வியாழன், ஏப்ரல் 11, 2013

பெண் பார்க்க....

Photo: குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :பெண் பார்க்க....
      சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை..காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
     அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது.மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது.நகரின் பிரபலமானபியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பள பளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.
    நீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள்.உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.
   சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களைவரவேற்று சோபவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.
   “சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க..பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” ந்ன்றார் மாப்பிள்ளையின் அப்பா.
   “பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி.
---------நன்றி ; -குங்குமம்-----------குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :பெண் பார்க்க....

---------நன்றி ; -குங்குமம்-----------

Post Comment

கருத்துகள் இல்லை: