திங்கள், ஜூலை 08, 2013

முகநூல் சினிமா விமர்சனம், 2 கவிதைகள்கீரிப்புள்ள என்றொரு பின்நவீன திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பின்நவீன படங்களை நாம் தமிழில் நாம் காண முடிவது அதிசயம் என்பதை விட அத்தி பூத்தது போல..என்பதே சரி. முதலில் இந்தப் படத்தைக் காண கங்குலிக்கு நன்றி சொல்வேன். முன்னால் இந்திய காப்டன் போல இளமையாய் இருந்த கதாநாயகன் அறிமுக காட்சியிலேயே 4 நண்பர்களோடு திருட்டுப்பை அடிக்கிறான். என்னது கங்குலி திருடனா! எனக்கே சங்கட்டமாய் போய் விட்டது! கங்குலிக்கு அமைந்த காதலி இடைவேளை வரை இளமையாக இருந்தார். பின்நவீன பாணியில் பிறகு வந்தவர் அவர்தானா என்ற சந்தேகம் வந்து விட்டது! இது நவீன பட்ங்களில் ஜகஜம்!


 அக்கா என்றொரு கேரக்டரை திருச்சி போலீஸ் கற்பழிக்கிறார். 4 பேரும் உலகப் படங்களில் கொலை செய்வதை பார்த்திருப்பார்கள் போல! தான் பார்த்த பட ரேஞ்சுக்கு அவரை கொல்கிறார்கள். இதை ஏன் சொல்வானேன்? இந்தப் படத்தில் யாருமே நல்லவர்களே அல்ல! எட்றா வண்டிய என்று என் புத்தக விளம்பரம் 4 முறை சொன்னார்கள். 2வது முறை வண்டியெ எட்றா என்று சொன்ன போது என்முகம் சோம்பி விட்டது. ஒரு பின் நவீன படத்தில் என் புத்தகத்தின் தலைப்பு! ஆஹா!


ஆனந்தபாபு டான்ஸ் போல கங்குலி தம்பி சண்டையின் போது பம்பரமாய்
 சுழன்றடித்தார். நாயகி கோயிலில் தொங்கிய தாலியை எடுத்து கங்குலி வசம் நீட்டி, செத்தா உம் பொண்டாட்டியா சாவணும்.. என்று பின்நவீன வசனம் பேசுகிறார். கங்குலியை தவிர யாரையும் எனக்கு தெரியாது படத்தை யார் எடுத்தது? யார் தயாரித்தது..என்று! நவீன படங்களில் எதுவும் முக்கியம் இல் லதானே! கதாநாயகியை ரயில்வே ஸ்டேசனில் பொலீசார் கழுத்தில் சுட்டு விடுகிறார்கள். செத்துப்போன காதலியோடு கங்குலி ரயிலில் எதிர்க்கே ஓடி  அடிபட்டுச் சாகிறார். நவீனத்தில் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம். நம்மையும் கூட!

()()()()()()()()


  
மன்னாரு என்றொரு படம் பார்க்க முதல் காரணம் சுவாதி. ராட்டினத்திலிருந்து நான் ரசிகன். மத்தபடி குதிரைக்கார அப்புக்குட்டி உலகநடிப்பு காட்டினாலும் ஐ டோண்ட் கேர். அவர் வீசி நாய் வறுக்கி திங்கலைன்னா எனக்கென்ன? இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு இப்போ தான் தெரியும். அதும் சுவாதி நடிச்ச படத்தை யார் இப்படி ஒளித்து வைத்துக் கொண்டது?

 அப்புக்குட்டியிலிருந்து அவங்கப்பன் வரை யாரும் நடிக்கவே இல்லை. எல்லாரு நடிப்பையும் ஒருத்தியே நடிச்சு அவார்டு வாங்கணுமுன்னா முடியுமா? மன்னாரை சின்ன வயசில இருந்து காதலிக்க ஒரு பொண்ணு! அது ரெண்டு வாட்டி சாவ கெணத்துக்கு போயி நின்னுக்குது. நாமலே போயி தள்ளி உட்டாத்தான் சாவும் போல! அகு அஜ்மல் ஒளிப்பதிவு நிசமாலுமே அற்புதம்! இயக்கம் ஜெய்சங்கராம்! சிவப்பு பட்டு சேலையில சுவாதிய காட்டினதுக்கு 10 இல்லீன்னா 15 கவிதை எழுதலாம்! கதாநாயகி நல்ல செலக்சன்..நல்ல கதயான்னு அவருக்கு டவுட்டு வராதது ஏன்னு தெரியல! சுவாதியின் அழகு அவரு மூளையையும் மறைச்சிடுச்சோ!

 நல்ல பிள்ளை! இன்னும் நாலஞ்சி படம் நடிச்சி நாலு காசி சம்பாதிக்குமோ என்னமோ! சீக்கிரம் ஊட்டுக்கு முடுக்கி உட்டுடுவாங்க போல! மன்னாரு ஒரே பேஜாரு! நாளைக்கி மறுபடியும் ராட்டினம் பார்க்கணும்..அதை விட சுவாதிய சுடிதார்ல பாக்கணும்! அடுத்த கதையில மறுக்காவும் எழுதுறாப்பிடி சுவாதியோட சூப்பர் படம் வரணும்..அதை நண்பர்களோட கொண்டாடணும்!

()()()()()()())


அந்த ஒற்றை இழப்பில்
அம்மாவின் முகத்தை
பத்து வருடங்களாக பொட்டில்லாமல்
காண்பதற்காக துக்கப்படுகிறேன் நான்!
அவளோ என் மீது துக்கமாய் இருக்கிறாள்!
எப்போது நான் வாழப்போகிறேன் என!

()()()()()()


மாகளியம்மன் மாரியம்மன் கோயல்
சாட்டியாச்சு! சந்தையில நல்ல கெராக்கி
செம்பிளி ஆட்டுக்கு! பூசை மணியடிக்குது
தின்னூரு இட்டுக்கோ! மூனானடித் தாளம்
ஆட்டத்துக்கு சுளுவு! பொங்கலும் பொங்கியாச்சு!
கெடா துலுக்குச்சா பாரு! சாமி மலை ஏறோணும்
வெறசா அடி மத்தாளத்த! பாட்டை ஏன் நிறுத்தினே மணி?
போடு தாட்டியரே! சண்டியரே!

()()()()()()()


வா.மு. கோமு எழுதிய “கள்ளி
by RV 
இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ பத்து தொடர்புள்ள சிறுகதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கோமு கள்ளி # 1, 2, 3… என்று இந்த சிறுகதைகளை வரிசைப்படுத்துகிறார். அவை காலவரிசைப்படித்தான் நடக்கின்றன. ஒரு கள்ளியில் வரும் பாத்திரங்கள் பிறவற்றிலும் வருகின்றன. ஒரே கிராமத்தில்தான் நடக்கின்றன். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் கண்ணி என்று ஒன்று இல்லை.
ஆனாலும் புத்தகம் படு சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு கள்ளியும் பாத்திரங்களின் சித்தரிப்புதான். அறுப்பு வேலை செய்பவர்களை கூலியில் ஏமாற்றப் பார்க்கும் முத்தாக் கவுண்டர், அவரிடம் பண்ணையம் பார்க்கும் மல்லி, ஊர் மேயும் மைனர்கள் சுரேந்திரன் மற்றும் பழனிச்சாமி, சுரேந்திரனின் ஓய்வு பெற்ற வாத்தியார் அப்பா சரக்கு அடித்துவிட்டு பண்ணும் அழும்பு, ஊரில் முடிச்சு போட்டுவிடும் வண்ணான் ராமசாமி, முத்தாக் கவுண்டரின் பெண்ணோடு ஓடிவிடும் மல்லியின் மகன் சண்முகம், படுக்கத் தயாராக இருக்கும் சிகாமணி, சுந்தரி, விஜயா என்று பல பெண்கள் என்று பாத்திரங்களின் சித்தரிப்புதான். அது பிரமாதமாக இருக்கிறது. தண்ணி அடிப்பதும், பெண்ணுக்கும் ஆணுக்கும் அலைவதும் நிறைய. பச்சை பச்சையாக பேசுகிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
கதையின் களம் ஒரு வாய்ப்பாடி என்ற ஒரு சின்ன கிராமம். திருப்பூர், சென்னிமலை அருகில். “கீழ்சாதியினரான மாதாரிகள் திருப்பூரில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். நாவிதர்கள் வீட்டுக்கு வராமல் சலூன் வைக்கிறார்கள். கவுண்டனை விட்டால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை இல்லை. மாறாக கவுண்டர்களுக்கு வேலைக்கு ஆள் தேடுவதில் கொஞ்சம் சிரமம். கவுண்டர்களின் பாலியல் மீறல்கள் நிறைய என்றாலும் மாதாரிகளுக்கும் கவுண்டர் பெண்களோடு உறவு இல்லாமல் இல்லை. பழைய ஜாதி சார்ந்த பொருளாதாரம் உடைய ஆரம்பித்திருப்பது நாவலின் பின்புலமாக இருக்கிறது.
கதையின் பலம் பலவீனம் இரண்டுமே அது சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதுதான். அருமையான சித்தரிப்பு என்றாலும் நாலைந்து கள்ளிக்குப் பிறகு கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. கூறியது கூறல்!
கோமு ஆர். சண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன்பரம்பரைக்காரர். எனக்கு இவர்களில் பெ. முருகன்தான் டாப் என்றாலும் கோமுவுக்கும் நிச்சயமாக இடம் உண்டு.
 ()()()()()()()))

Post Comment

கருத்துகள் இல்லை: