனக்கு

திருநங்கைகளைப் பிடிக்குமெனக்கு
ஆனால் வாய் முகூர்த்தம் பிடிக்காதெனக்கு

காதநாயகிகளைப் பிடிக்காதெனக்கு
ஆனால் துணை நடிகைகளைப் பிடிக்குமெனக்கு

மூன்று எக்ஸ் தட்டுகள் பிடிக்காதெனக்கு
ஆனால் செல்போன் சில்மிசங்கள் பிடிக்குமெனக்கு

ஆன்டீஸ் மசாலா பிடிக்குமெனக்கு
ஆனால் பகாபீக்கே சுடாய் பிடிக்காதெனக்கு

லிங்க் நாட் அவெய்லபிள் பிடிக்காதெனக்கு
ட்ரை எகெய்ன் லேட்டர் பிடிக்குமெனக்கு

தூக்கிட்டுச் சாவது பிடிக்காதெனக்கு
தண்டவாளத்தில் தலை கொடுப்பதும் பிடிக்காதெனக்கு
அனாசினோ,விக்ஸ் ஏக்சன் ஐநூறோ போதுமெனக்கு


பிரச்சினை இருக்கு தோழி எல்லாருக்கும்
நீ ஒரு தூமத்துணி கவிதை எழுதுவதுபோல‌
நானும் இப்படி பிடித்த கவிதை எழுதி
ஓட்டுகிறேன் என் காலத்தை!

.

Post Comment

புதன், ஜூலை 06, 2011

காட்டுச்சிறுக்கி.. மழை கொடுப்பா!

நீலவர்ண சுடிதார் அணிந்த

பெண்களைக்கண்டால்

காதலாய் பார்க்கிறேன் சாலைகளில்!

என் காதலி நீல வர்ண சுடிதாரில்

இருந்த அன்றுதான்

"உன்னை எனக்கு வர வர ஏனோ

பிடிக்கலைடா! நீ ஒரு மண்ணு" என்றாள்.

கருப்பு நிற வெல்வெட் சுடிதார் அணிந்து

செல்லும் பெண்களைக் கண்டதும் ஒரு கணம்

நின்று மானசீகமாய் பார்த்து ரசிக்கிறேன்

என் காதலி கருப்பு நிற வெல்வெட் சுடிதார்

அணிந்து வந்த நாளில்தான்,

"உன்னை நம்பி எங்கு வேண்டுமானாலும்

எந்த நேரத்தில் வேண்டுமானாலும்

வரலாம் போலிருக்கே!ஒழுக்கமா உனக்கு

கற்பழிக்கக்கூட துப்பில்லைடா"என்றாள்

மஞ்சள் வர்ண சேலை அணிந்த பெண்கள்

மஞ்சள் சரடு கட்டியிருப்பினும்

நின்று நிதானித்து காதல்

பார்வை வீசுகிறேன் புன்னைகையோடு!

என் காதலி மஞ்சள் நிற சேலையில்

கோவிலில் என்னை சந்தித்தபோது

"ஒரு முழம் மல்லியபூ வாங்கித் தரக்கூட

உன்கிட்ட பைசா இல்லியாடா பரதேசி"என்றாள்.

பச்சை வர்ண சேலையோ சுடிதாரோ,தாவணியோ

அணிந்து வரும் பெண்களைக்கண்டால்

பாதை விலகி தலை தெறிக்க ஓடுகிறேன்

என் காதலி பச்சை நிறதாவணியில்

வந்த நாள் அன்றுதான்

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா

லவ் யூ சோ மச் பழனிச்சாமி" என்றாள்..

Post Comment

இந்தக்கவிதை

நான் எழுதும் கவிதைகளுள்
எப்போதும் ஒரு லத்தீன் அமெரிக்க
உளவாளி உள் நுழைந்து தன்
தேடலை துவங்கி விடுகிறான்.

நானோ எனது கவிதைகளில்
எப்போதுமே பாதரசத்துகள்களையோ
கண்ணாடிச்சில்லுகளையோ
நாய் விட்டைகளையோ விதைப்பது இல்லை.
எல்லாம் அந்த உளவாளியின்
தேடல்களால் தான்!

என் கவிதைகளில் ஓடியாடித் திரிந்த
குழந்தைகளையும்,கிழவர்களையும்
ஒரு நாள் ஜெர்மன் படை வீரர்கள்
துவக்குகளோடு நுழைந்து சுட்டுப்
பொசுக்கித் தள்ளிவிட்டு போய்விட்டார்கள்!

பிணக்காடாய் கிடந்த என் கவிதையை
எரிப்பதற்க்கு கூட நாதியில்லை!

ஓசையெதுமில்லாமல்
பெருங்கூச்சலிடாமல் ரீ என்ட்ரியில்
நிலாவில் ஃபிசா தயாரிக்கும்
கிழவிகளைப் பற்றியும்,ஒற்றைப்பனை
குருத்தோலையிலிருந்து எவ்விப் பறந்து
கீச்சிட்டுப் போகும் சிட்டுகளைப்பற்றியும்
தீராத தாகத்துடன்
எழுதித் தீர்க்கிறது இந்த கவிதை.

..

Post Comment