புதன், ஜூலை 31, 2013

முகநூல் குறிப்புகள் 4


சில புத்தகங்களை படிப்பதற்கு நாம் தியான மனநிலைக்கு செல்ல வேண்டும். சில புத்தகங்களை படிக்க நாம் கொண்டாட்டமான மனநிலையில் இருக்க வேண்டும். ஓஷோ புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும் முன் நம் மனநிலை அதற்கு தயாராக வேண்டும். அப்படியான மனநிலையில்தான் மார்கேஸ் புத்தகத்தினுள் நுழைந்திருக்கிறேன். 80 பக்கங்கள் ஓடியிருக்கிறது! நான் இடங்களையும் காலங்களையும் மனதில் இருத்திக்கொண்டு வாசிப்பவனல்ல! என் தேவைகள் எழுத்தில் சொல்லப்படும் புது முறைகள். பல காலங்கள் ஆயிற்று நான் அடிக்கோடுகள் இட்டு படித்து! கையில் ஜிகினா பேனாவை வைத்துக் கொண்டு துவங்கி விட்டேன்.


 பல காலம் முன்பு கல்குதிரை மார்கேஸ் சிறப்பிதழில் இதன் சைடு ரீலை வாசித்து பரவசத்தில் இருந்தேன். பின் புது எழுத்து இதழில் கொஞ்சூண்டு படிக்க என் மனது இடம்தரவில்லை! வாழும் காலத்தில் ஆங்கில அறிவு இல்லாத நான் தமிழில் படிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்னையறியாமலேயே! புத்தகத்தை வாங்கி பரிசளித்த ஐயா லட்சுமிபதிக்கு என் நன்றிகள்! பின் என்னிடம் ஏது இப்போது 350!!!!!!!

()()()()()()()

தனிமையின் 100 ஆண்டுகள்-221ம் பக்கத்திற்கு வந்து விட்டேன். மாய வீட்டிற்குள்ளும், பனிக்கட்டிகளாலான வீடுகள் நிறைந்த ஒரு நகரத்தை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா கனவு காண்பதைப் போல நாவல் என்னை கூட்டிப் போகும் பிரமிப்பின் கனவில் தவழ்கிறேன். இது வரையிலான வாசிப்பில் தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் நடந்த வேலைத்தனங்கள் புரிய வருகிறது! 20 வருட காலத்திற்கும் முன்பே தமிழில் அவர் பணி தமிழுக்கு தேவையான ஒன்று தான். ஆரம்ப கால வாசிப்பில் அதுவும் என்னை ஆச்சரியப்படுத்திய நாவல்களில் ஒன்று தான். அவரது வார்ஸாவில் ஒரு கடவுள் (அதுவும் நண்பர் அளித்தது தான்) என்னால் 10 பக்கம் கூட படிக்க முடியவில்லை! கால மாற்றம் ஒரு படைப்பாளியை எந்த விதத்தில் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் அந்த வெளிநாடு பயணப்பட்ட கதை!

  (அந்த திருமண நிச்சயம் முடிவில்லாத உறவாக மாறியது. அந்த ஓய்ந்த காதல் யாரும் கவலைப்படாத ஒன்றாகவும் ஆனது.பழைய நாட்களில் முத்தமிட்டுக் கொள்வதற்காக விளக்குகள் அணைத்த காதலர்கள் மரணத்தின் தன்னிச்சைக்கு எறியப்பட்டவர்களானார்கள். தன்னுடைய மனவுறுதியை முழுவதும் இழந்து, முற்றிலும் சிதைந்து போன ரெபேக்கா மறுபடியும் மண்ணைத் தின்னத் தொடங்கினாள்)

()()()()()()()()

தமிழில் இலக்கியத்தரமாக சிறுகதை எழுத ஆசைப்படுபவர்கள், எழுதி இலக்கிய சிற்றேடுகளில் வெளிவர ஆசைப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் படிப்பு. யாரை தேர்ந்தெடுத்து படிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். முதலில் அசோகமித்திரன் சிறுகதைகளை வாசித்திருக்க வேண்டும். அவரது சமீபத்திய கதைகளை அல்ல! அவர் முதலில் தொகுப்பு போட அவர் காசையே செலவு செய்து விட்ட சிறுகதை தொகுப்புகள்! அடுத்ததாக அஸ்வகோஷ் (ராஜேந்திரசோழன்) சிறுகதைகள்! தமிழினி இவரது மொத்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விற்று விட்டது! யாரிடமேனும் பிரதி இருந்தால் எனக்கு வேண்டும். எப்போது படித்தாலும் சலிக்காத கதைகள் அவைகள். தமிழில் வேறு யாரையும் நான் சிபாரிசு செய்ய முடிவுகளோடு இல்லை.

  புதுமைப்பித்தன் எழுத்துகள் படித்தேன் என்றாலும் அவைகள் தனி மனிதனின் எழுத்துக்கு தூண்டுகோளாய் இல்லை. அவரை சிபாரிசு செய்ய நான் தயாரில்லை! மொளனி, நகுலன் என்றெல்லாம் சொல்வார்கள் நம் ஆட்கள்! அவைகள் குப்பைகள்! பைத்தியக் குழியில் தள்ளிவிட தயாராய் இருப்பவைகள்! நண்பர்களே! இந்தப் பார்வை கமர்சியல் எழுத்து எழுத கதைக்குதவாது! அது தனி ரூட்!

()()()()()()()()

-சைனா செட்டுங்ளா? உங்குளுது..

-ஆமாங்கோ!

-இப்ப என்ன பண்றீங்கன்னா..அந்த சிம்மு இருக்குல்ல..அதை வேற ஒரு மொபைல்..நோக்கியா இருக்குங்கள்ல அதுல மாத்திப் பாருங்க.. மாத்திபாத்துட்டு 551 க்கு கால் பண்னுங்க..லைன் கணக்ட் ஆகுதன்னு பாருங்க.. அபிடியுங் கணக்ட் ஆகலன்னா..எங்குளுக்கே திரும்ப கால் பண்ணுங்க!

-அப்பிடி பண்ணிக்கலாங்க..பேலன்சு டெய்லீ மூனு ரூவா எடுத்துக்கறாங்க. எதாச்சிம் சர்வீசுல இருக்குதான்னு கொஞ்சம் பாத்து சொல்றீங்ளா மேடம்.

-தினமெல்லாம் 3 ரூவா எடுக்கறதில்லீங்க

-மேடம் வந்து நா ஆப்பர்லதா பேலன்ஸ்சு போடுவனுங்க, 150, 100ன்னு! போனவாரம் ஞாயித்துகிழமை அன்னிக்கி 30 ரூவா எடுத்துட்டங்க மேடம். திங்கக் கெழமையன்னிக்கி 84 ரூவா எடுத்துட்டாங்க மேடம்..அப்புறம் மறுபடி ஆப்பர்ல போடாம பத்து ரூவா கார்டு போட்டா அதுலயும் 3 ரூவாய எடுத்துக்கறாங்க மேடம்..

-உங்க டீட்டெய்ல் செக் பண்ணி பாத்ததுல 10ம் தேதி 30 ரூவா எடுத்திருக்காங்க, அது வந்து டைலர் டியூனுக்காக ..பாடலுக்குன்னு!

-84 ரூவா என்ன மயித்துக்கு மேடம் எடுத்தீங்க..யாரு அப்பனூட்டு காசுன்னு நெனச்சீங்க? பொச்ச ரோட்டுல ஒரச்சு சம்பாதிச்ச காசுங்க மேடம் அது. எங்காசை பூராவும் நீங்களே திங்க்றீங்க! அதுக்கு எடுத்தேன் இதுக்கு எடுத்தேன்னு நாயம் பேசத்தெரியுதுல்லோ!
-உங்களோட பிராப்ளம் புரியுதுங்கோ..

-உண்டான ரீசன சொல்லோனும்..656க்குபோட்டுதான் நா வந்து ஏக்டிவேசன் பண்னேன்..உங்க கேனக்கூதிகள கூப்புட்டு நா ஏக்டிவேசன் பண்டக் கெடயாது! ஏர்பல் வாடிக்கையாளரா 15 வருசமா இருக்கறன்..எந்த சவீசும் வேண்டாம் எல்லாஅங் கட் பண்ணுங்களேன்னு உங்க பொம்பளையருகிட்ட பலதவ சொல்லிட்டேன்..எவனுங் கட் பண்றதில்ல, எவளுங் கட் பண்றதில்ல!

-ரெஸ்பான்ஸ் பண்ணி பேசுங்க.. சரிங்ளா?

-ரெஸ்பான்சு பண்டி பேசுற அளவுக்கு இல்ல! மேலதிகாரிக்கி இணைக்கிறேன்னு சொல்லி அன்னிக்கி ஒருத்தரு இணைச்சாரு. சூப்பருவைசரு பேசறான்.. அவனும் இதையே தான் பேசுறான்.. 84 ரூவா சும்மா உக்காந்துட்டு எடுத்துட்டீங்க நீங்க..போட்டுட முடியாதுங்றீங்க.. எங்கூட்டுக்கு வந்து கழிச்சுட்டு போயிடுங்க மேடம்!

()()()()()()()()

கிரிக்கெட் விளையாட்டில் ஆறு, நான்கு என விளாசுபவர்களை ரசிகர்களுக்கு எப்போதுமே பிடிக்கும்! அவர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும். கெய்ல், அப்ரிடி, மெக்கலம், இவர்கள் விளையாடினால் டிவியை விட்டு நகர மாட்டேன். ஆனால் நான் பார்க்கையில் மட்டும் சொதப்பிவிட்டு நடையை கட்டிவிடுவார்கள். முகம் சோர்ந்துவிடும் எனக்கு! நான் பார்க்காத ஆட்டத்திலெல்லம் பிளாஞ்சித் தள்ளியிருப்பார்கள். ஹைலைட்ஸ் அவ்வளவு சுவாரஸ்யத்தை தருவதில்லை. ரப்பர் பந்தை சாத்தினால் பறப்பது போல் தெரிகிறது!

 சேவாக்கை சேவை செய்தது போதுமென தாட்டி விட்டபிறகு தவானை போச்சாது என்று ஏற்றுக்கொண்டோம். ஒரு குழந்தை ஜடேஜாவை தாட்டிவிட்டு இன்னொரு ஜடேஜாவுக்காக பலவருடங்கள் காத்திருந்தோம். கம்பீரின் சேவையை டோனி எதிர்பார்த்து ஏமார்ந்தார். ஆளில்லாக் குறையை அஸ்வின் நிறப்புகிறார். கேப்டன் என்றால் யார்? அவன் வேலை என்ன என்பதை பலமுறை நமக்கு காட்டிவிட்டார் டோனி!

 முக்கியமான ஆட்கள் இல்லாமல் ஜிம்பாவே தொடரில் பந்து வீசும் பசங்களை பார்த்தால் சோறு உங்கிறார்களா? என்ற பரிதாபமே மிஞ்சுகிறது! மனோக் திவாரியை மட்டையுடன் களத்தில் பார்த்தால் ஐயோடா! என்றிருக்கிறது! ஆஸ்திரேலியாவில் ஒரு பந்த்துக்கு தாங்குவாரா?

 எப்பிடியோ கிரிக்கெட் பத்தி பேசிட்டேன்!

()()()()()()()()()()()

Post Comment

கருத்துகள் இல்லை: