வியாழன், ஏப்ரல் 11, 2013

சிறுகதை

Photo: -------------- க்யா கூவா...தேரா வாதா..-------

 “கியா கூவா.. தேரே வாதா..வோக்கசம்ம்..வோயி ராதா...பூலே கா தில்..திஸ் துந்துமே..”
  “தலைவரே உங்களுக்கு போன்..புது நெம்பரா இருக்கு” மறுமலர்ச்சி கட்சிதலைவர் முருகபூபதியிடம் செல் போனை நீட்டினான் முனுசாமி.தலைவர் வாங்கி காதில் வைத்து “தமிழ் வாழ்க” என்றார்.
  “ஐயா, நீங்க என்கிட்ட பேசுறதே பெரிய பாக்கியமுங்க. என் ஊர் தூக்கநாயக்கன்பாளையமுங்க. சின்னப் பொண்ணை இந்த ஊருக்குத்தான் கட்டிக் குடுத்திருக்கனுங்க..மாப்பிள்ளை டயோட்டா கம்பனில சூப்பருவைசரா இருக்காருங்க.”
   “சரிங்க உங்க பேரை சொல்லுங்க..என்ன பண்ணீட்டு இருக்கீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?”
   ஐயா என் பேரு மாசிலாமணிங்க.ஊர்ல ஆசிரியரா இருந்து ரிட்டயர் ஆயிட்டனுங்க..உள்ளூர்ல தோல் கம்பெனில வாட்ச்மேனா போயிட்டு இருக்கனுங்க. பெரிய பொண்ணை இந்த ஊருக்குத்தான் டி.சி.எம் கம்பெனி சூப்பர்வைசருக்கு கட்டிக் குடுத்தனுங்க..ஒரே வருசத்துல அவரு விபத்துல இறஎதுட்டாருங்கய்யா. பெரிய பொண்ணு மூனு வருசமாஇப்ப என் வீட்டுல தூக்கநாயக்கன்பாளையத்துல தானுங்க..
 “அடடா..ரொம்ப பாவம்பா..கடவுளுக்கு கண்ணில்லைங்றது சரியாத்தானிருக்கு”
  “ஆமாங்க ஐயா, வாழ வேண்டிய வயசுல விதி பாருங்க நேத்து கலைஅரங்கத்துல உங்க பேச்சை கேட்டனுங்க , வரதட்சணை வாங்கினாலும் தப்பு, குடுத்தாலும் த்ப்புன்னும், விதவைகள் மறுமணம் நாட்டுக்கு தேவைன்னும் ரொம்ப நல்லா பேசுனீங்க.ஏகப்பட்டபேரு கை தட்டினாங்க. பெரிய பொண்ணு வாழ்க்கைய நெனச்சு பயந்து கெடந்தனுங்க..உங்களுக்கு 2 பசங்களாமே..என் சின்ன மாப்பிள்ளை சொன்னாருங்க. உங்க பெரிய பையன் சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காராமே..ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு நீங்க பேசினதால என்னோட பெரிய பொண்ணுக்கு உங்க பையனை கேட்கலாம்னு கூப்பிட்டனுங்க”
 “நீங்க நான் யாருன்னு நெனச்சு பேசீட்டு இருக்கீங்க மாசிலாமணி..நான் மறுமலர்ச்சி கட்சி தலைவர் இல்ல, நான் சோமசுந்தரம்..லாரி டைவர்..நெம்பர் பாத்து போன் பண்ணுங்க..காத்தால எழவு” போனை கட் செய்தார் முருகபூபதி.-------------- க்யா கூவா...தேரா வாதா..-------

“கியா கூவா.. தேரே வாதா..வோக்கசம்ம்..வோயி ராதா...பூலே கா தில்..திஸ் துந்துமே..”
“தலைவரே உங்களுக்கு போன்..புது நெம்பரா இருக்கு” மறுமலர்ச்சி கட்சிதலைவர் முருகபூபதியிடம் செல் போனை நீட்டினான் முனுசாமி.தலைவர் வாங்கி காதில் வைத்து “தமிழ் வாழ்க” என்றார்.
“ஐயா, நீங்க என்கிட்ட பேசுறதே பெரிய பாக்கியமுங்க. என் ஊர் தூக்கநாயக்கன்பாளையமுங்க. சின்னப் பொண்ணை இந்த ஊருக்குத்தான் கட்டிக் குடுத்திருக்கனுங்க..மாப்பிள்ளை டயோட்டா கம்பனில சூப்பருவைசரா இருக்காருங்க.”
“சரிங்க உங்க பேரை சொல்லுங்க..என்ன பண்ணீட்டு இருக்கீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?”
ஐயா என் பேரு மாசிலாமணிங்க.ஊர்ல ஆசிரியரா இருந்து ரிட்டயர் ஆயிட்டனுங்க..உள்ளூர்ல தோல் கம்பெனில வாட்ச்மேனா போயிட்டு இருக்கனுங்க. பெரிய பொண்ணை இந்த ஊருக்குத்தான் டி.சி.எம் கம்பெனி சூப்பர்வைசருக்கு கட்டிக் குடுத்தனுங்க..ஒரே வருசத்துல அவரு விபத்துல இறஎதுட்டாருங்கய்யா. பெரிய பொண்ணு மூனு வருசமாஇப்ப என் வீட்டுல தூக்கநாயக்கன்பாளையத்துல தானுங்க..
“அடடா..ரொம்ப பாவம்பா..கடவுளுக்கு கண்ணில்லைங்றது சரியாத்தானிருக்கு”
“ஆமாங்க ஐயா, வாழ வேண்டிய வயசுல விதி பாருங்க நேத்து கலைஅரங்கத்துல உங்க பேச்சை கேட்டனுங்க , வரதட்சணை வாங்கினாலும் தப்பு, குடுத்தாலும் த்ப்புன்னும், விதவைகள் மறுமணம் நாட்டுக்கு தேவைன்னும் ரொம்ப நல்லா பேசுனீங்க.ஏகப்பட்டபேரு கை தட்டினாங்க. பெரிய பொண்ணு வாழ்க்கைய நெனச்சு பயந்து கெடந்தனுங்க..உங்களுக்கு 2 பசங்களாமே..என் சின்ன மாப்பிள்ளை சொன்னாருங்க. உங்க பெரிய பையன் சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காராமே..ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு நீங்க பேசினதால என்னோட பெரிய பொண்ணுக்கு உங்க பையனை கேட்கலாம்னு கூப்பிட்டனுங்க”
“நீங்க நான் யாருன்னு நெனச்சு பேசீட்டு இருக்கீங்க மாசிலாமணி..நான் மறுமலர்ச்சி கட்சி தலைவர் இல்ல, நான் சோமசுந்தரம்..லாரி டைவர்..நெம்பர் பாத்து போன் பண்ணுங்க..காத்தால எழவு” போனை கட் செய்தார் முருகபூபதி.

Post Comment

கருத்துகள் இல்லை: