செவ்வாய், ஜூலை 19, 2011

காதலெனக்கு!



மது நிரப்பப்பட்ட கண்ணாடிக்
குவளைக் கண்டால் பருகிவிட
காதெலெனக்கு!
பேருந்தில் புட் போர்டில்
தொங்கிச் செல்வதென்றால்
காதலெனக்கு!

யூனிபார்மில் பள்ளிச்
சிற்றுந்துக்காய் காத்து நிற்கும்
குழந்தைகளைக் கண்டால்
காதலெனக்கு!

யார் வீட்டிலும் புசுபுசுவென‌
பூனை வளர்ந்தாலும் அதன் மீது
காதலெனக்கு!

கொளுத்தும் வெய்யிலில்
வேப்பை மர நிழலில்
கிடப்பதில் கூட‌
காதலெனக்கு!

சொந்த பந்தங்களில் எங்கு
சென்றாலும் குட்டிக் குரங்குகளை
மடியில் அமர்த்தி
செல்லம் கொஞ்சுவதிலும்
காதலெனக்கு!

நல்ல ஜோடிப்பாடலை இளையராஜாவின்
இசையில் கேட்பதில் கூட
காதலெனக்கு!

இருந்தும் அலைபேசியில்
"உன்னைப்போடான்னு நான்
சொல்லாம யாரைடா சொல்வேன்?"
என்று கீதா பேசுகையில்
இவையெல்லாத்தையும் விட‌
கீதா மீது
காதலோ காதலெனக்கு!

..



Post Comment

கருத்துகள் இல்லை: