வியாழன், ஏப்ரல் 11, 2013

கலக்கல் கருத்துகள்

Photo: மெல்பர்னிலும், டாக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை மசக்காளிபாளையத்தில் அட்டணங்கால் போட்டு படுத்தபடி ரசித்து விடுகிறோம். பார்வையாளர்கள் அரங்கத்தில் புலி மாதிரியும், கரடிமாதிரியும் வேசம் போட்டு அமர்ந்து கொண்டு ஆட்டம் பார்க்கிறார்கள். கங்குலி ஐ ஆம் மிஸ் யூ என்றும் மம்மி ஐ ஆம் ஹியர் என்றும் கையில் அட்டைகள் வைத்து ஆட்டு ஆட்டென ஆட்டுகிறார்கள்.
    புற்று நோயிற்கு சிகிச்சை செய்துவிட்டு மீண்டும் ஆடவந்த யுவராஜ் சிங்கை அட்டைகள் காட்டி வரவேற்கிறார்கள். யுவீ..ப்ளீஸ்  கிஸ் மீ..என்றொரு பெண் அட்டை காட்டி வெறியோடு கத்துகிறது. யுவராஜ்சிங் களத்தில் மட்டையைப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைத் தேடி வந்து உம்மா குடுத்து விட்டு போய் மட்டை தூக்கி ஆடவில்லை என்றால் பார்வையாளர் அரங்கில் ரணகளம் ஆகிவிடும் போல் இருக்கிறது.
   நண்பர் ஒருவர் கேட்டார்..வி.சி.டி வ்ந்துச்சு, டி.வி.டி வந்துச்சு, எல்.சி.டி வந்துச்சு, எல்.ஈ.டி வந்தாச்சு அடுத்து என்ன வரும்? கூ.வி.டி வரும் என்றேன்.


மெல்பர்னிலும், டாக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை மசக்காளிபாளையத்தில் அட்டணங்கால் போட்டு படுத்தபடி ரசித்து விடுகிறோம். பார்வையாளர்கள் அரங்கத்தில் புலி மாதிரியும், கரடிமாதிரியும் வேசம் போட்டு அமர்ந்து கொண்டு ஆட்டம் பார்க்கிறார்கள். கங்குலி ஐ ஆம் மிஸ் யூ என்றும் மம்மி ஐ ஆம் ஹியர் என்றும் கையில் அட்டைகள் வைத்து ஆட்டு ஆட்டென ஆட்டுகிறார்கள்.
புற்று நோயிற்கு சிகிச்சை செய்துவிட்டு மீண்டும் ஆடவந்த யுவராஜ் சிங்கை அட்டைகள் காட்டி வரவேற்கிறார்கள். யுவீ..ப்ளீஸ் கிஸ் மீ..என்றொரு பெண் அட்டை காட்டி வெறியோடு கத்துகிறது. யுவராஜ்சிங் களத்தில் மட்டையைப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைத் தேடி வந்து உம்மா குடுத்து விட்டு போய் மட்டை தூக்கி ஆடவில்லை என்றால் பார்வையாளர் அரங்கில் ரணகளம் ஆகிவிடும் போல் இருக்கிறது.
நண்பர் ஒருவர் கேட்டார்..வி.சி.டி வ்ந்துச்சு, டி.வி.டி வந்துச்சு, எல்.சி.டி வந்துச்சு, எல்.ஈ.டி வந்தாச்சு அடுத்து என்ன வரும்? கூ.வி.டி வரும் என்றேன்.******************************************************************************************


தொலைக்காட்சிப் பெட்டிகளை அரசாங்கம் கிராமங்களின் கடைகோடு வரை கொடுத்து விட்டதால் இன்றைய பெருசுகள் அதன் முன்னேயே அமர்ந்து கிடக்கின்றன.அவர்களுக்கு
அஜித், விஜய், டோனி,என்று எல்லோரையும் தெரிகிறது. பால் விலை மசமசன்னு ஏறிப் போச்சே பெரியவரே என்று கேட்டால், இனி நானு பாலு குடிச்சு ஓட்டப்பந்தயத்துலயா கலந்துக்கப் 
போறேன்? பொழுதோட என்னோட டிவியில பாசு என்கிற பாசுக்கரன்போடறானப்பா...என்கிறார்கள்.
என்னது உன்னோட டிவியா? என்றால், ஆமாப்பா..அவந்தான என்னேரமும் உங்கள் டிவியில்,உங்கள் டிவியில்னு சொல்லிட்டே இருக்கான்ல..அப்புடின்னா அது எம்பட டிவி தான.

மக்களை முட்டாள்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் வைத்திருக்க எப்போதும் யாராவது
முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். காடுகளை விற்று வங்கியில் தூங்கிக்கொண்டிருந்த
பணத்தை எடுத்துப்போய் ஈமு வளர்ப்பிலும், தேங்காய்பருப்பு உடைப்பிலும் போட்டார்கள்.
வருமானத்திற்கு வகைசெய்து கொண்டதாய் நிம்மதிப்பட்டார்கள்.கொஞ்சம் நாளில் கூட்டமாய்போய் கலெக்டர் அலுவலக வாசலில் கையில் காகிதத்தை பிடித்துக் கொண்டு
நின்றார்கள்.எனக்கு இத்தனை போயிடிச்சு..உனக்கு? என்று துக்கம் விசாரித்துக் கொண்டார்கள்.
ஈமு கோழிகள் இப்போது தங்க நாற்கரச் சாலையில் தீனிக்காய் சோர்ந்து சுற்றுகின்றன.
**********************************************************************************

-----காரணமின்றி அடித்துத்துவைப்பவன் ----------
அவன் என்னை எங்கு கண்டாலும்
அடித்துக்கொண்டேயிருக்கிறான்.
இத்தனைக்கும் அவனுடன் எனக்கு
முன் விரோதம் ஒன்றுமில்லை.
காரணம் இன்றியே சாத்துகிறான்.
தெரியாமல் கேட்கப் போய்த்தான்
“உன்னை அடிக்க காரணம் வேண்டுமா?’
என்று சொல்லி தனியாக துவைத்தெடுத்தான்.
வேறு வேலையே உனக்கு இல்லையா?
என்றேன் ஒருநாள்.
“என்னை என்ன பிழைப்பு இல்லாதவன் என்றா
நினைத்தாய் ராஸ்கல்” என்கிறான்.
சும்மா அடிப்பதற்கு உனக்கு பிராந்தா? என்று
கேட்கப்போய் முட்டுச் சந்தில் வைத்து துவைத்தான்.
சும்மா அடிக்கவில்லை தோன்றியதை செய்கிறேன்
அவ்வளவு தான், என்றான்.
அவன் நடமாடாத தெருக்களில் அவனுக்கு பயந்து
வேறு வேறு தெருக்களில் மாறுவேடம் பூண்டு
அலைகிறேன்..மாய மந்திரம் கற்றிருப்பானோ
என்னவோ எந்த தெருவில் சென்றாலும்-அங்கே
எதிர்க்கே அவதரித்து அடிக்கிறான்.-என்னிடம்
உதைபடவே உன் பிறப்பு என்று வேறு
முனகிப்போகிறான்.
தொல்லையே வேண்டாம் என்று நகரம்
மாறிச் சென்றாலும் மோப்பம் பிடித்து வந்து
கனமாய் விளாசுகிறான்.-அவனுக்கு உறுதியான
கைகள் இருந்தும் வலி எடுக்கிறது என்று
தடியோடு இப்போது வருகிறான்.
சலிக்காமல் அடிப்பதையே குறியாய் கொண்டு
திரிபவனை உங்களுக்கு அடையாளம்
காட்டவும் முடியாது என்னால்.
அவனுக்கு முகம் இல்லை..
எனக்கோ முகவரி இல்லை.

Post Comment

கருத்துகள் இல்லை: