சனி, ஏப்ரல் 13, 2013

குடியாமை =நடவாத போராட்டம்


ரசாங்கம் மதுபுட்டிகளின் விலையை உயர்த்தி அட்டகாசம் செய்கிறது என்றபோது உலக மகாக் கடுப்பான மாணிக்கம் கடைக்குள் மது அருந்தியபடி இருந்த மாப்பிள்ளைகளிடம் கொந்தளித்து விட்டார். குடிகாரர்களை ஒன்று திரட்டி சென்னிமலை தேர்முட்டி அருகே போராட்டம் நடத்த வேண்டுமென கூச்சலிட்டார். அவரது உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி போதையின் விளிம்பில் இருந்த மாப்பிள்ளைகள், செஞ்சுடலாங்க மாமா, என்றனர்.
மாப்பிள்ளைகளா..கேஸ் சிலிண்டர் விலைஉயர்வு, டீசல் பெட்ரோல் விலை உயர்வு, கரண்ட்டுத் தட்டுப்பாடுன்னு நடந்தா..சாலை மறியல், பந்த்து பண்றாங்கள்ல..நாமும் ஒரு வாரம் குடி நிறுத்தப் போராட்டம் செஞ்சம்னா அரசாங்கம் நிதிப்பத்தாக்குறையில தவிக்குமுல்ல.அப்புறம் தன்னப்போல குறைப்பாங்க..ந்னக்கொரு சந்தேகம் மாப்பிளைகளா..இந்த அரசாங்கம் நம்மளை தப்பா நெனச்சுப் போட்டுதோ! ஆளாளுக்கு ஊட்டுல பணம் காய்க்கிற மரம் வச்சிருக்கானுவோ..அதை ஒரு உலுக்கு உலுக்கி கொட்டுற காசை கொண்டாந்து சரக்கு கடையில வீசுறானுவோன்னு நினைச்சுப் போட்டுதா
   “நீ போ மாமா..ஊட்டுல பொன்னாயா முண்டுக்கட்டையில சாத்தீடப் போவுது
-ஒரு ரூவா தண்ணி பாக்கெட்டை 5 ரூவாய்க்கி விக்கிற நீ பொன்னாயாளப்பத்தி பேசப்பிடாது..பொன்னாயா எலிசபெத் மகாராணிடா!”
  “சரி போயி இப்பவே ரோட்டுல உக்காந்து போராடு..லாரிக்காரன் வந்து ஏத்தட்டும்
  -அட மாப்பிள்ளே..இன்னிக்கி அஸ்டமி. அஸ்டமில ஆடு கூட புலுக்கை போடாது. நாளைக்கி நவமி ஆடு அடக்கி வச்சிருந்து நாளைக்கி காலம்பற நேரத்துல புலுக்கை போடும்..பக்தி இல்லாத பூனை பரமண்டலம் போச்சாம் நெத்திலி மீனை வாயில கவ்வீட்டுங்ற மாதிரி பேசுறாம் பாரு பேச்சு.
  குடிநிறுத்த போராட்டத்திற்கு குடிமக்களே வராத காரணத்தினால் போரட்டம் சென்னிமலையில் நடவாமல் போனது வேடிக்கை பார்த்த எனக்கும் வருத்தம் தான்.ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து விடலாம்..ஆனால் குடியாமை கசப்பான விசயம்.

Post Comment

கருத்துகள் இல்லை: