சனி, ஜூலை 07, 2012

இலக்கிய மீட்டிங்கு!!!!!!!இப்பொழுது அண்ணன் பழனிச்சாமி
தன் எழுத்துலக அனுபவங்களை
மேடையில் பகிர்ந்து கொள்வார்!
ஆயிரக்கணக்கில் இங்கு கூடியிருக்கும்
எழுத்துலக ரசிகர்களே, ரசிகைகளே
பிரியத்திற்குரிய தோழர்களே தோழிகளே
மேடையில் அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களே
உங்கள் அனைவருக்கும் என் முதற்கன் வணக்கங்கள்!
.........கிங்பிஷர்
தமிழில் சிறந்த கவிதைகளை எழுதியவர் யாரென்றால்
தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர் யாரென்றால்
தமிழில் சிறந்த நாவலை எழுதியவர் யாரென்றால்
.......கிங்பிஷர்
யார் யாரையோ சொல்வேனென்று உங்கள் விழிகள்
என்னையே நோக்குகின்றன பரிதவிக்கின்றன
என்னை நாவலுக்கு சொல்வானென்றும்
என்னை சிறுகதைக்கு சொல்வானென்றும்
மேடையில் அமர்ந்திருக்கும் பெருந்தகைகள்
காத்திருக்கிறார்கள் இந்த இனிய மாலைப் பொழுதினிலே!
..........கிங்பிஷர்
கவிதையாகட்டும் சிறுகதையாகட்டும் நாவலாகட்டும்
வேறு எந்தக் கருமங்களாகட்டும்
இந்த பழனிச்சாமி ஒருவன்தான் சிறந்தவன்
என்பதை இந்த இலக்கிய மேடையில்
அறிவிப்பதில் கூச்சநாச்சம் எதுவுமில்லை
அப்படிச்சொன்னாலும் அது ஒன்றும் மிகையாகாது!
என்று கூறி என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.
நன்றி! வணக்கம்! தமிழ் வாழ்க!
-வா.மு.கோமு

Post Comment

1 கருத்து:

chicha.in சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in