வெள்ளி, ஜூலை 08, 2011

7B நின்று போகும் நிறுத்தம்

மீனா வருகையில் தனித்து வருவதேயில்லை.
துணைக்கு வண்ணத்துப் பூச்சிகளை
கூட்டிக்கொண்டு நிறுத்தம் வருகிறாள்
நிறுத்ததில் அவள் பேருந்துக்காய்
காத்து நின்றிருக்கையில்
வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றுடன்
ஒன்று முத்தமிட்டுச் சிறகடிக்கின்றன.
இன்று சபீனா இன்னமும் வரவில்லை
தனது பணிக்கு இன்று விடுப்பு எடுத்திருக்கலாம்.
அல்லது சரியான நேரத்தில் வரலாம்.
சபீனா வருகையில் தன்னோடு எப்போதும்
பூனைக்குட்டிகளை கூட்டி வருகிறாள்,
யானை வரும் பின்னே மணியோசை
வரும் முன்னே என்பது போல
மியாவ் மியாவ் சப்தம் கேட்டால்
சபினா வருவதாக அர்த்தம்.

சரோஜா வருகையில் தனித்துவருவதில்லை
துணைக்கு தன் கணவன்மார்களை
கூட்டிக்கொண்டு வருகிறாள்.
நிறுத்ததில் அவள் பேருந்துக்காய்
காத்து நின்றிருக்கையில்
கணவன்மார்கள் ஒருவர் மீது ஒருவர்
வசை மாறி பேசிக்கொண்டும்
கை நீட்டிக்கொண்டுமிருக்க
பேருந்து நிறுத்தத்தில் வந்து ஓய்ந்ததும்
சரோஜா,சபீனா,மீனா கையசைத்து
விடைபெற்ற சற்று நிமிடத்தில்
பேருந்து நிறுத்தம் காலியாய் கிடக்கும்
பெஞ்சில் கிடந்த நானும்
இடம் பெயர்ந்த பிறகு!

.

Post Comment

கருத்துகள் இல்லை: