புதன், ஜூலை 10, 2013

கவிதைகள்


கடவுளை வேர் விடச் செய்தல்===========

கடவுளை காப்பாற்ற வேண்டுமெனவும்
சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும்
அந்த பைத்தியாரப் பயல் ஊருக்குள் வீதி
விடாமல் கத்திக் கொண்டே சுற்றினான்!
கடைசியாய் உள்ளூர் பூசாரி வீட்டுக்கு முன்
அவன் கோவில் சாவியை கேட்டபடி நின்றான்!
இவன் தான் கடவுளை விடுவிக்க வந்த
தீர்க்கதரிசியோ, என்று ஒரு கணம் நான்
ஸ்தம்பித்துப் போனேன்! சமயம் பார்த்து
தீர்க்கதரிசியின் நீண்ட தாடிக்குள்ளிருந்து
பெயர் தெரியாப் பறவை ஒன்று முட்டை
இட்டு விட்டு பறந்து சென்றது!
வருடக் கணக்காய் அவர் சாவியை
கேட்டபடி அவ்விடத்தில் வேர் விட்டிருந்தார்!!!


()()()()()()()()()()()


நாய்ப்பீயைக் கரைத்து
நான்கு பேர் அழுத்திப் பிடித்து
அவள் வாய் பிளந்து
ஊற்றிக் கொண்டிருந்தார்கள்
சாவதற்கு அரைத்துக் குடித்து
விட்டாள் என! –இப்படித்தான்
இருக்கிறது உன்னுடனான என் காதல்!

()()()()()

மாருதி வேனில் அந்த இளம் காதலர்கள்
காதலை கொச்சைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்!
நாயிற்குப் பிறந்தவர்கள் நம்மை
அழவைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்!
ஓரக்காட்சியில் மேட்டில் கார்களும்
லாரிகளும் ஐவே பெடரோல் வண்டியும்
சென்றபடி இருந்தன! 35 நிமிடம் ஓடிய
அந்தக் காட்சியை செல்போனில் பார்த்து
ஊளையிட்டேன் நான்!

()()()()()()()

அவளிடம் ஏமாற்றப்பட்ட விரக்தி
மனநிலையில் வீடு வந்ததும் பல
வருடங்களுக்குப் பிற்பாடு மனைவியை
அழைத்து 15 முத்தம் கொடுத்தேன்!!
எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதென
என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்!!


எல்லாவற்றையும் நீ அப்படியே
போட்டுவிட்டு உனக்கான தேவைகளை
மட்டும் தூக்கிக் கொண்டு நீ ஏற்றுக்கொண்ட
புது வாழ்க்கை நோக்கி நடுநிசியில்
வாழப் போவதாய் நம்பி ஓடிப்போனாய்..
எனை அநாதரவாக விட்டு விட்டு!
அந்த இரவு நேரத்தைப் பற்றி நான்
யோசிக்கும் நாளில் நள்ளிரவில்
பெய்ய வேண்டிய மழை சற்றுப் பிந்தி
விடிகாலையில் பெய்யத்துவங்கிற்று!
நீ இல்லாத உன் தலையணையை
எரித்து குளிர்காய ஆயத்தமாகிறேன்!


இந்த எழுத்தில் குப்பை கொட்ட
முடியாத காலத்தில் நீ
துப்பிச் சென்ற எச்சிலில்
தூக்கிட்டுச் சாவேன் நான்!
நான் இறந்ததும் சீக்கிரமாய்
புதைத்து விடுங்கள் அல்லது
எரித்து விடுங்கள்! – ஏனெனில்
இந்த உலகை வேடிக்கை பார்த்தபடி
பிச்சைக்காரத்தனமாய் வாழ்வது
பழகிவிட்டது!!!

======================

Post Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வீடு சுரேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்டது சரி...! (http://www.artveedu.com/2013/07/blog-post.html)