வியாழன், ஏப்ரல் 11, 2013

கலக்கல் கருத்துகள்திருப்பூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு படை எடுத்து வரும் வெளி மாநிலப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.அவர்கள் ஒரு குடோனுக்குள் அதிந்து கிடக்க வேண்டியது தான். உடல் நிலை சரியில்லை என்றால் மத்திரைகளை கொத்துக்கொத்தாய் கம்பெனியே எடுத்து நீட்டும்.இதில் பெண்களுக்கு எத்தனை சிரமங்கள் இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளலாம்.இத்தனை வருடங்கள் எங்கள் கம்பெனியில் இருந்தால் இத்தனை கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பாதியிலேயே ஓடிவிடும் பெண்களும் உண்டு. ஊருக்கு தப்பிப் போகாமல் வேறு கம்பெனியில் நுழைந்து பணிசெய்து, தனி அறை எடுத்து தங்கி தைரியமாய் பிழைக்கும் பெண்களும் உண்டு. காதல் என்ற பூச்சி அவர்கள் வாழ்வில் நுழைந்து கருக்கலைப்பு சம்பவங்கள் நடப்பதும் உண்டு. நான் கருக்கலைப்பு பண்ணலாம்னு யோசிக்கறேண்டி,என்று ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னால் அவளை காதல் பூச்சி பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
பனியன் கம்பெனி ஒன்றில் அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பாக ஒரு பெண்மணி இருப்பார்.அப்படி ஹெட்டாக 20 பெண்களுக்கு ஒருவர் இருப்பார்.அவருக்கு 40 வயது அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.முக அழகை மேம்படுத்தும் க்ரீம்கள், வாசனைப்புட்டிகள், உயர்தர குளியல் சோப் என்றே அவர் மெடிக்கல் கடையில் வாங்குவார். உடல்நிலை சரியில்லாத பெண்களை கம்பெனி வாகனத்தில் கூட்டி வந்து டாக்டரிடம் அழைத்துப் போய் மருத்துவம் பார்த்து பத்திரமாய் கூட்டிப் போவது அவர் பணி.
டாக்டர் எழுதிய மருந்துகளை பெண்களே மருந்துக் கடையில் வாங்கிக்கொள்வார்கள்.ஒரு நாள் ஒரு பெண் மருந்துக் கடை வாசலில் மயக்கமாய் சாய்ந்து விட்டது. பாதுகாப்பு பெண்மணி மற்ற பெண்களிடம் அந்தவித படபடப்பும் இல்லாமல், “தூக்கிட்டு போய் வேன்ல போடுங்கடி” என்றது. அந்த அம்மாளை என் காலால் இடறச் செய்து தொப்புக்கடீர் என கீழே விழவைக்க ஒரு வருட காலமாய் முயற்சிக்கிறேன்..முடியவில்லை.

Post Comment

கருத்துகள் இல்லை: