திங்கள், ஏப்ரல் 01, 2013

கலக்கல் கருத்துகள்

மீடியாக்கள் இன்று தங்கள் கட்டுக்குள் நம்மை வைத்துக்கொண்டிருக்கின்றன.
மின்சாரத் தட்டுப்பாட்டால் பலவீடுகளில் பல நாடகங்களின் தொடர்ச்சிகளை
பார்க்க முடியாமல் டென்சன் மிகுதியில் மின்சாரத்துறை அமைச்சரையும்,முதல்வரையும்
கடைசியாக வேலை முடித்து வரும் கணவனையும் திட்டி எரிந்து விழுகிறார்கள்.சீக்கிரமே
பலபேர் மனநோய் மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வில்லைகள் விழுங்க வேண்டி
நேரிடலாம்.
நாடகங்களில் பார்த்திர்கள் என்றால் வெள்ளிக்கிழமை நாளில் தான் பிணத்தை நடுவீட்டில்
போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பார்கள். 11 மணி நாடகத்தில் ஒரு ஆண் பிணம்
என்றால் 12 மணி நாடகத்தில் ஒரு பெண் பிணம். டிவி நடிகை ஒருத்தி சாப்பாட்டில் விஷம்
கலப்பாள். பார்வையாளர் வாய் விட்டே ,”இவ இருக்கா ஊரை ஒழிச்ச-----” என்பார்கள்.
சொந்த பந்தத்தில் யாரேனும் பெருசு மேலே போய்ச்சேர்ந்து விட்டால், அடக்கெரவம் 
புடிச்ச கெழவியெ..சனி, ஞாயிறு பார்த்து செத்திருக்களாம்ல..இன்னிக்கி புதனாச்சே..
சீரியல் பார்க்கணுமே! என்று தான் வீட்டுப் பெண்கள் நினைக்கிறார்கள்.ஜப்பானில் நிலநடுக்கமாம் என்றால் ,காட்டறாங்ளா? என்று டிவி நோக்கி ஓடுகிறார்கள்.டிவி வாழ்வின்
அங்கமாக மாறி விட்டது. 
பெட்ரோல் விலையேற்றத்திற்காக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் போகிறோம்
வாருங்கள் என்றால்...இப்பத்தான் விஜய் அவரு தங்கச்சியெக் காப்பத்துறக்கு டுவாக்கி
எடுத்துட்டு பைக்ல சர்ர்ர்னு போறாரு..முன்னாடி போங்க பின்னாடி வர்றேன், என்கிறார்கள்.
அவர்கள் வாசல் தாண்டியதும் உள்ளார தூக்கிப் போட்டுட்டா அங்கபோய் எவன் சீரழியறது?
என்கிறார்கள். யாருக்காக இந்த போராட்டங்கள்? நோகாமல் நாம் எந்த நோம்பியை 
கொண்டாடி இருக்கிறோம்?
பாக்கியராஜே ஈமு கோழி வளத்துறாராமா..நாமும் வளர்த்துவோம்...
சச்சின் டெண்டுல்கரே பூஸ்ட் சாப்டுட்டு தான் 6 அடிக்கறாராமா நாமும் பூஸ்ட் குடிப்போம்.
ரவீனா தாண்டனே சோத்துல உப்பு போட்டுதான் திங்கறாங்ளாமா ..நாமும் திம்போம்.ஒவ்வொன்றையும் நமக்கு டிவியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.நமக்குள்ளே
ஒரு கேள்வி வேண்டும். நம் மூளை சரியாக இயங்குகிறதா?


************************************************************************************************

Post Comment

கருத்துகள் இல்லை: