சனி, ஏப்ரல் 13, 2013

சொல்வதெல்லாம் மடமை 1


Y ிவியில் சிக்கலான பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து நேர்மையான முறையில் நேசனல் பொன்னையா தீர்ப்பு வழங்குவதால் தமிழகம் அவரை நீதி தேவனாக வணங்குகிறது என்பதில் ஐயம் சிறிதளவும் இல்லை.சமூகத்தில் தான் எத்தனை பிரச்சனைகள்?
 7 பெண்டாட்டிக்காரன் பிரச்சனை, இரவில் வீடு அண்டாத மனைவிகள் பிரச்சனை, ஓடிப் போன மனைவியை தேடிப்போன கணவனின் பிரச்சனை, பக்கத்து வீட்டுக்காரன் பல்டி அடித்த பிரச்சனை என்று கமுக்கமாய் நடப்பனவற்றை இந்த சொல்வதெல்லாம் மடமை நிகழ்ச்சி மூலம் ஒய் டிவி வெளிக் கொண்டுவந்து தீர்ப்பையும் தருகிறது. தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை கண்கொண்டு பார்க்காதவன் இருக்கிறான் என்றால் அது நான் தான். இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றால் சிலருக்கு சோறு இறங்குவதில்லை.
 சட்டபூர்வமாக இணைந்த கணவன் மனைவியை முன்பெல்லாம் ஊர் நாட்டாமைகள் தான் பேசி சமாதானப் படுத்தி சேர்த்தோ, பிரித்தோ வைப்பார்கள். ஊர்நாட்டாமைகள் இன்று ஊருக்குள் இல்லை. சுடுகாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் சாப்ட்வேர் இஞ்சினியர்களாக வெளியில் இருக்கிறார்கள்.
வாழ்க்கை எல்லோருக்குமே சிக்கல் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. பிரியத்திற்கு பிருசனை அண்ணா என்றழைக்கும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.மீடியாக்கள் இன்று கண்கொத்தி பாம்பாய் இருக்கின்றன.உங்கள் வீட்டு படுக்கை அறைக்குள்ளும் காமிராவோடு எப்போது வேண்டுமானாலும் நுழையும் அபாயம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது.புருசன் ஏமாற்றினான் என்றும், மனைவி ஏமாற்றினாள் என்றும் ஊரே பார், நாடே பார் என்று மிடியா காட்ட தயாராய் இருக்கிறது.
(இதன் அடுத்த செட்..அடுத்த பதிவிறக்கத்தில்)

Post Comment

கருத்துகள் இல்லை: