புதன், ஜூலை 06, 2011

இந்தக்கவிதை

நான் எழுதும் கவிதைகளுள்
எப்போதும் ஒரு லத்தீன் அமெரிக்க
உளவாளி உள் நுழைந்து தன்
தேடலை துவங்கி விடுகிறான்.

நானோ எனது கவிதைகளில்
எப்போதுமே பாதரசத்துகள்களையோ
கண்ணாடிச்சில்லுகளையோ
நாய் விட்டைகளையோ விதைப்பது இல்லை.
எல்லாம் அந்த உளவாளியின்
தேடல்களால் தான்!

என் கவிதைகளில் ஓடியாடித் திரிந்த
குழந்தைகளையும்,கிழவர்களையும்
ஒரு நாள் ஜெர்மன் படை வீரர்கள்
துவக்குகளோடு நுழைந்து சுட்டுப்
பொசுக்கித் தள்ளிவிட்டு போய்விட்டார்கள்!

பிணக்காடாய் கிடந்த என் கவிதையை
எரிப்பதற்க்கு கூட நாதியில்லை!

ஓசையெதுமில்லாமல்
பெருங்கூச்சலிடாமல் ரீ என்ட்ரியில்
நிலாவில் ஃபிசா தயாரிக்கும்
கிழவிகளைப் பற்றியும்,ஒற்றைப்பனை
குருத்தோலையிலிருந்து எவ்விப் பறந்து
கீச்சிட்டுப் போகும் சிட்டுகளைப்பற்றியும்
தீராத தாகத்துடன்
எழுதித் தீர்க்கிறது இந்த கவிதை.

..

Post Comment

கருத்துகள் இல்லை: