திங்கள், ஜூலை 29, 2013

முகநூல் குறிப்புகள் 3


-தம்பி போனு வச்சிருக்கீல்ல..இந்த பேப்பர்ல இருக்கிற நெம்பருக்கு 

ஒருபோனுபோடு சாமி..ஒரே நிமிசம் முக்கியமானது பேசிட்டு குடுத்துடறேன்..நீ 

சாமி சாமியா இருப்பே! தம்பி நல்ல தம்பி..குடு..குடு.. பெல்லு அடிக்குதா? நாறப்பய

ஊட்டுல இருக்கானோ தெறிச்சு போயிட்டானோ!


-
இந்தாங்கம்மா, எடுத்துட்டாங்க!


-
சாமி நீயா பேசுறே? உங்கொப்பனெங்க போனான்? அங்கதான் இருக்கானா? டிவி 

என்ன டிவி அவுனுக்கு? குடு! யோவ்! என்னய்யா ஆள் இல்லீன்னு கூத்து 

கட்டிட்டு இருக்கியா? நானு வர ரெண்டு நாளு ஆவும்! புள்ளைக்கி மருகாதியா 

காரம் கமியா போட்டு சோத்தை ஆக்கி தாட்டி உடு ஸ்கூலுக்கு! பிள்ளைய தனியா 

தூங்க வச்சிட்டு சாமத்துல பக்கத்தூடு முட்டுனீன்னு வச்சுக்க.. வந்தன்னா 

இல்லாம பண்ணிப்பிடுவேன். யாரு போனா? தம்பிது! எந்த தம்பியா? வாயி 

அழுகிப் போயிடும்டா! நானென்ன உன்னமாதிரி கேப்மாறின்னு நெனச்சியா

என்னெ சந்தேவப்பட்டீன்னா பச்சவாழை மரம் பத்தீட்டு எரியும்டா! டீவில 

வரிசையா என்னையும் பாரு என் அழகையும் பாருன்னு நடந்துட்டு 

இருக்கிறவளுகளையா பாத்துட்டிருக்கே? பையனையுங் கெடுத்துப் போடுவீடா 

நீயி!..போச்சு கட்டாயிப் போச்சு! சாமி அவன் கட் பண்ணீட்டான்னு நெனைக்கேன்.. 

இன்னொருவாட்டி அடி தம்பி! மவராசனா இருப்பே!!!!()()()()()()(


-ஹலோ, இன்னிக்கி ரிங் ஆனதீம் எடுத்துட்டீங்க போல! வழக்கமா ரெண்டு மூனு விசுக்கா கூப்பிட்டாத்தான் எடுப்பீங்க?

-
எடுக்கலீன்னாலும் குத்தஞ் சொல்றே, எடுத்தாலும் குத்தஞ் சொல்றே! ஏண்டி நீ இப்புடி?

-
சரி விடுங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

-
சேவிங் பண்ணிட்டு இருந்தண்டி!

-
நான்னதும் உடனே எடுத்துட்டீங்க? அவ்ளோ ஆசையா எம்மேல?

-
தாவாங்கட்டையில பிளேடு கீறீடக்கூடாதில்லியா! அதான் ரேசரை வச்சுட்டு பேசுறேன்.. ஹலோ..கட் பண்ணிட்டா.. கொய்யாலே.. நேரங்காலமில்லாம கொஞ்சோனுமின்னா யாருனால முடியும்??????

Top of Form
Bottom of Form


சென்னையிலிருந்து நண்பன் சுந்தர் 8 மணி போல போன் செய்தான்! ரொம்ப சந்தோசத்தில் இருப்பதாக கூறினான்! சரி சந்தோசம் தானே வாழ்க்கை! மேட்டருக்கு வாடி, என்றேன்!

-
என் ஆபீஸ்ல சுந்தரி பத்தி சொன்னன்ல பாஸ், அவ இன்னிக்கி முகநூல்ல நான் போடற என் போட்டாக்கள் அத்தனையும் அழகுன்னு சொல்லிட்டா! போக சினிமாக்கு முயற்சி பண்ணு, போட்ட்டா செசன்ல நீ ஜெயிச்சிடுவே! எங்கம்மாட்ட கூட உன்னை முக நூல்ல காட்டினேன்.. பையன் அழகா இருக்காண்டின்னு சொன்னாங்க! அப்படின்னா பாஸ்!

-
நீ காது வரை சிரிப்பாணி காட்டிட்டு வந்துட்டியா? அட கெடுத்தியே கதையை! பதிலுக்கு நீயும் சென்னையிலயே பூராம் அட்டு பிகருக! நீ தான் அழகு! உன் போட்டோவ என் அம்மா கிட்ட, பாரும்மான்னு சொன்னேன்.. என் மருமவ என்ன விட அழகுடான்னு எங்கம்மா சொல்லுச்சுன்னு ஓட்டலியா?

-
உங்கள மாதிரி டைமிங் சென்ஸ் என்கிட்ட இல்ல பாஸ்.. நாளைக்கி சொல்லவா?

-
தீபாவளி அன்னிக்கி தான் பட்டாஸ் போடணும்டி!!!

()()()()()(


-டேய் கண்ணாளா! நான் தான்..வீட்டை விட்டு வெளிய வந்து பேசுடா பேமாணி! இன்னிக்கி நைட் நாம ஓடிப்போறோம். காத்து போறது தெரியாம தூங்கிடாதடா! 12 மணி! பஸ் ஸ்டாப்பு! 

-ஏண்டி இத்தன தடக்கா சொல்றே? ஆனா உங்கொப்பன நெனச்சா தன் பயமா இருக்குடி! மிதிப்பானே! ஒரு வருச காதல்ல ஒம்போதுவாட்டி என்னை அட்டாக் பண்ணிட்டான்.


-இனி முடியாதில்ல! பயந்துட்டு படுத்துக்காதடா பாவி! அப்புறம் யாரு கூட வர்றே? சுந்தரேசன் கூடவா? அவனுக்கு இருக்குற தைரியங்கூட உனக்கில்லடா..அவனையே கூட்டிட்டு ஓடப்போறேன் நான்! நீ வடை போச்சேன்னு உக்காந்துக்கப் போறேடா!


-அப்ப அவனை கூட்டிட்டு ஓடுடி கழுதை! உங்கொப்பன் மிதிக்கெல்லாம் அவந்தான் தாங்குவான்! ஆனா ஒன்னு நீ சொல்றதை ஒரு நாளும் கேக்க மாட்டான்!

-டேய் கண்ணாளா! நான் தான்..வீட்டை விட்டு வெளிய வந்து பேசுடா பேமாணி! இன்னிக்கி நைட் நாம ஓடிப்போறோம். காத்து போறது தெரியாம தூங்கிடாதடா! 12 மணி! பஸ் ஸ்டாப்பு! 

-ஏண்டி இத்தன தடக்கா சொல்றே? ஆனா உங்கொப்பன நெனச்சா தன் பயமா இருக்குடி! மிதிப்பானே! ஒரு வருச காதல்ல ஒம்போதுவாட்டி என்னை அட்டாக் பண்ணிட்டான்.


-இனி முடியாதில்ல! பயந்துட்டு படுத்துக்காதடா பாவி! அப்புறம் யாரு கூட வர்றே? சுந்தரேசன் கூடவா? அவனுக்கு இருக்குற தைரியங்கூட உனக்கில்லடா..அவனையே கூட்டிட்டு ஓடப்போறேன் நான்! நீ வடை போச்சேன்னு உக்காந்துக்கப் போறேடா!


-அப்ப அவனை கூட்டிட்டு ஓடுடி கழுதை! உங்கொப்பன் மிதிக்கெல்லாம் அவந்தான் தாங்குவான்! ஆனா ஒன்னு நீ சொல்றதை ஒரு நாளும் கேக்க மாட்டான்!

()()()()()()


-மத்தியானத்துல இருந்து பாத்துட்டு இருக்கீங்க? பழசை பாக்கறீங்ளா? சித்த உடுங்க படம் பாக்கலாம்!

-
இன்னம் 10 ஓவர்தாண்டி இருக்குது.. இந்தியா ஜெயிச்சுடும்! லைவ்னு போட்டிருக்கு பாரு!

-
இங்க இருட்டு.. வெளையாடற எடத்துல வெளிச்சமா? யாருக்கு காது குத்துறீங்க? இது எந்தூர்லங்க ஆடறாங்க?

-
ஜிம்பாவேயில!

-
அது எங்க இருக்குது?

-
இதென்ன சென்னிமலைக்கி அந்த பக்கம் தான்.. சி4 பஸ்ல போனா அங்கிருந்து அஞ்சு ரூவா டிக்கிட்டு! நாளானிக்கி நான் போறேன் நேர்லயே பாக்க!

-
இங்க பாக்கறது பத்தாதுன்னு இனி அங்க வேற போறாங்ளாம்!

()()()()()()()()

நா அதிகமா டிவி பாக்கிறதில்லீங் சாமி! எப்பாச்சிம் எட்டிப் பாத்ததும் 

ஓடியாந்துடுவேன்! டிவி புரோகிராம்க என்னிக்குமே ரொம்ம்ம்ப மிரட்டலா தான் 

இருக்கும்! ஊர்ல தின்னீரு மந்திரிக்கிறவரு செத்துப்போயி வருசம் பலதாயிடிச்சுங்

சாமி!

இந்த வாரம் கூட போயிருக்க மாட்டேன். ஆனா இந்த ஏர்செல்காரன் பிரச்சனை 

பெருசா போனதால அவங்கூட மல்லுகட்டுறத விட டிவி பெட்டர்னு போயி 

சாஞ்சுட்டேன்! போட்ட முதல் சேனல்ல சூர்யா பயலும் வருங்கால எதிர்கட்சி 

தலைவரும் அடிக்கடி மோதிட்டே இருந்தாங்க! வேற சேனலுக்கு போனா 

தலைவா படம் பத்தி சத்தியராசு தடுமாறி தூக்கி நிறுத்திட்டு இருந்தாப்ல

உலவத்துலயே சிறந்த படமுன்னு இவரு பேச, வருங்கால முதல்வரு 

புன்னகையோட எடம் மாறி எடம் மாறி உக்காந்து சிரம பட்டுட்டு இருந்தாப்ல

(கூச்சமாம்) 


சுந்தரராமசாமி ஒரு விசுக்கா டிவில விஜய் தம்பிய பாத்துட்டு 

சொன்னாப்லையாமா..நல்லா வருவான் இந்தப் பயல்னு! பெரியவரு வாக்கு 

பலிச்சுட்டுது! சரி நானும் எம் பங்குக்கு சொல்லிடறேன்.. அரசியல்ல ந்ல்லா வந்து 

தமிழ்நாட்டு மக்களை காப்பாத்துங்க எஜமான்! உங்களை ஒரு விசுக்காவது இந்த 

சேனல்காரங்க காட்டாட்டி பை நம்பாது! மாக்கள் ஒரு விசுக்கா உங்களை பொட்டி

திரையில பாக்காட்டி தூக்கம் வராது! விஜயகாந்த் அவரு ரேஞ்சுக்கு பிரிச்சு 

மேஞ்சுட்டாரு! இனி நீங்க வந்து நாட்டை காப்பாத்துங் எஜமான்! நாங்க 

யாரையாச்சிம் அண்டித்தான் இதுவரைக்கும் பொழச்சிட்டே வந்திருக்கோம்

யாரையாச்சிம் தொடச்சி பொழைக்காட்டி எங்களுக்கும் வாழ்க்கை ஓடாது!


ரசினி மகராஜா மாரி நாளைக்கி வாறேன், நாளானைக்கி வாறேன்னு 

ஏமாத்திப்புடாதீங்க எஜமான்!!!

Post Comment

கருத்துகள் இல்லை: