ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சொல்வதெல்லாம் மடமை 3


ொல்வதெல்லாம் மடமை 3.
கமலாக்கண்ணு..மொதமொதல்ல யாரு காதலை சொன்னது? அவரா..நீயா? ‘
என்ன இருந்தாலும் நானு பொம்பளைங்கள்ல..மொதல்ல நாஞ் சொன்னேன்..பொறவுக்கே அவுரு சொல்லிப்போட்டாப்ல..ஊஊஊஊஊ
அதுக்கு ஏங்கண்ணு திடீர்னு அழுவுறே?”
எனக்கு பழசு ஞாவகம் வந்துடுச்சுங்க..ஊஊஊ..சித்த அவுருகிட்ட நேம்பா சொல்லுங்க
சொல்வதெல்லாம் மடமை நிகழ்ச்சியை ஒய் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களே! இந்தப்பெண் காதலித்தவரையே கட்டிக்கொண்டு தனது பாலியல் தேவைக்காக தப்புத்தண்டா செய்யாமல் வாழ்வதால் தான் கொசுறுத்தூத்தலாகவேணும் மழை தூறுகிறது.இந்தப்பெண்ணின் கண்ணீரைத் துடைக்க முடியுமா?-சிறிய இடைவேளைக்கு பிறகு பார்ப்போம்.
வணக்கம் அவட்டை செத்தவரே..உங்க பேரு, ஊரு சொல்லுங்க
வணக்கம் நேசனல் பொன்னையா அவர்களே..எம்பேரு முருகேசனுங்..ஈங்கூர்லதான் இருக்கனுங்
கமலாவை நீங்க ரவ் பண்ணி கட்டிக்கிட்டீங்ளா
ரவ் பண்ணலீன்னா பிச்சிப்புடுவன்னு சொன்னாளுங்க, அப்ப பைப் கம்பேனிக்கி இவ அக்காகூட ஆட்டீட்டு வருவாளுங்..இவ அக்கா ஈசுவரியும் ரவ்வை சொன்னாளுங்க. அப்ப இவசெம பிகரு
ஒய் டிவிக்கு எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியுமா?..நீங்க அடிச்சு வச்சுடறதால பிரிச்சு உடச்சொல்லி வந்திருக்காங்க
என்னய உலவம் பூரா காட்டுவாங்கள்ல..அவ ஒரு கேணச்சீங்க..உப்பு எடுத்தான்னா சக்கரை எடுத்தாருவாளுங்க..அவநாயத்தை ஒரு நாயமுன்னு இங்க வச்சு பேசீட்டு இருக்கீங்க. என்னை உட்டுட்டு சோத்துக்கு ஜிங்கி அடிக்கப் போறாளுங்ளாமா? ஊட்டுல உக்காத்திவச்சு சோறு போட்டா ஒய் டிவில இழுத்தாந்து உக்காத்திட்டா..இவள கட்டீட்டு இமுசு எத்தனைங்றீங்க? நோம்பி கண்டா சேல வேணும், சாக்கிட்டு வேணும்,சட்டி வேணும்னு அரிச்சிப் போடுவா.. ‘
காதல் மனைவிக்கு கணவனின் கடமை முருகேசு
மண்ணாங்கட்டி..ஊட்டுல பீரோவுல 150 சேல வச்சிருக்காளுங்க..நாயம் பேசறீங்க?” (ரசிக்கப்பட்டால் மேலும் உண்டு)

Post Comment

கருத்துகள் இல்லை: