திங்கள், ஏப்ரல் 01, 2013

கலக்கல் கருத்துகள்


தமிழகம் முழுதும் மாதம் 2000 கோடிக்கு மதுபானம் விற்பனையாவதாக தகவல்
இருக்கிறது.இலவசங்களை அறிவித்த அரசுக்கு இது மகிழ்ச்சியான விசயம் தான்.மக்கள்
அனைவரும் குடியும் குடித்தனமுமாக சுகமாகவே இருக்கிறார்கள் என்று அரசு நம்பிக்கையுடன்
சயல்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் பிசைக்காரர்கள், சாமியார்கள், துட்டுக்காரர்கள்
வரை டாஸ்மார்க் கடையினுள் பார்வையில் படுகிறார்கள்.இத்தனைக்கும் மதுபாட்டில்களின்
விலை கூட உயர்ந்து விட்டது.50 பைசாவிற்கு கிடைக்கும் டம்ளரின் விலை சாக்னா கடையில்
5 ரூபாய். டிவியில் திரையில் வரும் பிம்பங்கள் மது சுவைத்தால் --உடல் நலத்திற்கு தீங்கானது--
என்று வருகிறது.மது போதையில் டூவீலர் ஓட்டுபவன் ரோபோ போல ஆயிரத்தெட்டு
சிந்தனையில் போய் டமால் என்று விழுந்து மா..பாணி..பாணி என்கிறான்.(விழுந்தவன்
ஹிந்திக்காரன்) வாகன பரிசோதனையில் நிற்கும் போலிசார் ஓட்டியை வாயை ஊதிக்காட்டச்
சொல்லுவார்.சென்னிமலை ராமசாமி அரேபியா போய் வேலை செஞ்சானாம். என்னடா வேலையின்னா ஒட்டகத்துக்கு பல்லு சுத்தம் பண்ணுற வேலையாம்.பிரஸ்சை கையில்
எடுத்ததுமே ஈஈஈங்குமாம்.வாசம் குடலையே புறட்டுமாம். நம் காவல் துறை பாவம்தான்.
ட்ரிங்க் அண்ட் ட்ரைவ் என்றால் வாகன ஓட்டி கோர்ட்டில் 2500 கட்ட வேண்டும்.
திருப்பூர் காங்கயம் சாலையில் பிடிக்கிறார்கள் என்றால் பத்து நிமிடத்தில் போலிசார்
பிடித்தால் தான் உண்டு. 11வது நிமிடத்தில் அந்த வீதியில் ஒரு சைக்கிள் கூட வராது.
அரசாங்கமே இரவு 10 மணி வரை மது விநியோகிக்குமாம்.குடித்து விட்டு சந்து
சந்தாய் முட்டி வந்தால் லபக்கென பிடித்துக் கொள்ளுமாம். 4 பேருடன் உலக விசயம்
பேசிக்குடித்தால் தானே அது குடி. வீடு வாங்கிப்போய் தனியாக பிசாசு போல அமர்ந்து
குடித்தால் அது குடியா?
இன்னையோட சரி..நாளையில இருந்து குடிக்க மாட்டேன் என்று எல்லா குடிகாரர்களும்
தான் சொல்கிறார்கள். அப்படி எல்லாரும் விட்டு விட்டால் அரசு நிலை தடுமாறிப்
போய்விடும். எனவே குடி ஆவாது ஆவாது என்று வெளியில் பேசிக்கொண்டு திரியாதீர்கள்.
வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்..

Post Comment

கருத்துகள் இல்லை: