வெள்ளி, ஜூலை 26, 2013

முகநூல் பதிவுகள் 2-கோமண்ணா, நீங்க கவிதையெல்லாம் எழுதுறீங்க.. நம்ம நிர்மலாவுக்கு நான் ஒரு லெட்டர் 

குடுக்கணும்.. நீங்க சொல்லுங்க நான் எழுதிக்கிறேன்.

-
என்ன! நம்ம நிர்மலாவா?


-
சரிண்ணா, என் நிர்மலான்னே வச்சுக்கங்க! சொல்லுங்க! சாயந்திரங் குடுக்கணும்!

-
அட கவிதைங்றது மூடு சமாச்சாரம்டா! சரி எழுதிக்கோ! “என் அன்பான கடுகுமணிக்கு... ன் 

அன்பான சீரகமணி எழுதிக் கொள்ளும் கொத்துமல்லிக் கடிதம்!”

-
அண்ண்ணோவ்வ்வ்!!!!!

()()()()()()()()


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 

இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடிகை நமீதாஆல் தடைப்பட்டது !பிற்பகல் 2 மணி 

சுமாருக்கு களத்தினுள் இறங்கிய நமீதா நடு பிட்சில் குத்தாட்டம் போட்டதால் பிட் ச் 

சேதமடைந்து நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லாமல் போய் இட்டதாக நடுவர் அறிவித்தார்.


நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி முதுகு தண்டுவட அவதியாலும்,

மூக்குச் சளியாலும் அவதியுற்ற பாகிஸ்தானிய வீரர்கள் கைவிட்டது நினைவிருக்கலாம்!


மூன்றாவது போட்டியின் போது இந்திய வீரர்கள் முல்லை பெரியாறு பிரச்சனையின் 

அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள எத்தியோப்பியா பயணப்படுவதால் அது

ஏற்கனவே கைவிடப்பட்டது பழைய செய்தி!


அதற்குள் அக்காமாலா கம்பெனியாரின் பரிசுக் கோப்பையை யாரோ களவாடிப் போய் 

விட்டபடியால்......!!!!!!


()()()()()()()()(மேடம் இப்ப ஏர்பல் கார்டுதான் யூஸ் பண்ணிட்டிருக்கேன்

-
சொல்லுங்க சார்..

-
நா வந்து ஊர் அவுட்டர்ல உக்காந்துட்டு இருக்கேன்..கால்ல திடீர்னு டில்லிமுள்ளு 

குத்தீடுச்சு..பக்கத்துல யாராச்சிம் புடுங்கறவங்க இருந்தா அனுப்பி உடுங்க..கால்ல நல்லா ஏறி 

ஆழமா பூந்திடுச்சு மேடம்..ஆப்ரேசன் பண்ணுவாங்களா? கால எடுத்துருவாங்கள்ளா? நேம்பா 

புடுங்கிருவாங்களா?..ஒன்னுமே தெரியல மேடம்!


-
உங்க நெம்பர ஒருமுறை சொல்லுங்க சார்!

-
எனன மேடம் ஏர்பல் அவசர தேவைக்கி உதவுமுன்னு நீங்களே சொல்லிட்டு.. காலுல ரத்தம் 

ஊத்துதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கன்..நீங்க பாட்டுக்கு கண்டுக்காம என்னென்னமோ 

பேசிக்கிட்டு இருக்கீங்க..மேடம்! சொல்லுங்க மேடம் பக்கத்துல யாராச்சிம் புடுங்கிக இருந்தா

அனுப்பிச்சு உடுங்க மேடம்!


-
சாரி சார்..உங்க பிராப்ளம் புரியுது. பட் ஏர்பல் சேவையில..

-
ஏர்பல்னா இருந்துட்டு போவுது மேடம்..அதான் நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேனே 

மேடம்..ஏர்பல்ல பத்தி எல்லாமே தெரியும்.. கால்ல முள்ளுன்னு உக்காந்திருக்கன்..பயலுகதான்

சொன்னாங்க கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி கேள்றா.. அவங்க முள்ளு புடுங்கறவங்க 

பக்கத்துல இருந்தா நல்ல ஆளா அனுப்பி வெப்பாங்கடான்னு சொன்னாங்க.. என்னா மேடம் 

இப்படி அமைதியாவே இருக்கீங்க.. பேசுங்க மேடம்!!!!!

()()()()()(

சாந்தாமணிக்கு!
என்னைப்பற்றியே ஏன் எழுதுகிறாய்? என்கிறாய்!
எனக்கு தெரியாதா..வேறு எதாவது
எழுதினால் கோபிப்பாய்! – அந்த கடிவாளத்தை
பிடித்து ஓட்டத்தை நீ கட்டுப்படுத்தவே இல்லை!
காதல் உன் உன் நெஞ்சம் நிரம்பி வழிவதாய்
சந்திக்கும் சமயமெல்லாம் சந்தோசித்தாய்!
வாழ்ந்த நாட்களும், வாழும் நாட்களும்
எனக்கோ கனவாய்! – புகைப்படலத்தில்
ஒற்றை நட்சத்திரமாய் தோன்றி மறைந்த
விட்டில் நீ! – சிலவற்றை மனதில் பூட்டி
வைப்பது கூட சுகம் தான்! உன்னையும்!
ஒய்யார சஞ்சரிப்பில் இடையூருக்கென்றே
அவ்வப்போது வந்து போகிறாய்!- நடந்து
கொண்டிருக்கும் மர்ம நாடகத்தில் உனது காட்சி
எங்கு வருகிறதோ? – உன்னைப் பற்றிய
ஞாபக ஓசைகளை கடத்திவந்து தாள் நிரப்புவது
எனது வேசங்களை அழுக்கு வேட்டியாய்
அவிழ்த்துப் போட!

யாரும் யாரையும் கண்டு கொண்டதாய்
காட்டிக் கொள்ளவேயில்லை..இருந்தும்
புரோகிதர் மந்திரம் உச்சரிக்கத்தான் செய்தார்.
தாலி கட்டிக் கொண்டு மணமேடை சுற்றினாய்!
விட்டேற்றியாய் நின்று களைத்து தெருவில் இறங்கினேன்!
இனி வாழ்க்கை எனை அழைத்துப் போகும்!
மனிதத்தை தேட வேண்டியது பாக்கி!!!!!!

()()()()()()()()()()()

அறிந்த சொந்தத்தில் கெடா விருந்து! ஆடி மாசம் என்றாலே சுத்தியும் விருந்துகள் துவங்கி 

விடும். அப்படி துவங்கின முதல் விருந்தில் அடியேன் கணக்கான கணக்காய் எண்ட்ரி 

போட்டேன். அப்புறம் எப்பிடி போகுது போன்ற குசல விசாரிப்புகள் முடிந்து சேரில் 

அமைதியானேன். பந்தி உள்ளே ஓடிக் கொண்டிருந்தது! மசாலா வாசனை ஊரை தூக்கியது!

ஊரில் இருந்த டாமி, மணி,ராஜா வகையறாக்கள் வேறு குப்பை மேட்டில் விழும்

இலைகளுக்காக பயங்கர சண்டையில்!

ஏழு வயது பாப்பா ஒன்று யார் கை நீட்டினாலும் ஓடிப்போய் மடி ஏறிநறுக்கென கடி போட்டு

சிரித்து அடுத்த ஆள் தேடி ஓடியது! கடிபட்ட ஆள் பல் பதிவுகளை காட்டினார்! பயங்கர கடி

இன்னொரு ஆள் சப்தம் ஆவ் என கேட்டது! பாப்பாவின் சித்தப்பா நடமாட்டம் தெரியவேஏன்

இப்படி?” என்றேன். அதுவா கோமு, பாப்பா கறியே திங்காது..எப்ப வீட்டுல கறி செஞ்சாலும்

அரை கட்டிங் ஊத்தி உட்டம்னா கால்கிலோ கறி திங்கிம்! ஆனா போதையில யரைக்கண்டாலும் 

கடிச்சு விளையாடும்


பாப்பா கறி சாப்டாச்சா?”


