திங்கள், ஏப்ரல் 01, 2013

கலக்கல் கருத்துகள்

பள்ளி பேருந்து ஓட்டை வழியாக சிறுமி ஸ்ருதி விழுந்து பலியான சம்பவத்திற்குப்
பிறகு பள்ளி வாகனங்களை அதிரடியாக போலீசார் கண்காணிக்கத்துவங்கினர்.சம்பவம் 
நடந்து முடிந்த ஒரு வாரத்தில் டிப்பர் லாரி மோதி அட்சயா என்கிர 2ம் வகுப்பு மாணவி
இறந்தார். அப்பகுதி மக்கள் டிப்பர் லாரியை தீவைத்து எரித்தனர்.லாரியை எரித்து 
விடுவதால் அட்சயாவின் உயிர் திரும்ப வந்து விடும் என்றால் இந்தக்காரியம் சரிதான்.
அது வழியாக வரும் ஏனைய லாரிகளை எரிப்பதால் கூட அது சாத்தியமில்லை.
பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது மாணவன் ஒருவன் தண்ணீரில் மூழ்கி பலி என்ற
போது பள்ளிக் கட்டிடத்தை ஏன் பொதுமக்கள் எரிக்காமல் விட்டார்கள்? சாலை என்றால் ஒரு
நியாயம்..பள்ளி என்றால் ஒரு நியாயமா? கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள்
இறந்த பிறகு கூரைக்கொட்டகைகளில் பள்ளிகள் இயங்கக் கூடாது என்று அரசு அறிவித்தது.
எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்த பிறகு தான் அரசு தீவிர நடவடிக்கைகளை
எடுக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவே உயிர் பலிகளும் நடக்க
வேண்டியிருக்கிறது. இன்று தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி, குதிரையேற்றம் என்று
பாடத்திட்டத்தில் சேர்த்து தூள் கிளப்புகிறார்கள்.
நாளை பாடத்திட்டத்தில் ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு பயிற்சி என்று கட்டணம் வசூலிப்பார்கள்.
பயிற்சியில் ஹெலிகாப்டர் ப்ள்ளி சுவற்றில் மோதி ஐவர் பலி என்றால்,..பெட்ரோல் டேங்க் நட்டு
லூசாகி விபத்து என்று அறிவிப்பார்கள்.கேனையர்கள் நாம் பிள்ளை போச்சு..MLA வந்து ஒரு மாத
சம்பளத்தை குடுப்பாரு..தமிழக அரசு.,மத்திய அரசு எவ்வளவு நிதி குடுக்கும்?என்று பார்ப்போம்.
பெற்றோர்கள் தம்பிள்ளைகள் சகலகலா வல்லவர்களாக வரவேண்டும் என்று பேராசைப்படுவதால்
நடக்கும் விபரீதங்கள் இவை.
தகுதிக்கு மீறி பிள்ளைகளிடம் திணிக்கும் பெற்றோர்களின் ஆசை , பள்ளிகளின் ஆசை இந்த
இரண்டும் தான் இது போன்ற கவனக்குறைவானமரணங்களுக்கு காரணம்.எந்த அசம்பாவிதமும்
நடந்த பிறகு தான் அதை தடுக்கும் வழிமுறைகளை அரசு ஆராயும்.

Post Comment

கருத்துகள் இல்லை: