புதன், ஜூலை 03, 2013

புதிதாய் சில கவிதைகள்!1!1
எப்போதாவது உன்னைத் தொட்டால்
அதற்குத்தான் தொடுகிறேனோ என்று
தீக்கண்களால் தட்டி விடுவாய்!
எப்போதும் தொடுகையில் தட்டி விடுவதே
உன் வேலையாய்ப் போயிற்று!
மருதாணிச் செடி மறைப்பில்
காஞ்சனாவின் கைப்பிடித்து
காதலிப்பதெல்லாம் தவறென்றும்
பகவகீதை படிக்கச் சொல்லியும்
வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கையில்
புயல் மாதிரி வந்த நீ கையை பிரித்தெடுத்து
உன் தோளில் போட்டுக் கொண்டாய்!
இனி வேறு ஏதாவது செய்வார்களோ என்று
வெட்கத்தில் முகம் சிவக்க காஞ்சனா
கொலுசொலிக்க ஓடிப்போனாள்!
“பிச்சுடுவேன் படுவா” சொல்லிவிட்டு
நீயும் போய் விட்டாய்!

இங்கு என்ன நடந்தது??!!!

()()()()()()


எவளோ ஒருத்தி பாலைவனத்தில் ஆதி
கடவுளைத்தேடி பயணிக்கிறாளாம்!
எவளோ ஒருத்தி தூமைத்துணியை
தூக்கிக்கொண்டு வனத்தில் பயணிக்கிறாளாம்!
ஆதி ஓவியங்கள் சூழ்ந்த குகை ஒன்றில்
குப்புறப் படுத்தபடி கவிதை
எழுதுகிறாளாம் ஒருத்தி! –கண் சிமிட்டும்
நேரத்தில் உலகை அழித்திடுவேன்
என்றொருத்தி தலைவிரி கோலமாய்
நகரவீதியில் ஓடுகிறாளாம்!
மரணம் தன்னை கவ்வுவதற்குள்
காதலனின் கடைசி புணருதலுக்கு
உதடு காய்ந்து.. மறுக்கா ஒருமுறை
பூப்பெய்தி காத்திருக்கிறாளாம் ஒருத்தி
எலுதிங்கள்பட்டியில்!
எதையாவது தேடி, எதற்காகவோ
காத்திருக்கவே செய்கிறார்கள் எல்லோரும்!

()()()()()()())
என் வீட்டின் மல்லிகைச் செடியில்
பூத்திருக்கும் பூக்கள் பற்றியோ…
ரோஜா செடியில் பூத்திருக்கும்
ரோஜாக்களைப் பற்றியோ..
முருங்கை மரத்தில் வால் வாலாய்
தொங்கும் முருங்கை காய் பற்றியோ..
நெல்லி மரத்தில் கொத்துக் கொத்தாய்
ஒட்டியிருக்கும் நெல்லிக்கனிகள் பற்றியோ..
கொய்யா மரத்தில் பூக்கள்
விட்டிருப்பது பற்றியோ…
உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?
அதைப் பற்றியெல்லாம் நம்
திருமணத்திற்கு பிற்பாடு ஆற அமர
பேசிக் கொள்ளலாம்….
முதலாக என்னை காதல் செய்!

()()()()()()()()நீ கெடைக்கலின்னா செத்து வைப்பேண்டா!
என்றவள் ஊதிப்போன உடம்போடு
புருசனின் இடுப்பு பிடித்து
புல்லட்டில் போய்க் கொண்டிருந்தாள்!
கூட வந்த காதலி கேட்டாள்..
அந்தம்மா ஏன் உன்னை தின்னுடறாப்ல
பார்த்துட்டு போறாங்க?

()()()()()()()()()(()()நேற்று கனவில் எனை நோக்கி கறுப்பு வெள்ளையில்
ஸ்லோமோசனில் ஒடிவந்த பழைய காதலி
அருகில் வருகையில் இன்னொருவனுடன் கை
கோர்த்து கொஞ்சிப்பேசி எனைக் காணாதவள்
போன்று போனாள் ஊர் நடப்பு பேசி! – ஆமாம்
ஓடி வருகையில் நைட்டியில் வந்தவள்
கை கோர்த்துப் போகையில் சுடிதாருக்கு
எப்போது மாறினாள்?

()()()()()()()()())()யாரை சந்திக்கவே கூடாதென
நினைத்திருந்தேனோ.. அவளையே
சந்திக்க வேண்டி ஆகி விட்டது!
எப்போதாவது வரும் சாவு இப்போது
வந்தால் என்ன என்று ஆசைப்பட்டேன்.
கிட்டே வந்தவள், நலமா? என
துக்கம் விசாரித்தாள். – நான்
ஆசைப்பட்டது நடந்தேறி விட்டது!
நின்னு பேசிட்டுதான் இருந்தாப்ல..
பொத்துனு சத்தம் கேட்டுச்சு..
விழுந்ததும் போயிடுச்சு!, யாரோ
யாருக்கோ சொன்னது தூரத்தே கேட்டது!

()()()()()()()(

Post Comment