வெள்ளி, ஜூன் 08, 2012

தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு..
உன்னிடமிருந்து நான்
கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது!
சுயநலமாக வாழ்வது எப்படி
என்பதை உன்னால்தான்
நான் உணர்ந்தேன்
அப்படி நீ இல்லவே இல்லை
என்பதை மற்றவர்களுக்கு
தெரிவிக்க உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதமான
கவிதைகளை பயன்படுத்துகிறாய்!

உன் கவிதைகளில் நீ
பூனைகளை தடவிக்கொடுத்து
தூங்கச் செய்கிறாய்!
குழந்தைகளுக்கு பொம்மைகளை
பரிசளிக்கிறாய்!
அவ்வப்போது இலக்கியம் என்று
பூனை மயிர் முளைத்தயோனிகளை
தடவித்தடவி முத்தமிடுகிறாய்!
தவிரவும்
உன் காதலி உன்னை
கழற்றி விட்டுவிட்டு வேறொரு
ஷோக்கானவனுடன் முத்தங்களை
பகிர்ந்து கொள்வதாய்
பாடை விரிக்கிறாய்!

புணருகையில் எந்தப் பெண்மணியாவது
தவறு செய்துகொண்டிருக்கிறோம்
என்று நினைத்தபடியே
இயங்குகிறார்களா என்ன?
அந்த நேரத்தில் IPL'ல்
சென்னை அணி தோற்றது ஏன்?
என்று கீதா யோசித்தபடி
கம்பெனி கொடுத்தாள் என்று
நான் எழுதலாம் வேண்டுமானால்!

உன் பைத்தியத்தனமான
கவிதைகளை வாசிக்க‌
ஒரு பைத்தியக்கூட்டம்!
எப்படி உன்னால் நம்ப முடிகிறது.
சிறந்த கவிதைகளை நீ
பக்கம் பக்கமாய்
எழுதியபடி இருப்பதாக?

சமீப காலமாக உன் முகம்
ஒரு சைத்தானின் முகவடிவாக‌
மாறிக் கொண்டிருப்பதை
பத்திரிக்கைகளில் வரும் உனது
புகைப்படங்களை நீ
பார்க்கையிலேயே தெரியுமே!

நீ தற்கொலை செய்து கொள்ள‌
நேரம் நெருங்குவதை நான் உணருகிறேன்
அது நிகழ்ந்து விட்டால்
வருடாவருடம் உனது நினைவுநாள்
அன்று விருதுகள் வழங்குவேன்.
அண்ணார் சிறுகதை விருது
அண்ணார் நாவல்விருது
அண்ணார் கவிதை விருது என்று!
ஆனால் நீ கோழை!
அதற்கெல்லாம் உனக்கு தைரியம் ஏது?

தவிர நீயே விரும்புவது போல்
உனக்கு பைத்தியம் பிடிக்காது.
மற்றவர்களை பைத்தியமாக்குவதில்
நிபுணன் நீ!

சமீபத்தில் தெரியவில்லை என்ற‌
தலைப்பில் உனது நண்பர்கள்
உனை விட்டு ஒதுங்கிப்போனது
ஏன்?என்று கவிதை செய்திருந்தாய்.
குழந்தையின் வாயில் விரலா?.
இருந்தும் பார்.மதுக்கிண்ணத்தை
சுவைத்தபடியே யோசிக்கிறாய்...
அடுத்துயார் தலையில்
கல்லைப் போடுவதென!
ஒரு பூ உதிர்வதைப் போல..
அணைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டுபோல...
உறுவி வீசப்பட்ட ஆணுறை போல..
இப்படிப்பல போல போல போல..
நீயும் விழ்வாய் சீக்கிரமே!
ஒன்று புரிகிறது இப்போது..
கவிஞனாய் வாழ்வதற்க்கு
களவாணித்தனமும் துணை வேண்டுமென!


**************05.06.2012

Post Comment