தின்னுபோட்டுத் தான் கடிச்சுட்டு விளயாடுது..எலை எடுத்தாச்சு கிளம்பு சாப்பிட!” இன்னொரு

சத்தம் தெற்கே கேட்டது, “ஆஆஆவ்..யோ

()()()()()()()()


-ஒரு தேளா நான் மாறிட்டு இருக்கன் கோமு..பாரு என் கைகள் ரெண்டும் தேளு கொடுக்குக 

மாதிரி கவ்வுறதுக்கு அலையுதுக! என் கால்களைப் பாரு வயித்து சைடுல, நெஞ்சாங்கூட்டு 

சைடுல டபுள் சைடும் , ஆனாப் பாரு பொறவுக்கு கொடுக்கு மட்டும் என் டிக்கீல இருந்து 

ஸ்டார்ட் ஆகுது..இல்லீன்னா நான் அழகா இருப்பேன் கோமு..


-
ஆமாங்க சுந்தரேசன், நீங்க தேளே தான். எப்ப இருந்து இப்படி?


-
ஒரு பத்து பாஞ்சி நாளாத்தான் கோமு, ஒரு அரை கட்டிங் எனக்கு சொல்லு.. குடிக்கணும்


-
தேளுகளுக்கு கட்டிங் ஆகாது..உடனே செத்துப் போயிடுமே! பழி என் தலையில வுழுந்துடும்!


-
சும்மா பின்நவீன பாணியில கட்டிங் கேட்டன் கோமு நானு!


-
அதுக்கு ஏன் உங்க கொடுக்கால என்னை கவ்வ வர்றீங்க..உங்க டிக்கில இருந்து மேல வர்ற 

கொடுக்கு என் மண்டையா குறி பாக்குதே..


-
வெளயாடாதே கோமு, கட்டிங் சொல்லு!


-
யாரு வெளயாண்டது? அப்பனுக்கே ஒட்டு கோமணமாம்..மகனுக்கு பட்டு கோமணங் கேக்குதாம்!!!!!

()()()()()()(

  

செருப்பு கடிக்கிற பழக்கம் போவனாங்குது! என் எஜமான் சிக்கன் போடறான், எலும்பு 

போடறான்! இருந்தும் செருப்பு மேல எனக்கு ஆசை! என் எஜமானை பாக்க வெளியூர்ல இருந்து

வந்துனே இருக்காங்க! அவிங்க செருப்பு எனக்கு புல் டேஸ்ட்டு! செருப்பை கடிப்பியான்னு 

எஜமான தடி ஓங்குறான்! அடிக்கிறதில்லே! அவனுக்கு தெரியாம அவஞ்செருப்பை 

போட்டுத்தள்ளிட்டேன்! வாயி மெல செருப்பால அடிச்சுடுவானோன்னு பயம்! ஏன்னா எனக்கு

வாயில செருப்படி பட்டா பிடிக்காது!! என் பெயர் சிட்டி! எஜமானோட வாலு பையன் வச்சது!
நானே தானுங் சிட்டி! எஜமான் பழைய போட்டா போட்டுட்டாப்ல! இப்ப நான் ஜில்லா கேப்மாறி!

ஒரு பய ஊட்டு பக்கம் வரப்பிடாது! எந் தும்பம் தாங்காம இப்ப டொய்ன்ல கட்டி வச்சி 

புடிக்கிறாப்ல! சாயந்திரம் ஒரு கூத்து கேளுங்க!

எங்கூட்டுக்கு ரெண்டு ஊடு தள்ளி கண்மணி இருக்கா! அவங்காயா பேரு ரேவதி! அப்பிடியே 

புள்ளையோட ரவுண்டு வந்தப்ப ரேவதி தாயி ஒரு பாச முத்தம் குடுத்தா! பிள்ளை என்னை 

விடஒரு வாரம் மூத்தவளாம்! சரியான பிகரு! இப்பவே டோக்கன் போட்டுட்டேன்! எஜமான் 

வந்ததால ஊட்டுக்கு ஓடியாந்துட்டேன்! எனக்கு ஒரே டவுட்டு தான்! என் எஜமான் நல்லவரா

கெட்டவரா?  

()()()()()()()()

Post Comment

கருத்துகள் இல்லை: