வியாழன், ஏப்ரல் 11, 2013

கலக்கல் கருத்துகள்

கமர்சியல் எழுத்துப்பக்கமாக நான் தலையை நீட்டி விட்டதால் மறுபடி மறுபடி சு.ரா, நகுலன், அஸ்வகோஸ், பூமணி என்று படித்தால் விளங்குகுவேனா? ஏற்கனவே தந்தையாரின் அடுக்கில் இருந்த இவர்களை எல்லாம் பெருந்துறையிலிருந்து ஆட்டோ வரவழைத்து 10 வருடம் முன்பே ரூ.2000க்கு எடைக்கு போட்டாகிவிட்டது.இப்போது மீண்டும் சுஜாதா பாலகுமாரன் தேவைப்பட்டார்கள். உயிர்மை ஸ்டாலில் நுழைந்து அள்ளிக்கொண்டு “நான் கிளம்புறனுங்க..வேணுங்றதை எடுத்துட்டனுங்க” என்று மனுஷ்யபுத்திரனிடம் மற்ற எழுத்தாளர்கள் போல் சொல்லிக்கொண்டு கிளம்பும் பழக்கமும் எனக்கு இல்லை.
கிடைத்தான் ரகுநாதன்.20 நாளில் பண்டமாற்று முறையில் எஸ்.ரா, சாரு என்று கொடுத்து விட்டு சுஜாதாவை பெற்று புறட்டினேன். சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஸ்டைல் மட்டுமே! எந்தக் கதையை எப்படி சொன்னால் சிறப்பாக வரும் என்பதை மட்டும் கற்றுக்கொள்ள 20 நாட்கள் போதுமானதாக இருந்தது.இனி என் கடைசி காலம் வரை சுஜாதாவை படிக்கவேண்டியது இல்லை. இது வெறும் 5ம் வகுப்பு பாடம் தான். எஸ்.ராவை வாசிக்க முடியவில்லை என்று வந்து நீட்டினான் ரகுநாதன்.எனக்கும் அதே பிரச்சனை தான் என்றேன்.சருவை சுவரஸ்யமாக படித்தேன், என்றான். அது வாசிப்புத்தன்மை உள்ள எழுத்து..அனைத்து வாசகர்களும் படிக்கலாம், என்றேன்.
“தமிழில் அருமையான எழுத்து நடையை கையகப் படுத்தி வைத்திருப்பவர்கள் 2 பேர் தான்.ஒருவர் சாரு.இன்னொரு ஆள் நீ.ஆனால் சாகும் வரை இருவருமே ஒரு நல்ல நாவலைஇருவருமே எழுத மாட்டீர்கள்” இந்தக் கருத்தை திரு.நஞ்சுண்டன் ஒரு முறை என்னிடம் சொன்னார். பார்க்கப் போகையில் அவர் சொன்னது என்னவோ உண்மை தான்.எழுதுவதை எல்லாம் நல்ல நாவல் என்று நம்பிக்கொண்டு தான் இதுவரை எழுதுகிறேன்.

Post Comment

கருத்துகள் இல்லை: