திங்கள், ஏப்ரல் 08, 2013

கலக்கல் கருத்துகள்

தொலைக்காட்சிப் பெட்டிகளை அரசாங்கம் கிராமங்களின் கடைகோடு வரை கொடுத்து விட்டதால் இன்றைய பெருசுகள் அதன் முன்னேயே அமர்ந்து கிடக்கின்றன.அவர்களுக்கு
அஜித், விஜய், டோனி,என்று எல்லோரையும் தெரிகிறது. பால் விலை மசமசன்னு ஏறிப் போச்சே பெரியவரே என்று கேட்டால், இனி நானு பாலு குடிச்சு ஓட்டப்பந்தயத்துலயா கலந்துக்கப் 
போறேன்? பொழுதோட என்னோட டிவியில பாசு என்கிற பாசுக்கரன்போடறானப்பா...என்கிறார்கள்.
என்னது உன்னோட டிவியா? என்றால், ஆமாப்பா..அவந்தான என்னேரமும் உங்கள் டிவியில்,உங்கள் டிவியில்னு சொல்லிட்டே இருக்கான்ல..அப்புடின்னா அது எம்பட டிவி தான.

மக்களை முட்டாள்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் வைத்திருக்க எப்போதும் யாராவது
முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். காடுகளை விற்று வங்கியில் தூங்கிக்கொண்டிருந்த
பணத்தை எடுத்துப்போய் ஈமு வளர்ப்பிலும், தேங்காய்பருப்பு உடைப்பிலும் போட்டார்கள்.
வருமானத்திற்கு வகைசெய்து கொண்டதாய் நிம்மதிப்பட்டார்கள்.கொஞ்சம் நாளில் கூட்டமாய்போய் கலெக்டர் அலுவலக வாசலில் கையில் காகிதத்தை பிடித்துக் கொண்டு
நின்றார்கள்.எனக்கு இத்தனை போயிடிச்சு..உனக்கு? என்று துக்கம் விசாரித்துக் கொண்டார்கள்.
ஈமு கோழிகள் இப்போது தங்க நாற்கரச் சாலையில் தீனிக்காய் சோர்ந்து சுற்றுகின்றன.

Post Comment

கருத்துகள் இல்லை: